தைலாபுரம் தோட்டத்தில் கறி விருந்து எப்போ.. கெமிஸ்ட்ரி அப்படியே இருக்கு.. காத்திருக்கும் அதிமுக!?
அதிமுக - பாமக கூட்டணி மீண்டும் அமையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: பாமக - அதிமுக கெமிஸ்ட்ரி இந்த முறையும் ஒர்க் அவுட் ஆகுமா? தைலா புர தோட்டத்தில் டாக்டர் மறுபடியும் ஒரு கறிவிருந்து வைப்பாரா? என்ற ஆவல் அரசியல் களத்தில் எழுந்துள்ளது!
வழக்கமாக, எந்த தேர்தலாக இருந்தாலும் சரி, பாமக ரொம்பவே பிஸி ஆகிவிடும்.. ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாறி மாறி கூட்டணி வைப்பார் என்பதும், யார் நிறைய சீட் தருகிறார்களோ அவர்களுடன் சேர்ந்து கொள்வார் என்பதும் பாமகவின் கடந்த கால வரலாறு நமக்கு காட்டிய உதாரணங்கள்!
இந்த முறை வித்தியாசமான சூழலில் தேர்தல் நடக்கப் போகிறது. இரு பெரும் ஆளுமைகள் இல்லாத நிலையில் நடக்கப் போகும் முதல் சட்டசபைத் தேர்தல்.

பாமக
இப்போதைக்கு அதிமுகவுடன் கூட்டணியில்தான் உள்ளது பாமக.. அதேசமயம், வாக்கு சதவீதத்தை வலுவாக தக்க வைத்து கொண்டும் உள்ளது. இதற்கு காரணம், பாமகவின் கனகச்சித களப்பணிகள்தான்.. இந்த கட்சி தொண்டர்கள் பக்காவாக வேலை பார்த்து கட்சியை ஒவ்வொரு வருடமும் பலப்படுத்தியே வருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

உத்தரவாதம்
அதனால்தான், பாமக யாருடன் கூட்டணி வைக்கிறதோ, அந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற உத்தரவாதத்தை அக்கட்சி தொடர்ந்து தந்து வருகிறது.. அன்று 40-க்கு 40 திமுக என்ற சாதனையை நொறுக்க, மறைந்த ஜெயலலிதா ஆதரித்தது பாமகவைதான்.. சீட்டுகளை அள்ளி தந்து தேர்தலிலும் வெற்றி பெற்றார்! அந்த நம்பிக்கை இப்போதும் தொடர்கிறது!

திட்டமிடல்
சென்ற லோக்சபா தேர்தலிலேயே திமுக பாமகவுடன் கூட்டணி வைக்க வேண்டியதுதான்.. ஆனால், என்ன ஆச்சோ தெரியவில்லை.. சரியான திட்டமிடல் இல்லையா, வேறு ஏதேனும் பேச்சுவார்த்தையின்போது சுணக்கம் ஏற்பட்டதா தெரியவில்லை... அதற்குள் அதிமுக முந்தி கொண்டு வந்து பாமகவை அள்ளி கொண்டு போய்விட்டது.

எடப்பாடி அரசு
இப்போதும் இதே கூட்டணிதான் தொடரும் என்கிறார்கள்.. இதற்கு காரணம், பாமக-அதிமுக இடையே வடமாவட்டத்தில் ஒரு எப்போதுமே ஒரு கெமிஸ்ட்ரி இருப்பதாக கருதப்படுகிறது.. கடந்த தேர்தலின்போது, அதிமுக ஆட்சி தொடர, தேவையான எம்எல்ஏக்களை பாமக கூட்டணி மூலமாகவே எடப்பாடி அரசு பெற்றது என்பதை மறுக்க முடியாது.. வடமாவட்டங்களில் விஜயகாந்த்துக்கு ஓரளவு செல்வாக்கு இருந்தாலும், வன்னிய பெல்ட்டுகளில் வேல்முருகனுக்கு ஆதரவு ஓளரவு இருந்தாலும் பாமகவை நெருங்க முடியவில்லை என்பதே உண்மை.

முக்கியத்துவம்
அதனால்தான் எடப்பாடியார், பாமகவுக்கு உரிய முக்கியத்துவம் தருவதுடன், எடுத்த எடுப்பிலேயே பாமகவுக்கு சீட்களை அள்ளி வழங்குகிறார்.. இந்த முறையும், கூட்டணியில் முக்கியத்துவம் தரப்படும் என்று தெரிகிறது.. பாமகவை திருப்திப்படுத்திவிட்டு, அதற்கு பிறகுதான், தேமுதிக, பாஜக என்று சீட் பேரம் நடத்தப்படும் என்றும் சொல்கிறார்கள்.

பிரேமலதா
ஆனால், "திரும்பவும் இட ஒதுக்கீட்டு போராட்டத்தை நடத்த நாம் தயாராக வேண்டும்.. நானே தலைமை தாங்குவேன்" என்று கடந்த செப்டம்பர் 6-ம் தேதி நடந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசியதும் அதிமுகவுக்கு தூக்கி வாரிப்போட்டதாக சொல்லப்பட்டது.. சீட் பேரத்துக்காக தனித்து போட்டி என்று பிரேமலதா சொன்னார் என்றால், பாமகவும் இப்படி ரூட் போட்டுள்ளதோ என்ற சந்தேகத்தையும் இது கிளப்பி வருகிறது. ஆனால் என்ன இருந்தாலும், பாமகவுக்கு அடுத்துதான், மற்ற கட்சிகளுக்கு அதிமுக தலைமை சீட் தரும் என்கிறார்கள்.

கூட்டணி
இது எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் ஒரு பிரச்சனை என்றால் முதலில் வந்து நின்று குரல் கொடுப்பது எப்போதுமே டாக்டர் ஐயாதான்.. கூட்டணியிலேயே இருந்தாலும், நல்ல நட்பு பாஜக மேலிடத்தில் இருந்தாலும், பலமுறை இந்தி மொழிக்கு எதிராக குரல் கொடுத்தது பாமக என்பதைதான் தமிழகம் அறியும்.

அட்வைஸ்
அதிலும் இந்த கொரோனா நேரத்தில், தடுப்பு நடவடிக்கைகளை சொல்லி வார்னிங் தந்து, தினமும் மக்களுக்கு அட்வைஸ் தந்து, அரசுக்கு பல ஐடியாக்களை தந்தவர் டாக்டர் ராமதாஸ் என்பதால், தமிழக மக்களுக்கு பாமக மீது மதிப்பு நிறையவே கூடியுள்ளது.. அது நிச்சயம் வரப்போகிற தேர்தலில் முடிவுகளிலும் எதிரொலிக்குமாம் ஆக மொத்தம், தைலாபுர தோட்டத்தில் இன்னொரு விருந்து கூடிய சீக்கிரம் ரெடியாகலாம் என்கிறார்கள்!
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications