கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? தொடர் தாமதம் ஏன்.. ரயில்வே விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேடை 2, 3 அமைக்கும் பணி 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. நடைமேடையில் மேற்கூரை அமைப்பதற்கான செல்ட்டர் அமைக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதில் கூடுதலாக 20 சதவீதம் அதாவது 100 மீட்டருக்கு நடைமேடை அமைக்கும் பணியை சிஎம்டிஏ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தள்ளிப்போயிருக்கிறது. எப்போது கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் கூறிய தகவலை பார்ப்போம்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடியில் புதிய பஸ் நிலையம் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பக்கத்திலயே தண்டவாளம் சென்றாலும், ரயில் நிலையம் உடனடியாக அமைக்கப்படவில்லை. மக்களின் கடும் வலியுறுத்தலுக்கு பின்னரே அரசும் ரயில்வேயும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்தது.

When will the Kilambakkam railway station become operational Railway officials explanation

அரசு நினைத்திருந்தால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டுவதற்கு முடிவு செய்த போதே, கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும் அமைத்திருக்க முடியும். அதேபோல் தான் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும், பேருந்து நிலையத்திற்கும் இடையே நடைமேம்பாலத்தையும் அமைத்திருக்க முடியும். ஆனால் அரசு அப்படி செய்யவில்லை..

மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட போது கடுமையான கேள்விகளை எழுப்பிய பிறகே கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க அரசும் ரயில்வேயும் ஒப்புக்கொண்டன. அதற்கான பணிகள் அதன்பின்னரே விறுவிறுப்பாக நடந்தது. தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே ரூ.20 கோடி மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக பணிகளை முடிக்க முடியவில்லை. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் பணிகள் வேகமானது. மார்ச் மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் பணிகள் முடிப்பதில் தாமதம் ஆனது.

இதையடுத்து, இந்த மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணிகள் எப்போது முடியும் என ரெயில்வே அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில்வே சார்பில் நடைமேடை 2, 3 அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்துவிட்டது. நடைமேடையில் மேற்கூரை அமைப்பதற்கான செல்ட்டர் அமைக்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது. இதில் கூடுதலாக 20 சதவீதம் அதாவது 100 மீட்டருக்கு நடைமேடை அமைக்கும் பணி (நீட்டிக்கும் பணி) சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் தான் இப்போது நடைபெற்று வருகிறது.

மேலும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் உள்ளே வருவதற்கான நடைமேம்பாலம் அமைக்கும் பணி தமிழக அரசின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. நடைமேம்பாலம் பணிகளை தமிழக அரசு முழுமையாக முடித்த பின்னரே, அதில் உள்ள எஞ்சிய பணிகள் ரயில்வே மூலம் மேற்கொள்ளப்படும். இதையடுத்து, கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றார்கள். தற்போதையநிலையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை.குறைந்தது இன்னும் ஒரு மாதமாவது காத்திருக்க வேண்டியதிருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+