பஞ்சு பஞ்சா போச்சே.. ஓங்கியடித்த பாஜக.. காரணமே "அவர்"தானா.. அதைவிடுங்க.. அடுத்த குறி "அங்கே"தான்
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது நடவடிக்கையால், தமிழகமே பரபரத்து கிடக்கிறது.. ஆனால், அதிமுக கப்சிப்பென்று அமைதியாக இருக்கிறதே? என்ன காரணம்?
செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. எய்ம்ஸ் டாக்டர்கள் ஒருபக்கம்,, ஓமந்தூரார் டாக்டர்கள் மறுபக்கம் என பரபரத்து கொண்டிருக்கிறது. இன்று மதியம், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வருகிறது.
மற்றொருபுறம், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அது கைது தானா? இல்லை தடுப்புக் காவலா? என்று எதையும் இதுவரை அமலாக்கத் துறை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தாலேயே உள்ளது.. தமிழக அரசுத் தரப்பிலும் இதுவரை அமைச்சர் கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது மேலும் குழப்பத்தை தந்து வருகிறது.

அதிமுக அமைதி: இதற்கு நடுவில் திமுக தரப்பு கடுங் கொந்தளிப்பில் உள்ளது.. நடந்தவை எல்லாம் மனித மீறல் நடவடிக்கை என்று குற்றஞ்சாட்டி வருகிறது. இப்படி நாலாபக்கமும் டென்ஷன்கள் எகிறி வரும்நிலையில், அதிமுக சத்தமே இல்லாமல் இருக்கிறது..
சைலண்ட்: இந்த கைது நடவடிக்கைக்கு எந்தவிதமான கருத்துக்களையும் சொல்லவில்லை.. திமுகவை விடாமல் விமர்சித்து வரும் எடப்பாடி பழனிசாமியும் கருத்து சொல்லவில்லை.. ஒட்டுமொத்த அதிமுகவே கப்சிப் மோடில் உள்ளது..
ஜெயக்குமார் மட்டும் பேட்டி தந்துள்ளார்.. வழக்கம்போல் திமுகவைதான் திட்டி உள்ளார்.. "காலையில் ஆரோக்கியமாக நடைப்பயிற்சி சென்று வந்த செந்தில் பாலாஜிக்கு, அமலாக்கத்துறை விசாரணை என்றதும் நெஞ்சுவலி வந்துவிடுமா? கடமையை செய்ய வந்த அதிகாரி ஒருவரை அவர் எட்டி உதைத்திருக்கிறார். நெஞ்சுவலி வந்தவர்களால் எட்டி உதைக்க முடியுமா?" என்று கேட்டுள்ளார்.
ஆனால், எந்த குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது என்பதை மட்டும் கவனமாக தவிர்த்து விட்டார். எனினும், பாஜக தரப்பு மட்டும்தான், இந்த கைது நடவடிக்கையை, கிண்டல் அடித்தும், விமர்சித்தும் ரியாக்ட் செய்து கொண்டிருக்கிறது.
பாய்ச்சல்: அதிமுகவின் பெருத்த அமைதிக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி கைதின் மூலமாக திமுக - அதிமுக என தமிழகத்தின் 2 பெரிய கட்சிகளையும் பாஜக வாயடைக்க செய்திருப்பதாகவே பாஜகவினர் கருதுகிறார்களாம். சமீபத்தில் உள்துறை அமைச்சர் தமிழகம் வந்து சென்றபோதே, திமுகவுக்கு எதிரான மத்திய விசாரணை அமைப்புகளின் பாய்ச்சல் நிச்சயம் நடக்கும் என்று பாஜக தரப்பில் சொல்லப்பட்டது.
ஆக்ரோஷம்: அதற்கேற்றபடியே, மீண்டும் ரெய்டு நடந்தது.. இத்தனை நாட்களும், செந்தில் பாலாஜியை சுற்றி நடந்து கொண்டிருந்த ரெய்டு, இப்போது நேரடியாகவே பாய்ந்தது.. தலைமை செயலகத்தில் அமைச்சரின் அறைக்குள்ளேயே புகுந்து மத்திய விசாரணை அமைப்பின் ஆய்வு தொடர்ந்தது, தமிழகத்தையே அதிர செய்தது.. டெல்லிவரை இந்த சம்பவம் எதிரொலிக்கவும் செய்தது. நள்ளிரவில் கைது என்றதுமே, திமுக ஆக்ரோஷமாகிவிட்டது..
அமலாக்கத்துறை: கைது, விசாரணை வேண்டுமானால் நடக்கும் என்றே எதிர்பார்த்தனர்.. அமலாக்கத்துறைக்கு அழைத்து சென்று விசாரிப்பதுதான், உச்சக்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று நினைத்தனர்.. ஆனால், இந்த கைது நடவடிக்கையை திமுக கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. மனித உரிமை மீறல் என்றும், விதிகளை பின்பற்றவில்லை என்றுமட்டுமே திமுக குற்றஞ்சாட்டி வருகிறதே தவிர, அதற்கு மேல் கேஸ், விசாரணை, வழக்கிற்குள்ளே திமுக செல்ல முடியவில்லை.. உள்ளே செல்லவும் முடியாது.
சட்டசிக்கல்களும், திமுகவின் கொந்தளிப்புகளும் இப்படியிருக்க, அதிமுகவோ சத்தமே இல்லாமல் உள்ளது.. நேற்றுதான், ஒரு தீர்மானத்தை அதிமுக நிறைவேற்றியது.. நேற்று முன்தினம் அண்ணாமலை மீது ஜெயக்குமார் பாய்ந்திருந்த நிலையில், நேற்றைய அதிமுக கூட்டத்தில், பாஜவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருந்ததில், அதிருப்தியின் வெடிப்புகள் தென்பட்டன.

அதிரடி பாராட்டு: அண்ணாமலை மீதான மோதலை இது வெளிப்படுத்தினாலும், இதையும், பாஜக தனக்கு பிளஸ் பாயிண்ட்டாகவே பார்க்கிறது.. பாஜகவை எதிர்த்து தீர்மானத்தை அதிமுக இயற்றுகிறது என்றால், தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அரசு சக்தியாக உருவெடுத்து இருப்பதை உறுதி செய்கிறது என்றும், அண்ணாமலையை மக்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள், அந்த பயத்தின் வெளிப்பாடாக அதிமுக தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறது என்றும் தமிழக பாஜகவின் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் தெரிவித்திருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில்தான், செந்தில்பாலாஜியின் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது.. இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.. அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோதுதான், இந்த ஊழல் நடந்தாக சொல்கிறார்கள்.. அதன் தொடர்ச்சிதான், இப்போது அமலாக்கத்துறை வந்து நிற்க வைத்துள்ளது.. அதனால், இந்த கைது நடவடிக்கைகள் அதிமுகவுக்கு எதிரானதாகவும் மாறியிருக்கிறதாம்.
லிஸ்ட் வருது: காரணம், திமுகவை போலவே, அதிமுகவையும் அண்ணாமலை தாக்கி வருகிறார்.. ஓபனாகவே டேமேஜ் செய்து வருகிறார்.. தாங்கள்தான் எதிர்க்கட்சி என்பதையும் விடாமல் பகிரங்கப்படுத்தி வருகிறார்.. அதுமட்டுமல்ல, திமுக அமைச்சர்களின் ஊழல் லிஸ்ட் வெளியிட்டபோதே, அதிமுகவையும் சீண்டியிருந்தார்.. "அதிமுக ஃபைல்ஸ்" வெளியாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.. இது அத்தனையையும் எடப்பாடி தரப்பு கவனிக்காமல் இல்லை..
இன்னொன்றையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும்.. திமுகவுக்கு எதிராக அதிமுக போராட்டம் செய்தால் பின்னாடியே வந்து பாஜகவும் போராட்டத்தை அறிவித்து வந்தது. கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுக பேரணியை அறிவித்தால், அண்ணாமலையும் உடனே வந்து போராட்டத்தை அறிவித்தார்.. இதையும் அதிமுக தரப்பு கவனிக்காமல் இல்லை..
மோதல்கள்: இதைத்தவிர, காட்டமான மோதல்கள், குற்றச்சாட்டுகள், சவால்கள், என ஒவ்வொன்றையும் அதிமுகவை நோக்கி பாஜக தரப்பு வீசிக்கொண்டேயிருந்தது.. போதாக்குறைக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், சீண்டிஇழுத்து வந்து அண்ணாமலை விமர்சித்துவிட்டார்.. ஓபிஎஸ் உட்பட மொத்த அதிமுகவும் இதற்கு எதிராக கொந்தளித்து ஆவேசமாகினர்.. தமிழக பாஜக மீது தொடர் பாய்ச்சலுக்கு தயாரான நேரத்தில்தான், செந்தில் பாலாஜியின் கைது சம்பவம் நடந்துள்ளது.
எனவே, இது திமுக மட்டுமன்றி அதிமுகவுக்கும் எதிரான நகர்வாகவே பார்க்கப்பட்டு வருகிறது.. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பணமோசடி விவகாரம் என்பதால், இந்த விஷயத்தில் அதிமுக வாய் திறக்கவில்லையா? அல்லது அமலாக்கத்துறை நேரடியாகவே குறி வைத்து இறங்கி உள்ளதால் வாய் திறக்கவில்லையா? அல்லது "அதிமுக பைல்ஸ்" வெளிவரும் என்று எச்சரித்ததால், வாய் திறக்கவில்லையா? அல்லது, ஆயிரம் இருந்தாலும், தங்களது சக தோழமையான திராவிடர் கட்சி என்பதால் வாய் திறக்கவில்லையா? என்று தெரியிவல்லை..
நடவடிக்கை: ஆனால், திமுகவை போலவே அதிமுகவும் அதிர்ச்சியில் உள்ளதாக சொல்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும், நடந்து கொண்டிருக்கும் அத்தனை சம்பவங்களையும் பார்த்து, தமிழக பாஜக தலைமையை பாராட்டி கொண்டிருக்கிறார்கள் தாமரை கட்சியினர்..!!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications