"நிறம்" மாறும் "தாமரைகள்".. எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி தந்த மெசேஜ்.. களமாட தயாராகும் பாஜக
எடப்பாடி பழனிசாமியை தவிர்த்துவிட்டு, பாஜக தனித்து களமிறங்க பிளான் செய்கிறதா
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் கையை இறுக்கமாக பற்றி, ஏர்போர்ட்டில், பிரதமர் மோடி புன்னகைக்கும் போட்டோ ஒன்று நேற்றைய தினம் வெளியாகியிருந்த நிலையில், பாஜக - அதிமுகவில் அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
5 நாள் பிளானுடன் டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்களை சந்திக்க முடியாமல் திரும்பினார்.
எனினும் முன்கூட்டியே டெல்லிக்கு சென்று, அமித்ஷாவையும், பிரதமரையும் சந்திக்க நினைத்ததற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை..
ஒற்றை தலைமை விவகாரத்தை நேரடியாகவே விளக்கி சொல்லி, மேலிடத்தையே தன்பக்கம் சம்மதிக்க வைக்க முயற்சி செய்யவே எடப்பாடி கணக்கு போட்டாராம்..
அதுமட்டுமல்ல, கேபி முனுசாமி, மஃபா பாண்டியராஜன் போன்ற ஓபிஎஸ் ஆதரவாளர்களையே தன்பக்கம் கொண்டுவந்ததுபோல், மோடி, அமித்ஷாவின் ஆசியை பெற்றுவிட்டால், மேலும் சிலரையும் தன் பக்கம் இழுக்கலாம் என்றும் எடப்பாடி கணக்கு போட்டுள்ளார்.. இன்னொரு காரணமும் உண்டு.. மோடி, அமித்ஷாவின் ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், ரெய்டு, வழக்குகளில் இருந்தும் கெடுபிடிகள் நீங்கும் என்றும் நினைத்தார்..

கணக்கு தவறு
ஆனால் எல்லா கணக்குமே சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.. ஏமாற்றத்துடன்தான் எடப்பாடி சென்னை திரும்பினார்.. வந்ததுமே அவருக்கு ஷாக் காத்திருந்தது.. சிபிஐ குட்காவை கையில் எடுத்ததுமே இன்னும் அப்செட்டுக்கு ஆளானார்.. ஏற்கனவே பாஜக மேலிடம் தனக்கு எந்த வகையிலும் ஆதரவு தரவில்லை என்ற கடுப்பில் இருந்தவர், டெல்லியில் அப்பாயிண்ட்மென்ட் கிடைக்காததுடன், குட்காவையும் விசாரிக்க முனைவதால், இன்னும் அதிருப்திக்கு ஆளானார் எடப்பாடி..

அப்பாயிண்ட்மென்ட்
அந்த கோபத்தில்தான் டெல்லியில் இருந்து திரும்பிய உடனேயே, ஓபிஎஸ் டீமில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டாராம்.. தலைவர்கள் தன் மீது கோபமாக இருப்பதை அறிந்தும், எடப்பாடி இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுத்தது, டெல்லிக்கே கொஞ்சம் ஷாக்தானாம்.. இனி, பாஜக எந்த வகையில் செக் வைத்தாலும், அவைகளை எதிர்க்கவும், சமாளிக்கவும், எடப்பாடி பழனிசாமி துணிந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்..

மாஸ்டர் பிளான்கள்
அதுமட்டுமல்ல, தனக்கு நெருக்கமானவர்களிடம், பாஜகவை எதிர்க்க வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்... எதுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அலர்ட் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்தன.. சென்னை வந்திருந்த பிரதமர், எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்ஸை நேரில் அழைத்து பேசுவார், இவர்கள் 2 பேரையும் சமாதானப்படுத்துவார் என்றே இந்த தமிழகம் எதிர்பார்த்தது.. ஆனால், 2 பேரும் தனித்தனியாக பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கியிருப்பதாக சொன்னார்கள்..

மெசேஜ்
ஏர்போர்ட் வரும் பிரதமரை எடப்பாடி வரவேற்பார், ஓபிஸ் பிரதமரை வழியனுப்பி வைப்பார் என்று இன்னொரு தகவலை சொன்னார்கள்.. அதன்படியே, ஏர்போர்ட்டில் எடப்பாடி வரவேற்றார்.. டிஆர் பாலு, பொன்முடி, துரைமுருகன் என திமுகவின் சீனியர்கள் சுற்றி நிற்க நடுவில் எடப்பாடி மோடியை வரவேற்கும் போட்டோ வெளியானது.. அப்போது எடப்பாடியின் கையை பிரதமர் இறுக பற்றிக்கொள்ளும் போட்டோவும் வெளியானது.. இந்த போட்டோ ஆயிரம் அர்த்தங்களை அதிமுகவுக்கு சொல்லி உள்ளதாம்.. குறிப்பாக பாஜக ஒரு முக்கிய மெசேஜ்ஜை எடப்பாடி டீமுக்கு சொன்னதாகவே கருதப்படுகிறது.

