Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வைதேகி வந்தாச்சு".. எடப்பாடிக்கு "நோ ரெஸ்பான்ஸ்".. இது புதுஸ்ஸா இருக்கே.. கூட்டணியில் பாஜக இல்லையாமே

அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக நிர்வாகிகள் மேலும் பலர் அதிமுகவில் இணைவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. அத்துடன், அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா என்ற கேள்விக்கு அதிமுகவின் மூத்த தலைவர் அளித்த பதில், அரசியல் களத்தில் அதிர்வலையை உண்டாக்கி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்றைய தினம் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள்.. இந்த கூட்டத்தில் மிக மிக முக்கியமான தலைவர்களே பங்கேற்றிருந்த நிலையில், அதிமுக - பாஜக இடையே நடைபெற்று வரக்கூடிய சர்ச்சையில் அதிமுக இனி எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

அதிமுக - பாஜக கூட்டணி உடைகிறதா? என்ற சந்தேகங்கள் வலுத்து வரும்நிலையில்தான், திடீரென நேற்றைய தினமும் சில பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.. மேலும் பலர் இணைய போவதாக கூறுகிறார்கள்.

 டீம் டீம்

டீம் டீம்

இதனிடையே வேறு சில தகவல்களும் வெளியாகி வருகின்றன... அதாவது, பாஜகவினரை அதிமுகவில் சேர்ப்பதற்காகவே, எடப்பாடி பழனிச்சாமி தனியாக ஒரு டீம் அமைத்திருக்கிறாராம்.. இந்தக் குழுவினர்தான், பாஜகவில் அதிருப்தியில், குறிப்பாக அண்ணாமலையால் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுடன் கடந்த சில நாட்களாகவே பேச்சுவார்த்தை நடத்தி வந்திருக்கிறார்கள்.. இதைத்தொடர்ந்தே, பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் அம்மு (எ)ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணை தலைவர் டி.விஜய் ஆகியோர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

 பன்னீர் பன்னீர்

பன்னீர் பன்னீர்

நேற்றைய தினமும், பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் லதா, உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு ஒன்றிய தலைவர் வைதேகி ஆகியோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். இந்த இணைப்பு இனி தொடரும் என்று அதிமுக தலைவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர். இப்படி ஒரு டீமையே உருவாக்கி, எடப்பாடி டீம் வேலை பார்த்து வருவது பல தரப்பினரையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறதாம்.. பாஜகவை உடைத்து அண்ணாமலைக்கு கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு செயல்பட்டு வருவதை, டெல்லி மேலிடமும் கவனித்து வருவதாக சொல்கிறார்கள்.. எடப்பாடி தனக்கு எதிராக செயல்படுவது குறித்துதான், அண்ணாமலை, பன்னீர்செல்வத்தை பெரியகுளத்தில் நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறுகிறார்கள்..

 சைலண்ட் மூவ்

சைலண்ட் மூவ்

அதுமட்டுமல்ல, ஈரோடு தேர்தல் சமயத்தில்கூட, அதிமுக - பாஜக கூட்டணி தலைமை இணக்கமாக இருந்தநிலையில், திடீரென இவர்களுக்குள் என்ன ஆயிற்று? என்ற குழப்பங்களும், அதுகுறித்த சில காரணங்களும் இணையத்தில் உலா வருகின்றன. இடைத்தேர்தலில் உடனடியாக தங்களுடைய ஆதரவை எடப்பாடிக்கு தெரிவிக்காமல் அமைதி காத்தது தமிழக பாஜக.. அதனால், எடப்பாடி பழனிச்சாமியே, அண்ணாமலைக்கு போனை போட்டு ஆதரவு கேட்டாராம்.. அதற்கு அண்ணாமலை, "இன்னைக்கு சாயங்காலம் ஆதரவு அறிவிப்பு வெளியிடுகிறேன்" என்றவர் அன்றைய தினம் ஆதரவை தரவில்லையாம்..

 நோ போட்டோ

நோ போட்டோ

அத்துடன், யாருக்கு ஆதரவு என்பதை ஓரிரு நாளில் அறிவிக்கிறேன் என்று சொல்லியே, 10 நாட்களுக்கும் மேலாக இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.. இதற்கு பிறகுதான் எடப்பாடி நொந்துபோய், ஒரு கட்டத்தில் பாஜகவின் ஆதரவு தேவையில்லை. அவர்கள் இல்லாமலேயே வேலையை பாருங்கள்.. பேனர்களில் மோடி, அமித்ஷா, அண்ணாமலை போட்டோக்கள் இல்லாமலேயே வேலையை பாருங்கள் என்று எடப்பாடி சென்னாராம். ஒருவேளை அண்ணாமலை ஆதரவை தந்தாலும்கூட, பாஜக கொடி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தனியாகவே சென்று பிரச்சாரம் செய்யுங்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் வாக்குகள்தான் நமக்கு மிகவும் முக்கியம் என்று எடப்பாடி ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம்.

40000

40000

அண்ணாமலை பிரச்சாரத்துக்கு வந்தபோதும்கூட, அதிமுக நிர்வாகிகள் அவருடன் பெரிய அளவில் கலந்து கொள்ளாமல் பட்டும் படாமல் ஒதுங்கியிருந்த காரணமும் இதுதான் என்கிறார்கள். இதனிடையே, தேர்தல் ரிசல்ட் வந்துவிடவும், வெறும் 40 ஆயிரம் ஓட்டுக்கள்தானா? என்று பாஜக அதிர்ந்து போயுள்ளது. அப்படியானால், எடப்பாடியை மட்டும் நம்பி கொண்டிருந்தால், எம்பி தேர்தலில் பாஜகவுக்கு சிக்கல் வந்துவிடுமே என்ற கலக்கமும் சூழ்ந்துவிட்டதாம். அதனால்தான் ரிசல்ட் வந்த மறுநாளே செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "ஒருங்கிணைந்த அதிமுக" என்ற வார்த்தையை வலியுறுத்தியதாக தெரிகிறது.

 செங்கோட்டையன்

செங்கோட்டையன்

இதற்கு உடனடியாக செங்கோட்டையனும் கே.பி.முனுசாமியும் பதிலடி தந்தாலும், எடப்பாடி டீமுக்கு அண்ணாமலையின் பேச்சு எரிச்சலை தந்துவிட்டதாலேயே கூட்டணிக்குள் சலசலப்புகள் கிளம்பி, நிர்மல்குமார் மூலம் அது பகிரங்கமாக வெடித்து கிளம்பிவிட்டது என்கிறார்கள். அப்படியானால், பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிட அதிமுக முடிவு செய்துவிட்டதா? கூட்டணி தர்மம் மீறப்படுகிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன.. இந்த கேள்விகளுக்கு மூத்த தலைவர் செம்மலை ஒரு பேட்டியில் பதில் சொல்லி உள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லவே இல்லை என்று ஒரே போடாகவும் போட்டுள்ளார்.

எடப்பாடி

எடப்பாடி

செம்மலை அந்த பேட்டியில், "எங்களையோ, எங்கள் இயக்கத்தையோ யாராலும் எடை போட முடியாது.. அண்ணாமலைக்கு ஏதோ ஒரு மனத்தாங்கல் இருக்கிறது.. அதனால்தான் இப்படி எங்களை விமர்சிக்கிறார்.. ஆனால் நாங்கள் படுதோல்வி அடைந்துவிட்டோம் என்கிறாரே? எந்த அடிப்படையில் நாங்கள் படுதோல்வி அடைந்துவிட்டோம் என்றுதான் தெரியவில்லை. எடப்பாடியின் உருவப்படத்தை எரித்துள்ளனர்.. தொண்டர்கள் கட்சிக்கு கட்டுப்பாடில்லாமல் நடக்கும்போது, அவர்களது செயல்பாடுகளை தலைமை கண்டிக்க வேண்டும்.. கோவில்பட்டியில், நடந்தது விரும்பத்தகாத சம்பவம் என்பதைவிட, அதை கோழைத்தனம் என்றே சொல்வேன்.

 தர்மசங்கடம்

தர்மசங்கடம்

பாஜக கூட்டணி தர்மத்தை மீறி செயல்படுகிறார்களா? என்று கேட்கிறீர்கள்.. ஆனால், கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.. கூட்டணி என்பது அந்தந்த தேர்தல்களுக்கு முன்பாக, அதுவும் ஒருசில மாதங்களுகுக்கு முன்பாக, கட்சிதலைமைகளால் தலைவர்களால் முடிவெடுக்கக் கூடிய விஷயம்.. கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் பாஜக எங்களுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார்கள்.. அது கூட்டணியாக அப்போது இருந்தது.. அதற்கு பிறகு, உள்ளாட்சி, நகர்ப்புற தேர்தலில் அவர்களும் தனித்து போட்டியிட்டார்கள், நாங்களும் தனித்து போட்டியிட்டோம்.. ஆக, பாஜகவுடனான கூட்டணி என்பது அப்போதே உடைந்துவிட்டது..

 திமிறும் எடப்பாடி

திமிறும் எடப்பாடி

அதற்கு பிறகு இடைத்தேர்தலில் எங்களுடைய வேட்பாளரை அவர்கள் ஆதரித்தார்கள்.. ஆதரவு என்பது எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நாங்கள் கடமைப்பட்டவர்கள்.. வேண்டாம் என்று சொல்ல மாட்டோம். ஆனால், வரப்போகும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் கூட்டணி தொடர்கிறது அல்லது கூட்டணி தொடரவில்லை அல்லது கூட்டணி தர்மம் மீறப்படுகிறது என்கிற பேச்சுக்கெல்லாம் இடமில்லை.. கூட்டணி உண்டா? இல்லையா? என்பது அடுத்த தேர்தலின்போது எங்கள் தலைமை முடிவு செய்யும்.. பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிதான் இறுதி முடிவெடுப்பார்" என்றார்.

பண்ருட்டியார்

பண்ருட்டியார்

ஆக, அதிமுக கூட்டணியிலேயே பாஜக இப்போதைக்கு இடம்பெறவில்லை என்று செம்மலை கூறியுள்ளது, கமலாலாய கூடாரத்தை அசைத்து பார்த்து வருகிறது என்றாலும், எடப்பாடி தரப்பு அடுத்தக்கட்ட வியூகங்களை கையில் எடுத்து விட்டதாம்.. அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் ஓரளவு தெம்பினை தந்த நிலையில், டெபாசிட்டையும் தக்க வைத்துள்ள நிலையில், மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ள போகிறாராம் எடப்பாடி பழனிசாமி.. கடந்த வாரம் இதே போல ஒரு அறிவிப்பைதான், ஓபிஎஸ் தரப்பில் உள்ள மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்திருந்தார்.

ஹேப்பி டீம்

ஹேப்பி டீம்

பாஜகவிடம் அளவுக்கு மீறி பணிந்து சென்று, கடைசியில் நிர்க்கதியாய் நிற்க வைத்துவிட்ட அதிர்ச்சியும், அதிருப்தியும் ஓபிஎஸ் கூடாரத்தை கவ்வியுள்ளதாம். அதனால்தான் இனியும் பாஜக பக்கம் சாயாமல், மக்களிடம் நெருங்கியிருக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. எனவேதான், பண்ருட்டியார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மக்களிடம் செல்ல போகிறோம். மக்கள் மன்றத்தை நாட போகிறோம்" என்று கூறியிருந்தாராம்.. இதே யுக்தியைதான் எடப்பாடியும் இன்றைய தினம் எடுத்துள்ளதாக தெரிகிறது.. இந்த சுற்றுப்பயணத்தின்போது தன்னுடைய செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+