முடிஞ்சது.. 2 விஷயம்தான் எல்லாத்துக்கும் காரணம்.. எடப்பாடிக்கு டார்கெட் ஓபிஎஸ்ஸே கிடையாதாம்.. அப்ப?

எடப்பாடி பழனிசாமியின் 2 பிளஸ் பாயிண்ட்கள் பற்றி அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றைய தினம் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், ஓபிஎஸ் அரசியல் எத்தகைய திசையை நோக்கி செல்ல போகிறது என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.. அதேசமயம், 2 விஷயங்களில் ஓபிஎஸ்ஸை, எடப்பாடி பழனிசாமியை ஸ்கோர் செய்துவிடுகிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, அதாவது எம்பி தேர்தலின்போதே, பாஜகவை கழட்டிவிட்டு தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டதாக சொன்னார்கள்.

இதற்கு காரணம், அப்போதுதான், குடியுரிமை சட்டம், சிஏஏ போன்ற விவகாரங்கள் தலைதூக்கி மக்கள் மனதில் குறிப்பாக சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தி அலை படர்ந்திருந்தது..

 சண்முகம்

சண்முகம்

அதனால், பாஜகவை தவிர்த்து தேர்தலை சந்திக்கவே எடப்பாடி முடிவு செய்திருந்தபோது, ஓபிஎஸ் அப்போது உள்ளே புகுந்து, ஆட்டத்தை கலைத்துவிட்டதுடன், பாஜகவுடன் தான் கூட்டணி என்பதையும் எடப்பாடியை கேட்காமலேயே அறிவித்து விட்டதாக தெரிகிறது. இந்த கோபமும் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கத்தான் செய்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக, தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்று சிவி சண்முகம் அப்போதே ஆவேசமாக ஒரு பேட்டி தந்திருந்தார்.. சிவி சண்முகம் இப்படி பேசியது, மிகுந்த பரபரப்பாக அப்போது பார்க்கப்பட்டாலும், அது அவரது சொந்த கருத்து என்று ஓபிஎஸ் முந்திக் கொண்டுவந்து, இந்த விஷயத்தை ஆஃப் செய்திருந்தார்.

 ஜெர்க்காயிடுச்சு

ஜெர்க்காயிடுச்சு

இதேதான் கடந்த தேர்தலின்போதும் எதிரொலித்தது.. பாஜகவுடன் கூட்டணி வைப்பதால்தான், சறுக்கலை சந்திக்க நேர்ந்துவிடுகிறது என்பதை தற்போது எடப்பாடி உணர்ந்துள்ளார்.. குறிப்பாக, கடந்த 2019 மற்றும் 2021ம் தேர்தல்களில் கிட்டத்தட்ட 13 சதவீத சிறுபான்மையினர் அதிமுகவை விட்டு வெளியேறியது மிகப்பெரிய அதிமுகவின் பின்னடைவாக பார்க்கப்பட்ட வருகிறது.. வரும் 2024 தேர்தலில் மறுபடியும் கூட்டணி வைத்தால், அதிமுகவின் வாக்கு வங்கி மேலும் சரிவை நோக்கி சென்றுவிடும் என்பதாலேயே, பாஜகவை கழட்டிவிடவும் துணிவதாக சொல்கிறார்கள்..

 பல்ஸ் பல்ஸ்

பல்ஸ் பல்ஸ்

ஆனால், பாஜகவை எளிதாக கூட்டணியில் இருந்து கழட்டிவிட வேண்டும என்றால், அதை ஓபிஎஸ்ஸை வைத்து கொண்டு செய்ய முடியாது என்பதையும் எடப்பாடி உணர்ந்திருந்தார். எனவேதான், ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு, பாஜகவுக்கு செக் வைக்கும் யோசனையையும் எடப்பாடி தரப்பு முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது.. ஆக, எடப்பாடிக்கு பிரச்சனை ஓபிஎஸ் கிடையாது, அவரது முதல் டார்கெட் பாஜகதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.. அதுமட்டுமல்ல, தமிழக மக்களின் மனநிலை என்பது பாஜகவுக்கு எதிரானது என்பதால்தான், மக்களின் பல்ஸை அறிந்து அந்த ரூட்டை எடுத்துள்ளார் எடப்பாடி என்கிறார்கள்..

 ஸ்கோர்

ஸ்கோர்

இங்கு இன்னொரு அரசியலும் உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.. பொதுவாக அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை, திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதுதான் அவர்களது முதல் மற்றும் ஒரே குறிக்கோள். திமுகவை அளவுக்கு அதிகமாக எதிர்ப்பவரைதான் தலைவராக கருதுகிறார்கள் அதிமுக தொண்டர்கள்.. அந்த வகையில், திமுகவை படுதீவிரமாக எதிர்ப்பது எடப்பாடியாகவே இருக்கிறாராம்.. ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, திமுக மீத சாஃப்ட் கார்னர் உள்ளது என்கிறார்கள்..

டாக்குமெண்ட்

டாக்குமெண்ட்

அன்று அதிமுக அலுவலகத்தை கைப்பற்றியபோது, டாக்குமெண்ட்களை எல்லாம் வேனில் வைத்துதான் கொண்டு சென்றபோது, தமிழக காவல்துறை மறைமுகமாக ஓபிஎஸ் தரப்புக்கு உதவிக்கரம் நீட்டியதை ரத்தத்தின் ரத்தங்கள் கவனிக்காமல் இல்லை. அதுமட்டுமல்ல, அலுவலகம் மூடி சீல் வைத்த பிறகும், சிபிசிஐடி விசாரணை நடத்தப்படவில்லை.. ஏன் சிபிசிஐடி விசாரணை இதுவரை நடத்தப்படவில்லை என்று சிவி சண்முகம் கேள்வி கேட்டபிறகே, சிபிசிஐடி விசாரணை நடந்தது. அதாவது எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க, திமுகவின் ஆதரவு என்பது ஓபிஎஸ்ஸுக்கு தற்சமயம் தேவையாகவும் இருக்கிறது..

 பிளஸ் + மைனஸ்

பிளஸ் + மைனஸ்

சுருக்கமாக சொல்லப்போனால், திமுகவை குறைவாகவே ஓபிஎஸ் விமர்சித்து வருவதும், மற்றொருபுறம் பாஜகவை அதிகமாகவே தூக்கி வைத்து பேசி வருவதும்தான், ஓபிஎஸ்ஸின் பலவீனமாக சொல்கிறார்கள்.. மற்றபடி, சட்டரீதியான விஷயங்களில் ஓபிஎஸ் சரியாகவே இருக்கிறார் என்பதையும், பொறுமையுடன், நாகரீக போக்குடன், தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல், மென்மையான அரசியலை வழக்கம்போல் ஓபிஎஸ் கையாண்டு வருவது, பலதரப்பினரின் கவனத்தையும் ஈர்க்கவே செய்கிறது.. என்றாலும், திமுக மற்றும் பாஜக விஷயத்தில் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால், இன்னும் சிறப்பாக இருக்கும், இல்லாவிட்டால் இந்த 2 விஷயத்தில்தான் எடப்பாடி தொடர்ந்து ஸ்கோர் செய்வார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+