லாப கணக்கு
எடப்பாடி பழனிசாமி எப்படி, பாஜகவை எதிர்க்க துணிவதாக சொல்லப்பட்டு வருகிறதோ, அதுபோலவே, எடப்பாடி தயவு இல்லாமலேயே தமிழகத்தில் தங்களால் சாதிக்க முடியும் என்றே பாஜக நம்புகிறதாம்.. இதற்கு சில அரசியல் கணக்குகளும் சொல்லப்படுகின்றன.. இதற்கு முன்பு, அதிமுக கூட்டணியில் இல்லாமல் 3வது அணி அமைத்து போட்டியிட்டாலோ அல்லது திமுக அணியில் இருந்தாலோ எம்பி தேர்தல்களில் பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளது..

ரத்தத்தின் ரத்தங்கள்
ஆனால் இதுவே, அதிமுக கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்தித்தால், சொற்ப இடம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.. அப்படியே ஒருசில இடங்கள் ஒதுக்கினாலும், ஒற்றை இடத்தில் வெற்றி பெறுவதே பெரும் சிரமமாகி விடுகிறது.. அதனால்தான், தனித்து போட்டியிடலாமா என்ற யோசனையில் பாஜக உள்ளதாம்.. இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. ஓபிஎஸ், எடப்பாடி டீம் பிரிந்துள்ள நிலையில், தேர்தலின்போது, ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி தினகரன் ஆகியோரை உள்ளடக்கிய அணியுடன் இணைந்து போட்டியிட்டால் அது மேலும் பிளஸ் ஆக இருக்க வாய்ப்புள்ளதாகவும் பாஜக நம்புகிறதாம்.

பரிதாப அதிமுக
இன்னொரு காரணமும் உள்ளதாம்.. அப்படியே எடப்பாடியை சமாதானப்படுத்தினாலும், அவருடைய அணியில் இருக்கும் சிவி சண்முகம், ஜெயக்குமார், கேபி முனுசாமி இவர்கள் எல்லாம் பாஜகவை கடுமையாக எதிர்த்தும் வருகிறார்கள்.. அதனால், கூட்டணியில் இருந்தாலும் டேமேஜ் செய்ய வாய்ப்புள்ளதாக பாஜக நினைக்கிறது... இந்த முறை தமிழகத்தில் 15 தாமரைகள் மலர வேண்டும் என்று அமித்ஷா ஏற்கனவே சொல்லி வருகிறார்.. "25 இடங்களில் வெற்றி உறுதி, மீதி 10 இடங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்" என்று மாநில தலைவர் அண்ணாமலையும் தங்கள் மீதான நம்பிக்கைகளை ஆழமாக பதித்து வருகிறார்.

ரியாக்ஷன்
எனினும், பாஜக போடும் இந்த புது கணக்கு எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும்? அதிமுகவில் 90 சதவீத நிர்வாகிகளின் வலிமையை பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியை, பாஜக அவ்வளவு சீக்கிரம் பகைத்து கொள்ளுமா? வரப்போகும் எம்பி தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்துவிட்டு, பாஜக தனித்து போட்டியிட போகிறதா? அதேபோல், மேலிடத்தை பகைத்து கொண்டு, ரெய்டுகள், விசாரணைகள், வழக்குகளை எடப்பாடி டீம் சமாளிப்பாரா? இவை எதற்குமே விடை தெரியவில்லை.. எனினும், அதிமுகவின் தயவால் மட்டுமே தேர்தலை சந்தித்து வந்த "தாமரைகள்", இனி துணிச்சலுடன் யாருக்காகவும், தங்கள் கலரை மாற்றிக் கொள்ளாமல் தமிழகத்தில் களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்... பார்ப்போம்..!

புது தகவல்
இதனிடையே இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. பிரதமர் சென்னை வந்தபோது, ஒரு முக்கிய பாஜக நிர்வாகி ஒருவர், எடப்பாடியின் இன்றைய நிலைமையை பற்றி எடுத்து சொன்னாராம்.. "அதிமுகவில் எடப்பாடி கை ஓங்கி இருக்கிறது. இது எந்த விதத்திலும் பாஜகவுக்கு நல்லது இல்லை.. அதேபோல, எடப்பாடி ஆதரவாளர்களாக இருக்கும் பெரும்பாலானோர், தமிழகத்தில் பாஜக வளர்வதையும், விரும்பவில்லை.. அதனால்தான், பாஜகவை மட்டம் தட்டும் வகையில், எதையாவது பேட்டிகள், அறிக்கைகளை அவர்கள் விடுத்து கொண்டே இருக்கிறார்கள்" என்று பிரதமரிடமே சொன்னாராம்.. இதையும் பிரதமர் அமைதியாக கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் சுற்றிக் கொண்டிருக்கிறது.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications