குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை.. 15 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த விடிவு.. தாம்பரத்திற்கு குட்நியூஸ்
சென்னை: சென்னை கிழக்கு குரோம்பேட்டை பகுதியில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கிறார்கள். ஜி.எஸ்.டி. சாலை மற்றும் அவசர தேவைகளுக்கு மேற்கு குரோம்பேட்டை பகுதிகளுக்கு வரும்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்த பிரச்சனைக்கு விடிவுகாணும் வகையில் ராதா நகர் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த பணிகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பாதைக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு விடிவு பிறந்துள்ளது.
2000-ம் ஆண்டு, 2005ம் ஆண்டு சென்னைக்கு முதன் முதலாக வந்திருந்தீர்கள் என்றால், குரோம்பேட்டை எல்லாம் அவுட்டர் என்று கூறியிருப்பார்கள். 2000ம் ஆண்டுகளிலேயே உண்மையிலேயே குரோம்பேட்டை அவுட்டர் தான்.. ஆனால் ரேடியல் சாலை வந்த பிறகு தலை கீழாக மாறியது. இன்று வானுயர்ந்த கட்டிடங்கள், அடுக்குமாடி வீடுகள், அண்ணா சாலையைவிடவும் அதிகப்படியான வாகனங்கள், நான்கு பக்கம் வந்து செல்லும் வாகனங்கள். ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் என எல்லாமே மாறிவிட்டது.

சென்னையின் வணிக மையம் குரோம்பேட்டை
இன்றைக்கு குரோம்பேட்டையை தாண்டாமல் விமான நிலையமோ, ஓஎம்ஆர் சாலைக்கோ, ஈசிஆர் சாலைக்கோ, கிண்டிக்கோ யாருமே போக இயலாது. தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம் இருக்கிறது என்றாலும், அதன் வணிக மையமாக வளர்ந்த இடம் தான் குரோம்பேட்டை.. ஏனெனில் ரயில் நிலையமும், பேருந்து நிலையமும் ஒரே இடத்தில் அமைந்திருக்கிறது. தி நகருக்கு அடுத்தபடியாக குரோம்பேட்டை தான் சென்னையின் மிகப்பெரிய வணிக மையமாகவும், பல லட்சம் மக்கள் சந்திக்கும் இடமாகவும் இருக்கிறது.
பல்லாவரம் நகராட்சி டூ தாம்பரம் மாநகராட்சி
ஏனெனில் ஓஎம்ஆர், ஈசிஆர், குன்றத்தூர் போரூர், தாம்பரம், சிட்லப்பாக்கம் என எல்லாமே இணையும் இடமாக குரோம்பேட்டை இருப்பதால் தாம்பரத்தை விடவும் அசுர வளர்ச்சி அடைந்துவிட்டது. குரோம்பேட்டை முன்பு பல்லாவரம் நகராட்சியில் இருந்தது. ஆனால் தாம்பரம் மாநகராட்சியான உடன் பல்லாவரத்துடன் குரோம்பேட்டையும் இணைந்துவிட்டது.
மிகப்பெரிய வளர்ச்சி
குரோம்பேட்டை ரயில் நிலையத்தை அடிப்படையாக வைத்து கிழக்கு குரோம்பேட்டை, மேற்கு குரோம்பேட்டை என இரண்டாக இருக்கிறது. ஜிஎஸ்டி ரோட்டிற்கு இந்த பக்கம் உள்ள மக்கள் ரயில்வே தண்டவாளத்தில் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களின் வசதிக்காக எம்ஐடி மேம்பாலம், ரேடியல் மேம்பாலம் இருக்கிறது என்றாலும், அது சுற்றி வரும் வகையில் இருக்கிறது.
கிழக்கு குரோம்பேட்டை
கிழக்கு குரோம்பேட்டை பகுதியில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கிறார்கள். ஜி.எஸ்.டி. சாலை மற்றும் அவசர தேவைகளுக்கு மேற்கு குரோம்பேட்டை பகுதிகளுக்கு வரும்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்த பிரச்சனைக்கு விடிவுகாணும் வகையில் ராதா நகர் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பபட்டது. அந்த பணிகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. 2010ல் தொடங்கிய பணி, அடுத்த 10 ஆண்டுகள் மொத்தமாக முடங்கியே இருந்தது.
கருணாநிதி எம்எல்ஏ வழக்கு
இது தொடர்பாக பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.இதையடுத்து 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதற்கான டெண்டர் விடப்பட்டது. 15.47 கோடி செலவில் டெண்டர் விடப்பட்டு, நெடுஞ்சாலை துறை சார்பில் பணிகள் நடந்து வந்தன.
ரயில்வே நிலம் தந்தது
இந்தபணிகள் கடந்த 2 ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடந்தது. சுரங்கம் அமைக்கப்பட்டு பாதைகளும் முழுமையாக அமைக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த பாதையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல வேண்டும் என்றால், 3 மீட்டர் நீளம், 30 அகலத்திற்கு ரயில்வே துறையிடம் இருந்து நிலம் தேவைப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று ரயில்வே துறை அதிகாரிகள் நிலத்தை ஒரு வழியாக விடுத்தனர். இதையடுத்து பணிகள் தொடங்கி உள்ளது. எனவே விரைவில் ராதா நகர் சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால், தாம்பரம் செல்பவர்கள் எளிதாக சுரங்கப்பாதை வழியாக போய்விட முடியும். ஆனால் இருவழிப்பாதையாக சுரங்கப்பாதை இருக்க வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications