அப்பா வாங்க ஃபாரீன் போகலாம்.. எடப்பாடியிடம் சொன்ன மகன் மிதுன்.. அப்படி என்ன ஆனது? பின்னணி
சென்னை: கால் வலியால் அவதிப்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி காலில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அட்வைஸ் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆளுநர் ஆர். என் ரவியை அவரது இல்லத்தில் சந்தித்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. மதுபான - கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் மனுவோடு சென்று எடப்பாடி, ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இதற்காக அதிமுகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார். இதற்காக அதிமுகவினர் இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி மிகவும் துடிப்பாக மற்றும் ஆக்டிவாக இருந்தார். அதன்பின் எடப்பாடி பழனிச்சாமி போராட்டம் முடிந்ததும் மாவட்ட அளவிலான போராட்டம் நடக்கும் என்று அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டது. கள்ளச்சாராய மரணங்களை எதிர்த்து மாவட்ட அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 29ம் தேதி தமிழ்நாடு முழுக்க இதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதிமுக மாவட்ட செயலாளர்கள் சார்பில் பிரம்மாண்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் இந்த போராட்டங்கள் எதிலும் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. சேலத்தில் நடக்கும் போராட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.
அதன்பின் இத்தனை நாட்களாக அவர் வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறார். அறிக்கை மட்டுமே வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார். இடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் ரெய்டு நடந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் ரெய்டுகள் தமிழ்நாட்டையே உலுக்கியது.
அதை பற்றி இரண்டு அறிக்கை, ஒருமுறை பேட்டி மட்டுமே கொடுத்தார். ஆனால் பெரிதாக வெளியே வரவில்லை. அவர் ஏன் வெளியே வரவில்லை என்று அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். அவர்கள் நம்மிடம் தெரிவித்த தகவலின்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு கால் எலும்பில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி மூட்டுவலியால் அவதிப்படுகிறார். இதனால் அவரால் நீண்ட நேரம் நின்று கொண்டு கூட்டங்களில் பேச முடிவதில்லையாம். வலியை பொறுத்துக் கொண்டுதான் கூட்டங்களில் கலந்து கொள்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இதற்காக ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அட்வைஸ் செய்துள்ளனர். ஆனால், ஆப்ரேசன் இல்லாமல் இயற்கை மருத்துவத்தில் சரி செய்ய முடியாதா? என கேட்டுள்ளார் எடப்பாடி. இதற்கிடையே, அமெரிக்கா சென்று மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வரலாம் அப்பா என்று எடப்பாடியின் மகன் மிதுன் வலியுறுத்தியும் அமெரிக்கா செல்ல மறுத்து வருகிறார் எடப்பாடி.
அதேசமயம், ஓபிஎஸ்சை போல, கேரளாவுக்கு சென்று ஆயில் உள்ளிட்ட இயற்கை மசாஜ் வைத்தியம் செய்து கொள்ளலாம் வலி குறையும் குணமாகும் என்று எடப்பாடியிடம் சொல்லியுள்ளனர். இதனை செய்து பார்க்கலாமா ? என்று தற்போது ஆலோசிக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications