ஞாபகம் வந்ததே.. "சொன்னது நீ தானா, சொல், சொல்".. ஸ்டாலினை கேள்வி கேட்ட பாஜக நாராயணன்.. "ஷாக்" ட்வீட்
நாராயணன் திருப்பதி, திமுகவின் மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: மின்கட்டணம் தமிழகத்தில் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக தொடர்ந்து கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகிறது.
தமிழகத்தில் சுமார் 8 வருடத்துக்கு பிறகு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயுத தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்றைய தினம் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் சொல்லும்போது, "100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும், 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம் மாற்றம் இருக்கும்..

வேற வழியில்லை
மாதம் 301 - 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்த பரிசீலனை, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம் என்றும் அறிவித்தார்.. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடர்பு கழகத்திற்கு 43,493 கோடியாக இருந்த கடன் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து, அது இப்போது ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடி ரூபாயாக உள்ளது என்றும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உதைத்திட்டத்தில் இணைந்தாலும் தொடர்ந்து இழப்பையே சந்தித்துள்ளதால், மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் விளக்கம் தந்திருந்தார்.

பணக்காரர்கள்
இந்த மின்கட்டண உயர்வுக்கு பாஜக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.. அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, இது தொடர்பாக கருத்து பதிவிட்டிருந்தார்.. அதில், "பல சாக்குப் போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின்துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை இன்று உயர்த்தியுள்ளார். இப்போது நடைபெற்று வரும் ஆட்சியில், சிலரை பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா?" என்று காட்டமாக கேட்டிருந்தார்.

நாராயண்
அதேபோல, தமிழக பாஜகவின் நாராயணன் திருப்பதியும் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து கிண்டலாக ட்வீட் பதிவிட்டுள்ளார்.. கடந்த அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை கண்டித்து, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அந்த அறிக்கையைதான் நாராயணன் பதிவிட்டுள்ளார்.. அதில், "200 முதல் 500 யூனிட்டிற்குள்ளும் - 500 யூனிட்டிற்கு மேல் ஒரு யூனிட் அதிகமாக மின்சாரம் பயன்படுத்துவோரின் இல்லங்களுக்கு அதிமுக அரசு விதித்துள்ள மின்கட்டணத் தொகை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் ஷாக்" என்பது ஸ்டாலின் அறிக்கை..

ஞாபகம் வந்ததே
"சொன்னது நீ தானா.. சொல்.. சொல்.. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.." என்று பதில் கேள்வியாக ஸ்டாலினை கேட்டுள்ளார் பாஜக நாராயணன்.. இந்த ட்வீட்டுக்கு பலரும் வந்து, மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.. அதேசமயம் சிலர், 2014 நாளில் 400 விற்ற வீட்டு உபயோக சிலிண்டர் இன்றைக்கு 1068 விற்கிறதே.. இதை பற்றி பேசுவீங்களா நாராயணா? ஜிஎஸ்டி கொண்டு வந்தால், தூக்கு போட்டு தொங்குவேன் என்று ஒருத்தர் சொன்னாரே, அது ஞாபகம் இருக்கா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications