Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடை விடுமுறை முடிந்து.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது OTGOT பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

When will Tamil Nadu Schools be reopened after the summer holidays Official announcement


ஜூன் 6ம் தேதி தேர்வு செய்யப்பட காரணம் என்ன?: நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.

When will Tamil Nadu Schools be reopened after the summer holidays Official announcement

நேற்று 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது.

இனி 6ம் மற்றும் 7ம் கட்ட தேர்தல்கள் நடக்க உள்ளன. மே 25ம் தேதி 6ம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன.

தேர்தல் + வானிலை: மேற்கண்ட தேர்தல் மற்றும் வானிலையை மனதில் வைத்து பள்ளி திறப்பு தேதிகள் மாற உள்ளதாம். அதன்படி தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதிகள் தொடர்பான முக்கியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. விரைவில் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. அதேபோல் 1 முதல் 3ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரையும், 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரையும் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதன்பிறகு ஏப்ரல் 24ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

திறப்பு தேதி என்ன?: ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வருகின்றன. இதனால் அன்று பள்ளிகளை திறக்க முடியாது. பாதுகாப்பு கருதி மறுநாளும் திறக்க வாய்ப்பு குறைவு.

அதோடு இல்லாமல் இப்போது கடுமையான வெயில் இல்லை. வெயில் குறைந்து மழை பெய்கிறது. அதோடு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. புயல் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் இனி வெயில் வேகமாக குறையும்.

இதன் காரணமாக வெயிலும் இல்லை. எனவே ஜூன் 2ம் வாரம் பள்ளிகளை திறக்காமல் ஜூன் 6ம் தேதி வியாழன் கிழமை திறக்கும் திட்டத்தில் பள்ளி கல்வித்துறை எடுத்துள்ளது. இந்த வருடம் வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் , டிசம்பரில் விடுமுறை அதிகமாகலாம். இதை ஈடுகட்ட இந்த முறை முன்கூட்டியே பள்ளிகளை திறக்கும் முடிவை எடுக்க உள்ளனராம். இதனால் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+