வேலூரில் "வேர்" விட்ட தாமரை.. பாஜக அண்ணாமலை சொன்னதை செஞ்சிடுவார் போல.. மோடி வேற வர்றாரு.. திமுக ரெடி
சென்னை: பிப்ரவரி 2வது வாரத்தில், மறுபடியும் பிரதமர் மோடி சென்னை வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு சில காரணங்களும் யூகங்களாக வலம்வர துவங்கியிருக்கின்றன.
பிரம்மாண்டமான, அதேசமயம் வலுவாக உள்ள தேசிய கட்சிதான் பாஜக.. வடமாநிலங்களில் பெருத்த செல்வாக்குடன் வலம்வரும் இந்த கட்சி, கடந்த 2 வருடங்களில் நடந்த சில தேர்தல்களில் சறுக்கல்களை தழுவி வருகிறது..

ஆம் ஆத்மி: சில இடங்களில் முட்டிமோதி "ஜஸ்ட் பாஸ்" வெற்றியை பெற்று வருகிறது. இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸின் சுறுசுறுப்பும், ஆம் ஆத்மியின் எழுச்சியும்தான். இந்த 2 கட்சிகளும், பாஜகவை முந்திக்கொண்டு மேலெழுந்து கொண்டிருக்கின்றன..
இதன்காரணமாக, தங்களுடைய கோட்டை என்று கருதக்கூடிய வடமாநிலங்களில், ஒருசில இடங்களில் சறுக்கலை சந்திக்க நேரிட்டது. அந்தவகையில், பஞ்சாப் உள்ளிட்டவைகளில் கோட்டை விட்டதை, தென்மாநிலங்களில் எட்டிப்பிடித்துவிட, பாஜக முயன்று வருகிறது. அந்தவகையில், தமிழகத்திலும் வாக்கு வங்கியையும் கணிசமாக உயர்த்தி, வரும் தேர்தலில் குறைந்தது 10 "தாமரைகளையாவது" டெல்லிக்கு அனுப்பிவிட வேண்டும் என்பலும் முனைப்பு காட்டி வருகிறது.
அழுத்தமான பார்வை: இதற்காக தமிழகத்தின் மீது மேலிட தலைவர்களின் பார்வை அழுத்தமாகவே விழுந்து வருகிறது. ஆனால், கூட்டணி இன்னும் அமையவில்லை.. எந்த கட்சியும் வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. எப்படியும் பாஜக தலைமையிலேயே 3வது அணி அமையக்கூடும் என்று சொல்கிறார்கள்.
அதற்கேற்றவாறு, அதிமுக அமைதியாகவே இருக்கிறது.. இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை.. ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி வைத்தவர்கள்கூட, தங்கள் ஆதரவை தரவில்லை.
இதையெல்லாம்தான், பாஜக தனக்கு சாதகமாக்க முயன்று கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு, திமுக அரசின் ஒவ்வொரு அசைவையும் விமர்சித்து, தங்களுக்கான முக்கியத்துவத்தை பதிய வைத்து வருகிறது.. மேலும், தங்களுக்கு சாதகமான 10 தொகுதிகளை அடையாளம் கண்டு அங்கே தேர்தல் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார் அண்ணாமலை.
பாஜக: அதுமட்டுமல்ல, அதிமுகவை விட ஒரு தொகுதி கூடுதலாக ஜெயித்தாலும், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்பதை நிரூபிக்கவே பாஜக இப்படியான "காய்களை" நகர்த்தி வருகிறது. இந்த இலக்கை அடைவதற்காகவே பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்து போவதாக தெரிகிறது..
இந்த ஜனவரி ஒரே மாதத்தில் மட்டும், 2 முறை தமிழகம் வந்து சென்றுவிட்டார். மறுபடியும் தமிழகம் வரப்போகிறார்.. அதுவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை நிறைவுவிழாவில் பங்கேற்க போகிறார் மோடி.
தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தவும், மத்தியில் மோடியின் தலைமையிலான ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும், நடைபயணத்தை கையில் எடுத்துள்ள அண்ணாமலை. 200வது தொகுதியாக வேலூர் பகுதியில் இந்த சுற்றுப்பயணத்தை முடிக்கிறார்.
யாத்திரை: இதையொட்டி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கவே, பிப்ரவரி 11ம் தேதி தேசிய தலைவர் நட்டா வருகிறார். அதையடுத்து சென்னை பகுதியில் மீதமுள்ள தொகுதிகளில் யாத்திரையில் ஈடுபடும் அண்ணாமலை பிப்ரவரி 18ல் யாத்திரையை நிறைவு செய்கிறார். பிப்ரவரி 18 அல்லது 24ல் திருப்பூரில் பாதயாத்திரை நிறைவு விழா நடக்கவுள்ளது. அதில் பங்கேற்கவே பிரதமர் மோடி வர உள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டி உள்ளது.. வடமாவட்டங்களில் பலத்தை கூட்ட வேண்டும் என்று மேலிட பாஜக கடந்த வருடமே முடிவெடுத்திருந்தது. அதனால்தான், பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டத்தில் கலந்து கொள்ள, உள்துறை செயலாளர் அமித்ஷாவே நேரடியாகவே வேலூருக்கு வந்திருந்தார். "எம்பி தேர்தலில் வேலூர் தொகுதியை வெல்வது மட்டுமே நம்முடைய ஒரே இலக்காக இருக்கிறது" என்று அண்ணாமலையும் அந்த கூட்டத்தில் பேசியிருந்தார்.
வேலூர்: இப்படிப்பட்ட சூழலில், 200வது தொகுதியாக இதே வேலூரில் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடிக்கிறார் அண்ணாமலை.. இதில்தான் தேசிய தலைவர் நட்டாவும், இதன் நிறைவுவிழாவில் பிரதமரும் பங்கேற்க உள்ளார்கள்.
ஆக, 3வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் நோக்கி வருவது, பாஜகவினரிடம் நம்பிக்கையையும், தெம்பையும் ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட்டால் அது அதிமுகவுக்கும் இன்னும் சவாலாக அமைந்துவிடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.. இந்நிகழ்வுகளை எல்லாம், திமுக, அதிமுக தரப்பினரும் உற்று கவனித்தபடியே உள்ளார்கள்.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
நாகர்கோவிலில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடி.. வழிநெடுக பூக்கள் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications