Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வெட்டு 1 துண்டு 5".. ஹிட்லிஸ்ட் இதான்.. "அவரே" சொல்லிட்டாராமே.. எகிறியடிக்கும் பாஜக.. அப்ப எடப்பாடி

தமிழக பாஜக களமிறங்கி 5 தொகுதிகளில் தீவிரப்பணியாற்றி வருகிறதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் எம்பி தேர்தலுக்கு தமிழக பாஜக மொத்தம் 10 தொகுதிகளை குறி வைத்து, களப்பணியில் இறங்க போவதாக செய்திகள் பரபரக்கின்றன.

எடப்பாடியை பொறுத்தவரை, ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தயாராக இல்லை.. கட்சி 95 சதவீதம் தன்னிடம், நிர்வாகிகளும் தன்னிடம் உள்ளதால், தன்னையே தலைமையாக அங்கீகரிக்க சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி..

ஆனல், பாஜக மேலிடமோ ஒருங்கிணைந்த அதிமுகவை எதிர்நோக்கி வருகிறது.. எடப்பாடி பழனிசாமி அதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில், தனித்து போட்டியிடவும் பாஜக தயாராகி வருவதாக தெரிகிறது.

 5, 6, சீட்டா

5, 6, சீட்டா

கடந்த வாரம், கமலாலயத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் நிர்வாகிகளிடம் அண்ணாமலை பேசியபோது, அதிமுக கூட்டணியை முழுமையாக நம்பிவிட முடியாது.. அந்த கட்சி பிளவுபட்டு உள்ளது.. உட்கட்சி பூசலும் தீரவில்லை.. வழக்கு கோர்ட்டிலும் உள்ளது, தேர்தல் ஆணையத்திலும் உள்ளது.. அதனால் நாம் யார் பக்கமும் இப்போதே ஓட முடியாது. அதுவும் 5, 6 சீட்களுக்காக யாரிடமும் தொங்கி நின்று, அவர்கள் கொடுக்கும் தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்றிரண்டு சீட்டுகள் ஜெயிப்பதிலும் விருப்பமில்லை.. இதை பிரதமரிடம் நான் எடுத்து சொல்லவும், தனித்து போட்டியிட பிரதமரும் பச்சைக்கொடி காட்டி விட்டார்.. தனித்துப் போட்டியிடும் அளவுக்கு, நாம் வளர்ந்தாக வேண்டும் என்று அண்ணாமலை பேசியிருந்தது, தமிழக கட்சிகளின் கவனத்தையும் பெற்று வருகிறது.

 மேஜர் தொகுதி

மேஜர் தொகுதி

10 தொகுதிகளுக்கு பாஜக குறி வைத்துள்ள நிலையில், அதில் 5 தொகுதிகளில் தீவிர கவனத்தை செலுத்தி வருகிறதாம். அந்த 5 தொகுதிகளிலும் திமுகவும், அதிமுகவும் ஏற்கனவே வலிமையாக உள்ளன.. எனினும், தங்களுக்கான செல்வாக்கை அங்கு மேலும் அதிகரித்து, அந்த தொகுதியை தங்கள் பக்கம் கொண்டுவரும் வியூகத்தையும் பாஜக கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.. அந்த கன்னியாகுமரி, தென்சென்னை, கோவை, நீலகிரி, ராமநாதபுரம் போன்றவைதான் அந்த மேஜர் தொகுதிகள்.

 முதல் பார்வை

முதல் பார்வை

கன்னியாகுமரியை பொறுத்தவரை பாஜக இங்கு வலுவாக உள்ளது.. குமரியில்தான், பாஜகவுக்கு எல்லா காலகட்டத்திலும் பிரதிநிதிகள் இருந்திருக்கிறார்கள்.. கூட்டணியில் இணைந்து போட்டியிட்டாலும் சரி, அல்லது தனித்து போட்டியிட்டாலும்சரி, ஒரு தொகுதியில் தவறாமல் பாஜக போட்டியிடுகிறது என்றால், அது கன்னியாகுமரிதான்.. அதனால்தான், குமரியை முதல் தொகுதியாகவும், முதன்மை தொகுதியாகவும் பாஜக குறி வைத்துள்ளது.. அதற்காகவே, தன் கவனத்தை மாற்றுத்திறனாளிகளின் பக்கமும் திருப்பி உள்ளதாக தெரிகிறது.

 சக்‌ஷம்மா

சக்‌ஷம்மா

ஆர்எஸ்எஸ் பின்னணியில் இயங்கக்கூடியதுதான் "சக்‌ஷம்" என்ற அமைப்பானது, மாற்றுத்திறனாளிகள் அமைப்பாகும்.. இந்த அமைப்பில்தான், தன்னுடைய கூடுதல் கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளது.. இதற்கான முதல் முன்னெடுப்பையும் நாகர்கோவில் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கையில்எடுத்துவிட்டார்.. மத்திய அரசு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் குறைந்த வட்டியிலான தொழில் கடன், மத்திய அரசின் பங்களிப்போடு வழங்கப்படும் உதவிகள், முத்ரா லோன் போன்றவைகளை, மாற்றுத்திறனாளிகளுக்கு பெற்றுத்தருவதற்கு ஆர்எஸ்எஸ் சேவகர்கள் முன்னின்று செயலாற்ற வேண்டும் என்று மேலிட தலைமையில் இருந்தே உத்தரவும் வந்துள்ளதாம்.

 வானதி செக்

வானதி செக்

இதைதவிர நலத்திட்ட உதவிகள் உட்பட, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக துரிதமாக களமிறங்கி உள்ளது. எந்த அளவுக்கு கன்னியாகுமரியில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளதோ, அதற்கு நிகராகவே கோவையிலும் உள்ளது என்று சொல்லலாம்.. பாஜகவின் எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், போன்ற தலைவர்களை உருவாக்கிய இந்த கொங்குவையும் குறி வைத்துள்ளது பாஜக.. அதிமுகவின் கோட்டையான கொங்குவை, தங்கள் பக்கம் திமுக மெல்ல மெல்ல திருப்பி வரும்நிலையில், பாஜகவும் இந்த ரேஸில் சேர்ந்துள்ளது.

 டாப்லிஸ்ட்

டாப்லிஸ்ட்

அதனால்தான், பாஜகவின் குறி, நீலகிரி வரை வாய்ந்துள்ளது.. நீலகிரியை பொறுத்தவரை, திமுக, அதிமுக என்ற 2 திராவிட கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோதும், பாஜக போட்டியிட்ட தொகுதி இதுவாகும்.. கடந்த 2019 எம்பி தேர்தலிலேயே அதிமுக கூட்டணியில் நீலகிரியை பாஜகவுக்கு ஒதுக்கப்படலாம் என்ற செய்திகளும் கசிந்தன.. எனவே, இந்த முறை, நீலகிரியை டாப்லிஸ்ட்டில் கொண்டு வந்துள்ளது பாஜக.. அதுமட்டுமல்ல, இந்த தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பதையும் முடிவு செய்துவிட்டதாகவே சொல்கிறார்கள்.. தொகுதியில் ஓபனாகவே இறங்கி தேர்தல் வேலையையும் பார்க்கவும் துவங்கிவிட்டார்களாம்.

 புண்ணியக்கோடி

புண்ணியக்கோடி

அடுத்ததாக ராமநாதபுரம் மக்களவை தொகுதி என்பது, பாஜகவுக்கு சித்தாந்த ரீதியில் மிகவும் அடிப்படையிலானது.. அதாவது வடக்கில் காசியும், தெற்கில் ராமேஸ்வரமும் இந்துக்களான புனித தலமாகும்.. காசியை உள்ளடக்கிய வாரணாசி தொகுதி வடக்கில் உள்ளதுபோல, தெற்கில் ராமேஸ்வரத்தை உள்ளடக்கிய ராமநாதபுர தொகுதியையும் வளைத்து பிடித்துவிட வேண்டும் என்பதே அவர்களின் முனைப்பாக உள்ளது.. அதனால்தான், கடந்த எம்பி தேர்தலின்போதே, அதிமுக கூட்டணியில் இருந்தபோது, இந்த ராமநாதபுர தொகுதியை பாஜக கேட்டு வாங்கியது.

 ஹிட் லிஸ்ட்

ஹிட் லிஸ்ட்

அந்தவகையில், இந்த முறையும் ராமநாதபுரம் லிஸ்ட்டில் உள்ளது. அதுமட்டுமல்ல 2014 எம்பி தேர்தலின்போது, தமிழகத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த ஒருசில தொகுதியில் இந்த ராமநாதபுரமும் ஒன்றாகும்.. இந்த முறை ராமநாதபுரதத்தில் இருந்து, பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்றும், அர்ஜுன் சம்பத் முதல் முக்கிய தலைவர்கள் வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.. பிரதமர் மோடி, ராமநாதபுரத்தில் போட்டியிடுவாரா? என்று உறுதியாக தெரியவில்லை என்றாலும், நிச்சயம் இந்த முறை பிரச்சாரம் செய்ய நிறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

 பிராமணர்கள்

பிராமணர்கள்

தென்சென்னை எம்பி தொகுதியை பொறுத்தவரை, பாஜகவுக்கு கை கொடுக்கக்கூடிய தொகுதி.. காரணம், இங்கு படித்தவர்கள் அதிகம் உள்ளார்கள்.. பிராமணர்கள் அதிகம் உள்ள தொகுதியும்கூட.. கடந்த 2014 தேர்தலில், அதிமுக அபார வெற்றி பெற்றநிலையில், சில இடங்களில் பாஜக வேட்பாளர்கள் திமுகவை விட அதிக வாக்குகளை பெற்றிருந்தனர்.. இதில் தென்சென்னையில் போட்டியிட்ட மூத்த தலைவர் இல.கணேசன், நூலிழை வித்தியாசத்தில்தான் வாய்ப்பை தவறவிட்டிருந்த நிலையில், இந்த முறை தென்சென்னையை பாஜக தட்டி தூக்க பிளான் செய்துள்ளதாம். கடந்த முறை தூத்துக்குடியில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தராஜன், இந்த தென்சென்னைக்கு குறி வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.

 பசை பார்ட்டி

பசை பார்ட்டி

இப்படி பிரதான 5 தொகுதிகளில் பாஜக கவனத்தை துவக்கி உள்ளது, அதிமுகவை கவனிக்க வைத்து வருகிறது.. இந்த 5 தொகுதிகள் போக, சிவகங்கை, நெல்லை, உட்பட மற்ற 5 தொகுதிகளை பாஜக சீக்ரெட்டாகவே வைத்திருக்கிறதாம்.. இதில் பெரும்பாலும், தென்மண்டலங்களை சார்ந்த தொகுதிகள்தான் என்கிறார்கள்.. அதற்கான வேலைகளும் நடக்கிறது.. எப்படியும் அதிமுக கூட்டணியில், இரட்டை இலக்க சீட்டுக்களை பெற்று அவைகளுக்கெல்லாம் பணத்தை வாரி இறைப்பதைவிட, செல்வாக்குள்ள தொகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அங்கு இப்போதே களப்பணியாற்றினால், நிச்சயம் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று பாஜக நம்புகிறது.. அந்த நம்பிக்கைதான் 5 தொகுதிகளிலும் வேகம் எடுத்துள்ளது.. பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+