Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"40 எம்எல்ஏக்கள்" ரெடியாமே.. திமுகவுக்கே செக் வைக்கிறாரா "நெருக்கமானவர்".. பற்றவைத்த இந்து முன்னணி

செந்தில் பாலாஜி 40 எம்எல்ஏக்களுடன் இருப்பதாக காடேஸ்வர சுப்பிரமணி தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து முன்னணியின் காடேஸ்வரா சுப்பிரமணி, கடந்த சில நாட்களாகவே அளித்து வரும் தகவல்கள் திமுகவின் வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.. என்ன நடந்தது?

விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதற்காக தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்த வகையில் பாஜகதான் முதல் கட்சியாக, களத்தில் இறங்கி உள்ளது.

தென் இந்தியாவில் தாமரையை மலர வைத்தே தீருவோம் என்று அமித்ஷாவே, பகிரங்கமாக அறிவிக்கும் அளவுக்கு மேலிடம் கனகச்சிதமாக காய் நகர்த்தி வருகிறது.

 ஸ்கெட்ச் போடும் பாஜக

ஸ்கெட்ச் போடும் பாஜக

தமிழகத்தை பொறுத்தவரை, திமுக கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக முனைப்பு காட்ட துவங்கியிருக்கிறது.. இதற்காக 2 விதமான வியூகங்களை பாஜக மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.. அதன்படி, திமுகவுக்கு எதிரான கட்சிகளை எல்லாம் ஒன்று திரட்டுவது, அந்த கட்சிகளுக்கு பக்கபலமாக துணை நிற்பது, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வைப்பது, அவைகளில் இருந்து வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பதவி தந்து, டெல்லியில் உட்கார வைத்து, திமுகவுக்கு டஃப் கொடுப்பது.. இதுதான் அந்த முதல் பிளானாம்.

 மடாதிபதிகள்

மடாதிபதிகள்

இரண்டாவதாக, இந்துக்களுக்கு எதிரான கட்சியாக திமுகவை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதாகும்.. ஆனால், இந்த செயலை, அரசியல் கட்சிகள் மூலம் இல்லாமல், மடாதிபதிகள், ஆதீனங்கள், வைத்து, திமுகவுக்கு எதிராக பேச வைப்பதாம்.. அதற்கான அறிகுறிதான் கடந்த 2 மாதமாகவே தமிழகத்தில் தென்பட்டு கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.. இதனால் திமுக மீது வெறுப்பை கக்க வைத்து, வரப்போகும் தேர்தலில் 10 சீட் அதாவது டபுள் டிஜிட் சீட்களையாவது தமிழகத்தில் பெற வேண்டும் என்பதே நோக்கம் என்கிறார்கள்.

 இந்து முன்னணி

இந்து முன்னணி

அந்த வகையில், மதுரை ஆதீனம் திமுகவை சாடினார்.. இப்போது இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திமுகவை சீண்டுகிறார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. கடந்த வாரம் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் முன்பு துவங்கியது.. இந்த பயணத்தை தொடர்ந்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இந்து உரிமை மீட்பு பிரச்சாரக் கூட்டமும் நடந்து முடிந்தது.

 ராஜினாமா

ராஜினாமா

அப்போது பேசிய காடேஸ்வர சுப்ரமணியம், "மகாராஷ்டிராவில் நடைபெறுவது போல தமிழகத்தில் நடைபெறும்.. மகாராஷ்டிரா முதல் ராஜினாமா செய்து விட்டார். அதுபோல் தமிழக முதல்வர் எப்போது ராஜினாமா செய்வார் என்று தெரியவில்லை. ஏற்கனவே எம்எல்ஏக்கள் ஒரு சிலரிடம் பேரம் பேசுவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது... அதுவும் உளவுத்துறை மூலமாக வருகிறது.. இந்துக்கள் விழிப்படைந்து விட்டார்கள்" என்று கொளுத்தி போட்டிருந்தார்.

 காடேஸ்வரா தாக்கு

காடேஸ்வரா தாக்கு

காடேஸ்வரா, யாரை குறிப்பிட்டு இவ்வாறு சொல்கிறார் என்று தெரியவில்லை.. ஒருவேளை பொத்தாம் பொதுவாக சொல்கிறாரா? அல்லது திமுகவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று இப்படி குற்றஞ்சாட்டுகிறாரா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன.. இந்நிலையில், எம்எல்ஏக்கள் யாருக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்கள் என்றும் எத்தனை எம்எல்ஏக்கள் என்றும் விலாவரியாக சொல்லி உள்ளார்.

 40 எம்எல்ஏக்கள்

40 எம்எல்ஏக்கள்

"தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்போது மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று சொல்வதை நிறுத்துகிறாரோ அப்போதான் அவரை தமிழக முதல்வர் என்று நாங்கள் அழைப்போம்... அதுவரை அவரை, நாங்கள் ஆளுநரின் ஆலோசகர் என்றே அழைப்போம்.. விரைவில் ஸ்டாலின் ஆட்சி முடிவடையும்... ஏனென்றால், செந்தில் பாலாஜி 40 எம்எல்ஏக்களின் ஆதரவை வைத்துள்ளார் என தகவல்கள் வருகின்றன.. தமிழக அரசியல் விரைவில், தற்போதைய மகாராஷ்டிரா அரசியல் போல் மாற உள்ளது... இஸ்லாமிய பெண்கள் பர்தா போடுவதை அவர்களே விரும்பவில்லை. அதனால், அவர்களுக்கு பர்தாவிலிருந்து சுதந்திரம் தர வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

 சீனியர் அமைச்சர்

சீனியர் அமைச்சர்

செந்தில்பாலாஜியை பொறுத்தவரை திமுகவின் நம்பிக்கையான கை.. ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவர்.. நம்பகமானவர்.. மாற்று கட்சியில் இருந்து முக்கியஸ்தர்களை திமுகவுக்கு இழுத்து வரும் பொறுப்பு, பெரும்பாலும் இவரிடம்தான் ஒப்படைத்து வருகிறது திமுக மேலிடம்.. அந்த வகையில்தான் கொங்குவையும், கொங்குவின் சீனியர் தலைகளையும் திமுக பக்கம் கொண்டு வரும் முயற்சி இவரிடம் தரப்பட்டது.. அதை சீரும் சிறப்புமாகவே செய்து முடித்த செந்தில் பாலாஜி, தன்னுடைய வெற்றி முத்திரையை நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் பதிவு செய்தார்.

 லேட்டஸ்ட் நிலவரம்

லேட்டஸ்ட் நிலவரம்

அதேசமயம், கொங்குவில் ஓரளவு செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறது தமிழக பாஜக.. திமுகவை கொங்குவில் வீழ்த்திவிடலாம் என்றும் கணக்கு போட்டது.. அதனால்தான், கோவையின் ஒரு வார்டில் தோற்றால்கூட, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாகக்கூட வானதி சீனிவாசன் ஒருமுறை சவால் விட்டிருந்தார்.. ஆனால், அவர் அப்படி செய்யவில்லை என்பது வேறு விஷயம்.. அந்த அளவுக்கு கொங்குவை பாஜக நம்புகிறது.. இதில் செந்தில் பாலாஜிவின் ஆதிக்கம் அதிகமாகிவிடவும், அவர் மீது கடுப்பை காட்டி வருவதாகவே தெரிகிறது.. அதனாலேயே காடேஸ்வரா சுப்பிரமணி, செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டை அள்ளி வீசுவதாக திமுகவினர் கூறுகிறார்கள்..

 வெட்டி வா.. கட்டி வா

வெட்டி வா.. கட்டி வா

அதுமட்டுமல்ல, வெட்டிவா என்றால் கட்டி வந்துவிடும் இயல்பு கொண்டவர் செந்தில் பாலாஜி என்று ஸ்டாலினே பலமுறை வெளிப்படையாக புகழ்ந்தவர்.. அதனால், முதல்வர் மீதான நம்பிக்கை செந்தில்பாலபாஜிக்கும், செந்தில்பாலாஜி மீதான நம்பிக்கை முதல்வருக்கும் குறைய போவதில்லை, இதெல்லாம் இவர்களாகவே கிளப்பி விடும் தகவல்கள் என்கிறார்கள் கொங்குவின் திமுகவினர்..

Recommended Video

    தமிழ்நாட்டில் குவியும் முதலீடுகள்... Investment Conclave மூலம் கிடைத்த பலன் *Tamilnadu
     40 எம்எல்ஏக்கள்

    40 எம்எல்ஏக்கள்

    எனினும், 40 எம்எல்ஏக்களை செந்தில் பாலாஜி வைத்திருப்பதை, இந்து முன்னணி சொல்ல காரணம் என்ன? 40 எம்எல்ஏக்களை வைத்து கொண்டு செந்தில்பாலாஜி திமுகவை மிரட்டுவார் என்கிறாரா? அல்லது திமுகவுக்கு செக் வைப்பார் என்கிறாரா? அல்லது அதிமுகவில் சேர்ந்துவிடுவார் என்கிறாரா? எதற்காக இதை இந்து முன்னணி சொல்கிறது? ஒருவேளை திமுகவுக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்த இவ்வாறு சொல்கிறதா? போன்ற கேள்விகளும் தொத்தி நிற்கின்றன..

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+