"தொட்டு பாருங்க".. வேற எங்காவது வெச்சுக்குங்க.. திமுக ஆர்.எஸ். பாரதிக்கு பாஜக வார்னிங்.. என்னவாம்?
ஆர்எஸ் பாரதியை ட்வீட் போட்டு கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக நாராயணன் திருப்பதி
சென்னை: அண்ணாமலையை பார்த்து நடுநடுங்கி, அச்சத்தில் உளறி கொட்டுகிறார் ஆர்.எஸ்.பாரதி. அண்ணாமலை மீது கை வைத்து பாருங்கள். இன்னும் வேதனைப்படுவீர்கள், வெட்கப்படுவீர்கள் என்று தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக ட்வீட் போட்டு எச்சரித்துள்ளார்.
திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கலைஞர் கருணாநிதி சாலை என்று பெயர் சூட்ட வேண்டும் என்று திருவாரூர் நகரசபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது.. இதையடுத்து, விரைவில் பெயர் மாற்றப்படும் என்றும் இன்னொரு தகவல் வெளியானது.
ஆனால், திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயரை சூட்டக்கூடாது என்று பாஜக முட்டுக்கட்டை போட்டது.. இதற்காகவே, திருவாரூரில் கண்டன போராட்டத்தையும் நடத்தியது..

கோட்டை - பாஜக
திமுகவின் செயல்பாடுகளை கண்டித்து பாஜக போராட்டம் நடத்துவது வழக்கம்தான் என்றாலும், திருவாரூரில் நடந்த பாஜக போராட்டம், கூடுதலான அதிர்வலையை அரசியல் களத்தில் ஏற்படுத்தியிருந்தது.. காரணம், கருணாநிதியின் கோட்டையான திருவாரூரில் அந்த அளவுக்கு பாஜகவினர் திரண்டிருந்ததுதான் வியப்பை தந்தது.. அத்துடன், விவாதத்தையும் கிளப்பியது... திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைத்தால் அரசை இயங்க விட மாட்டோம் என்று ஒருகட்டத்தில் அண்ணாமலை ஆவேசமாக எச்சரிக்கவும் செய்தார்.

கருணாநிதி பெயர்
இந்த எச்சரிக்கை குறித்து அப்போதே, திமுகவின் மூத்த தலைவரும், அமைச்சருமான கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.. அதற்கு நேரு, "ஏதாவது ஒரு விவகாரம் கையில் சிக்காதா என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள் பாஜகவினர்.. ஒரு அரசாங்கத்தை யாருமே நிறுத்தி வைக்க முடியாது... அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் யார் தடுத்தாலும் அவர்கள் மீது வழக்குப் பாயும் என்று கடுமையாக எச்சரித்திருந்தார்.. இப்படி இரு தரப்பு வாதங்களினால், கருணாநிதி பெயர் சூட்டும் திட்டம் செயல்படுத்தப்படாமல் அப்படியே இன்னமும் கிடப்பில் இருக்கிறது.

கருணாநிதி
இந்த நிலையில்தான், திருவாரூர் தெற்கு வீதியில் திராவிடர் கழகம் நடத்திய சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க மாநாட்டில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு பேசினார்... அப்போது அண்ணாமலையையும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியையையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.. 'திருவாரூரில் தெற்கு வீதிக்கு கலைஞர் பெயரை சூட்டக்கூடாது என்று அண்ணாமலை பேசியிருக்கிறாரே.. இந்த இடத்தில் அப்படி பேசிய அண்ணாமலை உதை வாங்காமல் போய் இருக்கிறார் என்றால் அதனை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.

கலைஞர்
அண்ணாமலையை இப்படி விமர்சித்ததற்கு, பாஜகவின் நாராயணன் திருப்பதி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. "திருவாரூரில் தெற்கு வீதிக்கு கலைஞர் பெயரை சூட்டக்கூடாது என்று சொல்லி விட்டு உதை வாங்காது போயிருக்கிறான் என்று சொன்னால் அதை கண்டு வெட்கப்படுகிறேன், நான் வேதனைப்படுகிறேன், இந்த மாநாடு அந்த உணர்வை மீண்டும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

வார்னிங்
அண்ணாமலையை பார்த்து நடுநடுங்கி, அச்சத்தில் உளறி கொட்டும் ஆர்.எஸ்.பாரதி அவர்களே, அண்ணாமலை மீது கை வைத்து பாருங்கள்... இன்னும் வேதனைப்படுவீர்கள்... இந்த மிரட்டல்களையெல்லாம் வேறு எங்காவது வைத்து கொள்ளுங்கள்... வன்முறையை தூண்டுவதை விட்டு விடுங்கள் இல்லையேல் மேலும் வெட்கப்படுவீர்கள்'' என்று ட்வீட் போட்டு வார்னிங் தந்துள்ளார். இதற்கு திமுகவினர் திரண்டு வந்து பதிலடியை தந்து கொண்டிருக்கிறார்கள்.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications