குலுங்குது "ஹெட் ஆபீஸ்".. 2 தலைகளும் "இங்கே" வர்றாங்களாமே.. அடடே, பாஜகவில் ஓபிஎஸ்ஸா? "தாமரை மலருதோ"
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை, பாஜக எப்போதுமே கைவிடாது என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் சொல்லி வரும்நிலையில், முக்கிய தகவல் ஒன்று கசிந்து வருகிறது.
சமீபத்தில் ஓபிஎஸ், திருச்சியில் மாநாடு நடத்தியிருந்தார்.. இந்த மாநாடு ஆகச்சிறந்த வெற்றி என்றே பூரிக்கிறார்கள் அவரது தொண்டர்கள்..
காரணம், கடைசிவரை எவ்வளவோ முயற்சித்தும், இந்த மாநாட்டை எடப்பாடியால் தடுத்து நிறுத்த முடியவில்லை, எவ்வளவோ முட்டுக்கட்டைகள் போட்டும், மாநாட்டை தடுக்க முடியவில்லை என்கிறார்கள்..
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், திருச்சி மாநாட்டின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக இருந்தது, ஓபிஎஸ்ஸின் இரு மகன்களான ரவீந்திரநாத்தும், ஜெயபிரதீப்பும்தான் என்ற பேச்சு அப்போதே வலுவாக அடிபட்டது.

ஓபிஆர் அதிரடி: இப்போது ரவீந்திரநாத் எம்பியாக உள்ள நிலையில், பாஜகவின் ஆதரவாளராகவும், மேலிட தலைவர்களின் அன்பை பெற்றவராகவும் விளங்கி வருவது தெரிந்து விஷயம்தான்.. ஆனால், ஜெயபிரதீப்பின் பங்களிப்பு இந்த மாநாட்டில் ஓங்கியிருந்ததாக சொல்கிறார்கள்.. பொதுவாக, தேர்தல் சமயங்களில் மட்டுமே தலைகாட்டி வருபவர் ஜெயபிரதீப்.. எப்போதாவது இவர் பதிவிடும், அரசியல் ட்வீட்கள் பெரும் பரபரப்பை கிளப்பிவிடும். எடப்பாடி தரப்புக்கு பதிலடி தருவதாகவும், திமுகவுக்கு பதிலடி கொடுப்பதிலும் ஜெயபிரதீப் முக்கிய பங்காற்றுபவர்..
2 மகன்கள்: இந்நிலையில் திருச்சி மாநாட்டில், அதிமுக தலைமை அலுவலக முகப்பு வடிவில் மேடை, மாநாட்டில் தொண்டர்கள் உட்காரும் 2 பகுதிகளுக்கு நடுவில் நடந்து வர நீண்ட மேடை + .இரட்டை இலை சின்னத்துடன் கொடி + தொண்டர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள், + உணவு + என பல்வேறு விஷயங்களை ரவீந்திரநாத்துடன் சேர்ந்து ஜெயபிரதீப்பும் கவனித்து கொண்டாராம்.. அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் முயற்சியை முறியடிக்க, தங்கள் ஆதரவு நிர்வாகிகளுடன் அடுத்தக்கட்ட அதிரடியிலும் ஓபிஎஸ்ஸின் மகன்கள் ரவீந்திரநாத்தும், ஜெயபிரதீப்பும் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அசந்து போன பாஜக: இப்போது, 2 விதமான தகவல்கள் ஓபிஎஸ் மகன்கள் குறித்து வெளிவந்து கொண்டிருக்கிறது.. திருச்சியில் ஓபிஎஸ் நடத்திய மாநாட்டை பார்த்து, டெல்லி பாஜகவே அசந்து போய்விட்டதாம்.. அதிலும், மாநாட்டின் பின்னணி ஓபிஎஸ்ஸின் மூத்த மகன் ஜெயபிரதீப்பின் பங்களிப்பானது, பாஜக சீனியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவே தெரிகிறது.. இந்த முறை எப்படியாவது எம்பி தேர்தலில், தென்மண்டலங்களில் காலூன்றிவிட வேண்டும் என்று பாஜக ஆர்வத்துடன் உள்ள நிலையில், ஓபிஎஸ்ஸையும் தங்களுடன் அரவணைத்து செல்லும் முடிவில் தலைவர்கள் உள்ளதாக தெரிகிறது.
அந்தவகையில், தேனி மாவட்டங்கள் முழுக்க நன்கு அறியப்பட்ட ஜெயபிரதீப்பை, பாஜகவில் இணைத்து கொள்ளவும் முயல்கிறதாம்..
ஒருசில தமிழக பாஜக சீனியர்கள், ஜெயபிரதீப்பிடமே இதை பற்றி எடுத்து, தங்கள் பக்கம் கொண்டுவர முயற்சித்து வரும்நிலையில், ஜெயபிரதீப் இதற்கு இதுவரை ஓகே சொல்லாமல் இருக்கிறாராம்..
அதேபோல, இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. இந்த முறை அதிமுகவுடன் கூட்டணியில் பாஜக உறுதியாகி உள்ள நிலையில், அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் சைலண்ட்டாக நடந்து வருவதாக தெரிகிறது.. அதன்படி, மொத்தமுள்ள 40 தொகுதிகளில் சரிபாதியாக 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும், மீதமுள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும், அப்படி ஒதுக்கப்படும் 20 தொகுதிகளை, தங்களுக்குள் பிரித்துக் கொள்வது என தமிழக பாஜக தலைவர்கள் அதிமுகவிடம் வலியுறுத்தி வருகிறார்களாம்.

20 - 20 சாத்தியமா: அந்த 20 தொகுதிகளில், 13 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. மற்ற 7 தொகுதிகளை, ஓபிஎஸ் அணி + அமமுக டிடிவி தினகரன், தமாகா ஜிகே வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர் போன்றோருக்குதான் அந்த தொகுதிகளை வழங்க பாஜக கணக்கு போட்டு வருகிறதாம்.
இதில், ஓபிஎஸ் அணிக்கு மட்டும் 2 இடங்கள் கொடுக்க போவதாக பேசி வருகிறார்களாம்.. அதில் ஒரு தொகுதியில் ரவீந்திரநாத்தை நிறுத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்பட கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் அனைத்தையும் பாஜகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட வைக்கவும் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறதாம்.. இதையெல்லாம் கேட்டு, எடப்பாடியே அதிர்ந்து போய்விட்டாராம்.. ஆனாலும் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்துக்கு இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லையாம்..
எடப்பாடி முடிவு என்ன?: எப்படி பார்த்தாலும், ஓபிஎஸ் மற்றும் தினகரனை தங்கள் தரப்பு மூலம் இணைத்துக் கொள்வதில் பாஜக உறுதியாக உள்ளதாக தெரிகிறது. இதன்மூலம், அதிமுகவின் வாக்குகள் தங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்றும் பாஜக வலுவாக நம்புகிறது.. என்னதான் நடக்க போகிறது? ஜெயபிரதீப் பாஜகவில் சேர போகிறாரா? ஓபிஎஸ்ஸூக்கு 2 சீட் கிடைக்க போகிறதா? நிஜமாகவே தாமரை மலரப்போகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications