"ஓ மை காட்".. பக்கத்தில படுத்திருந்த புது மனைவியை காணோமாமே.. பதறினாரே நடராஜன்.. கடைசியில் பார்த்தால்?
திருமண மோசடி செய்து ஏமாற்றிவிட்டு மாயமான தாம்பரம் பெண் போலீசில் சிக்கினார்
சென்னை: பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த புதுபொண்டாட்டியை காணோம் என்று நடராஜன், பதறிபோய் தேடி கொண்டிருந்தாரே,, அந்த மனைவி இப்போது கிடைத்துவிட்டாராம்.. ஆனால் நடராஜன்தான் பேயறைந்த மாதிரி இருக்கிறார்.. என்ன காரணம்?
தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன்.. 25 வயதாகிறது.. இவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது, முடிச்சூர் சாலையில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்த அபிநயா என்பவருடன் நடராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அபிநயாவுக்கு 28 வயாகிறது..

ஹாஸ்டல்
இவர்களின் பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது..2 பேரும் கல்யாணம் செய்ய முடிவெடுத்தனர்.. ஆனால், தான் குடும்பத்தாருடன் கோபித்து கொண்டு வந்துவிட்டதாகவும், தனக்காக திருமணத்தை பற்றி பேச யாருமே இல்லை என்றும் சொன்னார்.. மேலும் வீட்டில், பெற்றோருடன் சண்டை போட்டுக்கொண்டு, ஒரு ஹாஸ்டலில் தற்சமயம் தங்கி இருப்பதாகவும், தான் ஒரு அனாதை என்றும் சொன்னார்.. ஏற்கனவே காதலில் விழுந்து கிடந்த நடராஜனுக்கு, அபிநயா இப்படி சொன்னதும், மேலும் பரிவும், பரிதாபமும் அதிகமானது..

நைட் காணோம்
உடனே தன்னுடைய பெற்றோரிடம் இந்த காதலை பற்றி எடுத்து சொல்லி, கல்யாணத்துக்கும் சம்மதம் வாங்கினார்.. கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ரங்கனாதபுரம் பெருமாள் கோவிலில், பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் இந்த திருமணம் நடந்துள்ளது.. தம்பதியும் மணவாழ்க்கையை சிறப்பாக தொடங்கினர். இந்நிலையில், அக்டோபர் 19ம் தேதி இரவு, பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த அபிநயா திடீரென காணாமல் போய்விட்டதால் பதறி போனார்..

மிஸ்ஸாயிடுச்சு
இதனால் அதிர்ச்சி அடைந்து எங்கெங்கோ தேடி பார்த்தும், மனைவியை காணவில்லை.. செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகு பீரோவை திறந்து பார்த்தால், அங்கே 17 சவரன் நகையை காணோமாம்.. 20,000 ரொக்க பணமும் மிஸ்ஸிங்.. அப்போதுதான் அதிர்ந்து போன நடராஜன், தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்.. பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு போன பெண் குறித்து புகார் தந்தார்.. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அபிநயாவின் ஆதார் கார்டை கைப்பற்றி, அதிலுள்ள அட்ரஸுக்கு விரைந்தனர்...

டுபாக்கூர் அட்ரஸ்
விரைவில் அபிநயா கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.. ஆனாலும், அது உண்மையான அட்ரஸ்தானா? என்று தெரியவில்லை.. தன் மேலுள்ள காதலால்தான், குடும்பத்தையும் உதறி தள்ளிவிட்டு கல்யாணம் செய்து கொண்டாரே என்று நடராஜன் நினைத்தாராம்.. அதனால், அபிநயா மீது கோபமும் பெரிதாக வரவில்லை.. எனினும், திடீரென அபிநயா மாயமானதும்தான் அவரை பற்றி விசாரிக்க ஆரம்பித்துள்ளார்.. ஆரம்பமே அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது..

கயல்விழியாள்
அந்த பெண்ணின் பெயர் அத்தனை நாளும் கயல்விழி என்றே பொய் சொல்லி வந்துள்ளார்.. பிறகுதான் அபிநயா என்பது உண்மையான பெயர் என தெரியவந்துள்ளது.. இவர் மதுரையை சேர்ந்தவர் என்பதும் பிறகுதான் நடராஜனுக்கு தெரியவந்துள்ளது.. அதனால் மதுரை போலீசாருக்கும் அபிநயா பற்றின தகவல் தரப்பட்டுள்ளதாம்.. சென்னை மற்றும் மதுரை போலீசார் அபிநயாவை தேட துவங்கினர். இறுதியில், செம்மஞ்சேரி பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் அபிநயா தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது..

கல்யாணம்
உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த லாட்ஜில் தங்கியிருந்த அபிநயாவை மடக்கி பிடித்து கைது செய்தனர்... அவரிடம் இருந்து 4 பவுன் நகையும் மீட்கப்பட்டது. பிறகு அபிநயாவிடம் விசாரணை ஆரம்பமானது.. ஏற்கனவே ஊர், பெயர் மாற்றி சொன்னதற்கே நடராஜன் அதிர்ச்சியானார்.. இப்போது போலீஸ் விசாரணையில் இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியானது. அபிநயாவுக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதாம்.. 8 வயதில் ஒரு மகன் இருக்கிறானாம்.. கணவரும், மகனும் எங்கே என்று தெரியவில்லை.. இன்னொரு அதிர்ச்சியும் நடராஜனுக்கு காத்திருந்தது..

ஷாக் 1
இந்த கல்யாணத்துக்கு முன்பு, ஏற்கனவே 3 பேரை கல்யாணம் செய்தவராம் அபிநயா.. 2011-ல் மன்னார்குடியை சேர்ந்த இளைஞருடன் முதல் திருமணம் நடந்தது.. ஜஸ்ட் 10 நாளிலேயே அவரை ஏமாற்றிவிட்டு ஓடிவந்துவிட்டார்.. பிறகு, மதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்துள்ளார்.. அவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளான்... அங்கிருந்து ஓட்டம் பிடித்த அபிநயா, கேளம்பாக்கத்தில் இன்னொரு இளைஞரை ஏமாற்றி திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார்..

ஷாக் 2
10 நாளில் அவரையும் உதறிவிட்டு ஊரப்பாக்கத்தில் தங்கி இருந்தபோது நடராஜனை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து நகை-பணத்துடன் ஓட்டம் பிடித்துள்ளார்.. அபிநயா வேலைக்காக ஒவ்வொரு இடங்களில் தங்கும்போதும், அங்கு பழக்கமாகும் இளைஞர்களை குறி வைத்து கல்யாணம் செய்து, நகை-பணத்தை சுருட்டி கொள்வாராம்.. விசாரணை அபிநயாவிடம் நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால், கடைசியாக, அதாவது 4வதாக வாக்கப்பட்ட நடராஜன், இன்னும் அதிர்ச்சி விலகாமல் உள்ளார்.












Click it and Unblock the Notifications