Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரியார் வாரிசு பவன் எங்கே போனார்? பாஜக கொடுத்த 2 லட்டு ஞாபகம் இருக்கா? பிரகாஷ் ராஜ் வெறித்தனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பவன் கல்யாண் லட்டு விவகாரத்தை வைத்து ஏன் அரசியல் செய்கிறார் என்பதற்கான விளக்கத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் மிகத் தெளிவாக முன்வைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் சில மாதங்கள் முன்பே உப்புசப்பு இல்லாமல் அடங்கிப் போய் கிடந்த சனாதன சர்ச்சை சங்கை மீண்டும் எடுத்து ஊதி இருக்கிறார் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண். ஒரு பக்கம் சந்திரபாபு நாடு தனது அரசியல் எதிரியான ஜெகன்மோகன் ரெட்டியை அரசியல் ரீதியாகப் பழிவாங்க வேண்டி திருப்பதி லட்டில் மாட்டின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு முன்னாள் முதல்வர் ஜெகன் தான் காரணம் என்றும் ஒரு பரபரப்பு புகாரை வைத்தார்.

pawan kalyan prakash raj

நாயுடுவின் பேச்சு இந்திய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஏழுமலையான் பக்தர்கள் மனதில் ஒரு பதற்றத்தை உண்டாக்கியது. உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி, சந்திரபாபு நாயுடுவின் கருத்தைக் கண்டித்தார். ஆதாரங்கள் வலுவாக இல்லை என்றும் கூறிய நீதிமன்றம், மதத்தை வைத்து அரசியல் செய்யவேண்டாம் என்றும் எச்சரித்திருந்தது. இப்போது பவன் லட்டு சர்ச்சையை ஒதுக்கி வைத்துவைத்து எப்போதே முடிந்துபோன உதயநிதி சனாதன பேச்சைப் பற்றி திருப்பதி கூட்டத்தில் பவன் ஆவேசமாகப் பேசி இருக்கிறார்.

அவர், “சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் சொல்கிறார். அவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். சனாதன தர்மத்தை அழிக்க முடியாது. அழிக்க நினைத்தால் நீங்கள்தான் அழிந்துவிடுவீர்கள்” என்றும் எச்சரித்திருக்கிறார். இதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "okay, Let's wait and see" என்று ஒரே வரியில் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதற்கு முன்னதாக ஆந்திராவில் நடைபெற்ற 'மெய்யழகன்’ விழாவில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தியிடம் தொகுப்பாளினி ஒருவர், 'கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?’ என வம்பிழுக்கும் படி கேள்வியைக் கேட்க, அதற்கு கார்த்தி, 'லட்டைப் பற்றி இப்போது பேச வேண்டாம். அது உணர்வு ரீதியான விசயம்’ என்று பதிலளித்திருந்தார். அதேபோல் நடிகர் பிரகாஷ்ராஜ் சில கேள்விகளை முன்வைத்திருந்தார். அதைக் கண்டிக்கும்படி பேசினார் பவன் கல்யாண். உடனடியாக மன்னிப்பு கேட்டார் நடிகர் கார்த்தி. அதுவும் சர்ச்சையானது. பிரகாஷ் ராஜ் தற்போது படப்பிடிப்பில் உள்ளதாகவும் விரைவில் தெளிவான விளக்கத்தை அளிக்கிறேன் என்று வீடியோ போட்டு பவன் கல்யாணிக்கு மறுமொழி கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது தமிழ்நாட்டில் உள்ள ஒரு பிரபல செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் பிரகாஷ் ராஜ் பல சந்தேகங்களைப் பவன் கல்யாண் குறித்து முன்வைத்துள்ளார். பிரகாஷ் ராஜ் பேட்டியில், “பவன் கல்யாண் எனக்குத் தெரிந்த நடிகர்தான். சில படங்களில் ஒன்றாகச் சேர்ந்து நடித்திருக்கிறோம். ஆகவே நண்பர்தான். இன்று துணை முதல்வராக இருக்கிறார். அவர் லட்டு விவகாரத்தைக் கிளப்பியதும் நான் சில கேள்விகளைக் கேட்டேன். அவர் ஒரு துணை முதல்வராக இருக்கிறார்.

அதிகாரம் அவர் கையில் உள்ளது. லட்டு விவகாரத்தை யார் தவறு செய்தார்களோ அவர்களைப் பிடித்து தண்டனை அளிக்க வேண்டியதுதானே? அதைவிட்டுவிட்டு ஏன் இதை ஒரு தேசிய பிரச்சினையாக்க வேண்டும்? என்று கேட்டேன். ஏற்கெனவே மத்தியில் ஆட்சியில் உள்ள பவன் கல்யாண் நண்பர்களால் பல பிரச்சினைகள் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரியான நேரத்தில் ஏன் இந்த லட்டு விவகாரம் ஒன்றும் தேவையா என்று கேட்டேன். அங்கிருந்து பிரச்சினை தொடங்கிவிட்டது.

ஒரு நாளைக்கு திருப்பதியில் லட்டு தயாரிக்க 1500 கிலோ நெய் தேவையாகிறது. அதற்கு ஒப்பந்தம் பெற்று நெய்யைக் கொள்முதல் செய்கிறார்கள். அதில் கடந்த ஜூன் மாதம் நெய்யில் ஏதோ ஒரு கலப்படம் உள்ளதாக ஒரு அறிக்கையில் தெரியவருகிறது. லேப் ரிப்போர்ட் ஏதோ கலப்படம் உள்ளது எனச் சொல்கிறதே தவிர, என்ன உள்ளது எனத் தெளிவாகச் சொல்லவில்லை. மாடு என்ன உண்கிறதோ அதனால் இந்தக் கலப்படம் வரலாம். ஜூன் மாதம் வந்த ரிப்போர்ட்டை அப்படியே வைத்துக் கொண்டிருந்துவிட்டு, செப்டம்பர் மாதம் இதைச் சர்ச்சையாக மாற்றுகிறார்கள்.

லேப் பரிசோதனைக்கு லட்டு அனுப்பப்படவில்லை. நெய்யைத்தான் அனுப்பி உள்ளனர். மொத்தம் 10 கண்டெய்னர் நெய் வந்துள்ளது. அதில் 2 மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. உடனே என்ன செய்ய வேண்டும்? நெய்யை விநியோகம் செய்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கவேண்டும். அந்த நிறுவனம் திண்டுக்கல்லில்தான் இருக்கிறது. வீரப்பனைப் போல காட்டுக்குள் ஒளிந்துகொண்டிருக்கவில்லை. ஒரு நிறுவனம் அனுப்பிய நெய்யில் கலப்படம் இருந்தால், அது அது நிர்வாக பிரச்சினை. உடனே துணை பவன் கல்யாண் சனாதன தர்மத்திற்கு ஆபத்து வந்துவிட்டது என்கிறார்.

ஜெகன்மோகனுக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் சண்டை என்றால், தனிப்பட்ட வகையில் மோதிக் கொள்ள வேண்டியதுதானே? அதற்கு ஏன் மக்கள் உணர்வில் விளையாடுகிறார்கள்? இன்று உச்சநீதிமன்றம், 'ஒரு லேப் ரிப்போர்ட் வந்தால் அதை உறுதி செய்ய 2வது சோதனைக்கு அனுப்பமாட்டீர்களா?’ என்று கேட்டிருக்கிறது. அதற்குப் பதில் இருக்கிறதா இவர்களிடம்? சனாதன தர்மத்தின் மீது தாக்குதல் நடந்துவிட்டதாம்? யார் தாக்கியது? லட்டு தயாரித்தவர் இந்து, அதை பரிசோதித்து அனுமதி அளித்தவர் இந்து, திண்டுக்கல் பால்பண்ணையை நடத்துபவர் இந்து யாருமே வேற்று மதத்தினர் இல்லை? அப்படி என்றால் யார் சனாதன தர்மத்தைத் தாக்கியது? இங்கே சனாதன தர்மத்திற்கு ஒரு ஆபத்தும் இல்லை. பாஜகவுக்குத்தான் ஆபத்து. பாஜகவின் செல்வாக்கு சரிந்து வருகிறது. சீட்டு குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் வேல் யாத்திரை என்றார்கள் ஒன்றுமே நடக்கவில்லை. கேரளாவில் ஐயப்பனைக் கையில் எடுத்தார்கள். எதுவும் நடக்கவில்லை. கர்நாடகாவில் பஜ்ரங் பலி என்றார்கள். ஒன்றுமே நடக்கவில்லை. அயோத்தியா என்றார்கள். கடைசியில் அயோத்தியிலேயே தோற்றுவிட்டார்கள். பவன் கல்யாண் சனாதன தர்மத்தை சொல்லியா தேர்தலில் வெற்றி பெற்றார்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன், விவசாயிகளுக்கு நலத் திட்டங்கள் செய்வேன் என்று சொல்லி வந்தார். அதைச் செய்யாமல் மதத்தை வைத்து ஏன் அரசியல் செய்ய நினைக்கிறார்? இன்றைக்கு பாஜகவை ஆதரிக்கும் பவன், 5 ஆண்டுகள் முன்னால் மோடியை விமர்சித்ததை நாங்கள் பார்க்கவில்லையா? தனி மாநில அந்தஸ்து மத்திய அரசு வழங்கியதா? ஒன்றுமே செய்யவில்லை. இரண்டு கையிலும் லட்டு கொடுத்துவிட்டது பாஜக என்று பேசவில்லையா?

நான் பெரியாரின் வாரிசு, சேகுவேரா வாரிசு, மதம் ஜாதி எனக்கு ஒன்றும் செய்யவில்லை என்று இதே பவன் கல்யாண்தானே அன்று பேசினார். ஆனால், இன்று 1% கூட வாக்கு வங்கி இல்லாத பாஜகவுக்கு 6 சீட்டுகளைக் கொடுத்து ஆந்திராவின் உள்ளே நுழைய வைத்துவிட்டார். பெரியாரும் பிஜேபியும் ஒன்றா? சேகுவேராவும் பாஜகவும் ஒன்றா?

இன்று சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒத்துழையாமை சட்டம் தேசிய அளவில் கொண்டுவரவேண்டுமாம். தாக்கி பேசிவரை தனிமைப்படுத்த வேண்டுமாம். எந்த மதமாக இருந்தாலும் விமர்சனத்திற்கு உட்பட்டதுதான். அனைவரும் சமம் என்று சட்டம் உள்ளது. அதைத்தான் பவன் பேச வேண்டும். சனாதன தர்மத்தை விமர்சித்ததால்தான் குழந்தை திருமணம் தடுக்கப்பட்டது. உடன்கட்டை ஏறுவது நின்றது. பெண்களை தள்ளிவைப்பது நின்றது. தீண்டாமை ஒழிக்கப்பட்டது. சனாதன தர்மத்தை விமர்சிக்காமலிருந்தால் இவை நடந்திருக்குமா?

சனாதன தர்மத்தை இத்தனை ஆண்டுகளாகப் பவனா காப்பாற்றினார். மக்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள். திடீரென்று திருப்பதியில் மெக்காலேவை பற்றி பேசுகிறார் பவன். மெக்காலே என்றால் யார் என்றே பவனுக்குத் தெரியாது. அதை அவர் பேசவில்லை. அது யார் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட் என்பது தெரியும். மெக்காலேதான் இந்தியாவில் சமமான கல்வியைக் கொண்டுவந்தார். அரசுப் பொதுப் பள்ளிகளில் அவர் கொண்டுவந்த கல்விக் கொள்கைதான் நடைமுறையில் இன்றும் உள்ளது. அதன் மீது என் பவன் கண் வைக்கிறார்.

மின்சாரத்தைக் கண்டுபிடித்தவன் யார்? அவர் கிறிஸ்துவன் எனப் பார்த்ததா பாஜக? பெட்ரோல் எங்கே இருந்து வருகிறது? அது முஸ்லிம் கொடுத்தது என பார்த்தார்களா? விமானத்தைக் கொடுத்தது யார்? அதில் பயணம் பண்ண மாட்டேன் என்றா சொல்கிறார்கள். மெக்காலேவை மட்டுமே வேண்டாம் என்று சொல்கிறார் பவன்? நான் கேட்டது லட்டைப் பற்றி. பவன் சனாதனம் பற்றி பேசுகிறார். நான் அதைப் பற்றிப் பேசவே இல்லை. எனக்கு அதைப்பற்றிப் பேச நேரமே இல்லை. பாஜக இங்கே பசுமை மோ மாதா என்கிறது. நாகலாந்து, மணிப்பூர் பாஜக தேசிய தலைமைக்குக் கடிதம் எழுதி இருக்கிறது. மோ மாத என்று சொல்லி என் தாயை அவமரியாதை செய்ய வேண்டாம். பசு எங்கள் ஊரில் கோ மாதா கிடையாது என்று அதில் தெரிவித்திருக்கிறார்கள்.

அங்கே பசு மாட்டை வைத்து பாஜகவினால் அரசியல் செய்ய முடியுமா? பிறகு ஏன் தென் இந்தியாவில் பசு மாட்டையும் கோயிலையும் வைத்து அரசியல் செய்கிறார்கள்? தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் அளவுக்கு வட நாட்டில் கோயில்கள் உள்ளதா? இங்கே உள்ள சுத்தம் அங்கே உள்ளதா? பிறகு ஏன் தமிழ்நாட்டைக் கோயிலை வடநாட்டுக் கோயிலுடன் ஒப்பிடுகிறார்கள்? பாஜக வந்த பிறகுதான் தமிழ்நாட்டுக் கோயில் காப்பாற்றப்பட்டுள்ளதா என்ன? இங்கே ஆயிரக்கணக்கான வருடங்களாக பாஜக இருக்கிறது. திருப்பதி இருக்கிறது. அதை எல்லாம் பவனா காப்பாற்றினார்?” என்று பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+