"சாயும்" புள்ளி?.. எடப்பாடி தந்த க்ளூ.. திமுகவில் 'அவர்' சேர போகிறாரா.. பரபர அறிவாலயம்.. என்னாச்சு
எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல், ஓபிஎஸ் திமுகவில் இணைய போகிறாரா
சென்னை: ஓபிஎஸ் திமுகவின் கைக்கூலி என்று ஒட்டுமொத்த எடப்பாடி டீமும் குற்றஞ்சாட்டி விட்ட நிலையில், அதற்கான வாய்ப்பு இருக்குமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒற்றை தலைமை என்ற இலக்கை அடைந்துவிட்ட மகிழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் இருக்கின்றனர்.
மற்றொரு புறம், எல்லா பக்கமும் சறுக்கலிலும், அப்செட்டிலும் ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் உள்ளனர்.. இதுவரை ஓபிஎஸ் மீது எடப்பாடி தரப்பு முன்வைத்து வரும் ஒரே குற்றச்சாட்டு,
"திமுகவின் கைக்கூலி" என்பதுதான்.

சீக்ரெட் டீல்
நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி பேசும்போதுகூட, சில எட்டப்பர்கள் உடனிருந்தே அதிமுகவிற்கு துரோகம் செய்கிறார்கள்.ஓபிஎஸ் எப்போதும் சுயநலமாகச் செயல்படுபவர்.தனக்கு கிடைக்காதது எவருக்கும் கிடைக்கக் கூடாது என நினைப்பவர்.. திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார்... எங்களின் கட்சியில் பிளவு ஏற்படுத்த நினைத்த மு.க.ஸ்டாலினுக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பன்னீர்செல்வம் அதிமுகவை அழிக்க நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பகிரங்கமாகவே எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

ஓபன் டாக்
கடந்த 10 நாட்களாகவே, ஓபிஎஸ்ஸையும் திமுகவையும் இணைத்து, எடப்பாடி ஆதரவாளர்கள் பேட்டி தந்துகொண்டிருந்த நிலையில், நேற்றைய தினம் எடப்பாடியே அதை ஓபனாக சொல்லிவிட்டார்.. இதையடுத்து, திமுகவில் இருந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி திடீரென ஒரு விளக்கத்தை தந்தார்.. "அதிமுக சண்டைக்கும், திமுகவுக்கும் தொடர்பில்லை" என்று விளக்கம் தந்தார்..

கதவுகள் மூடப்பட்டன
"எடப்பாடி ஆதரவாளர்கள் மீது குறி வைத்து திமுக அரசு ரெய்டு நடத்தி வரும்போது, ஓபிஎஸ் தரப்பில் இதுவரை யாருமே சிக்கவில்லையே?" என்றும் கேள்விகள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.. "தன் மகனை அனுப்பி, முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வைத்து, அதன்மூலம் திமுகவிடம் நல்ல பெயர் வாங்கி கொள்கிறார் ஓபிஎஸ்" என்றும் விமர்சனங்கள் எழுந்தபடியே உள்ளன. இப்போதைய சூழலில் அதிமுகவின் அனைத்து கதவுகளும் ஓபிஎஸ்ஸுக்கு அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்து என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது..

அமைச்சர் பதிலடி
இப்டிப்பட்ட சமயத்தில்தான், ஓபிஎஸ் ஒருவேளை திமுகவுக்கு செல்வாரோ என்ற கேள்விகள் இணையத்தில் சுற்றி வருகின்றன.. இந்த கேள்வியை திமுக அமைச்சரிடமே செய்தியாளர்கள் நேரடியாக கேட்டுவிட்டனர்.. வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியிடம், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், திமுகவிற்கு வந்தால் இணைத்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதுவரை பிற கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டு வந்த அமைச்சர், இந்த கேள்வியால் சற்று அதிர்ச்சி அடைந்தார்..

டக்கென திரும்பினார்
உடனே செய்தியாளரை பார்த்து, இப்ப வரைக்கும் நல்லா தானே கேள்வி கேட்டே? என்று கேள்வி எழுப்பினார்.. பிறகு சுதாரித்து கொண்டு, அதையெல்லாம் முதல்வர் பார்த்து கொள்வார்.. திமுகவுக்கு வருவது என்பது அவர்களது சொந்த விருப்பம்.. திமுகவை பொறுத்தவரை மற்ற கட்சியிலிருந்து யார் வந்தாலும் அவர்களை அரவணைப்பதற்கு முதல்வர் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.. யார் எந்த கட்சியில் இருந்து வந்தாலும் திமுகவில் இணைத்துக் கொள்வோம் என்றார்..

மறைமுக உதவி?
அதாவது திமுகவுக்கு ஓபிஎஸ் வரவே கூடாது என்று திட்டவட்டமாக சொல்லாமல், வந்தால் வரவேற்போம் என்று புள்ளி வைத்துவிட்டு போயுள்ளார் அமைச்சர்.. இந்த புள்ளியில் ஓபிஎஸ் கோலம் போடுவாரா? அல்லது அதிமுகவையே வளைத்து காட்டுவாரா? தெரியவில்லை.. திமுகவுக்கும், ஓபிஎஸ்ஸுக்கும் உள்ள உறவு எப்படி இருக்க போகிறது? அல்லது ஓபிஎஸ் விவகாரத்தில் திமுக எந்த அளவுக்கு மறைமுகமாக உதவுகிறது என்பதை வைத்தே இதற்கான விடை கிடைக்கும்.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications