2 பேரும் ஆளையே காணோம்.. அடங்கிட்டாங்களே! சட்டென சிரித்த எடப்பாடி.. அரசியலில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்
சென்னை: அதிமுகவின் திடீர் எழுச்சி.. எடப்பாடி பழனிச்சாமியின் ஆக்டிவ் அரசியல் காரணமாக அதிமுகவில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் நடக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக அதிமுகவில் உட்கட்சி ரீதியாக நடந்த மோதல்களில் பெரிய அளவில் திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளன.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, அதிமுகவில் நான் ரீ என்ட்ரி ஆக போகிறேன். நான் மீண்டும் அரசியலுக்குள் என்ட்ரி ஆகும் நேரம் வந்துவிட்டது. இந்தா பாருங்க.. நான் அரசாங்கத்தைக் கேட்கக் கூடிய துணிச்சல் எனக்கு இருக்கு.. எனக்கு மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை..

ஒரு கொடநாடு கேஸை வைத்துக் கொண்டு இந்த திமுக என்ன வேலை செய்துகிட்டு இருக்கு? என்ன வேலை செய்துகிட்டு இருக்கு என ஊருக்கே தெரியுது.. உலகத்துக்கே தெரியுது.. உங்களோட விசாரணை ஏன் ஆமை வேகத்துல போகுது? போலீஸை அப்படி வைத்திருக்கிறோம்.. இப்படி வைத்திருக்கிறோம் என்கிறீர்களே..
அதிமுகவில் என்னுடைய அரசியல் தொடங்கும். மீண்டும் நான் ஆக்டிவாக இருப்பேன். அதிமுக முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது. அதிமுகவில் சாதி பார்க்கும் பழக்கம் வந்துவிட்டது. சாதி பார்க்கும் வழக்கம் தற்போது அதிமுகவில் வருவதை அனுமதிக்க முடியாது. லோக்சபா தேர்தலில் அதிமுக மூன்று, நான்காம் இடத்திற்கு செல்ல யார் காரணம் என்று சசிகலா கூறி உள்ளார்.
என்ன பிளான்; அதன்பின் அதிமுக நிலவரம் அறிந்து நம்மிடம் பேசிய சில நிர்வாகிகள், அதிமுகவில் பெரிய பெரிய மாற்றங்கள் நடக்க போகிறது. எடப்பாடி உடன் இருக்கும் தலைவர்கள் கூட விலை போய்விட்டனர். அதிமுக உடைந்துவிட்டது. ஜெயக்குமார் மட்டுமே எடப்பாடி உடன் இருக்கிறார். மற்றவர்களுக்கு கார், வீடு எல்லாம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டனர். எல்லாம் போய்விட்டனர். எல்லோரும் சசிகலாவை லைட்டாக எடுத்துக்கொண்டனர். சசிகலா என்னும் ஆயுதம் தயாராகி வருகிறது.
அவர் தனியாக சாதாரண சசிகலா இல்லை. அவர் இப்போது பாஜக சசிகலா. டிடிவி தினகரன் கூட அவருக்கு எதிராக இருக்க மாட்டார். சசிகலா இப்போது இருக்கும் சாதாரண சசிகலா இல்லை. அவர் பாஜகவின் சசிகலா. சசிகலா பின்னால் திவாகரன் இருக்கிறார், எடப்பாடிக்கு சிக்கல்தான் என்றெல்லாம் கூறினர்.
எழுச்சி: ஆனால் அதிமுகவில் திடீரென எடப்பாடி எழுச்சி பெற தொடங்கி உள்ளார். அதிமுகவின் திடீர் எழுச்சி.. எடப்பாடி பழனிச்சாமியின் ஆக்டிவ் அரசியல் காரணமாக அதிமுகவில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் நடக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக அதிமுகவில் உட்கட்சி ரீதியாக நடந்த மோதல்களில் பெரிய அளவில் திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளன.
கள்ளக்குறிச்சி விவகாரம் அதிமுகவை எழுச்சி அடைய செய்துள்ளது. எடப்பாடி தலைமைக்கு கீழ் அதிமுக அடுத்தடுத்து தோல்வி அடைந்ததே சசிகலா இப்படி பொங்கி எழ காரணம். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இதோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
அப்செட்: இந்த தொடர் தோல்விகள் காரணமாக எடப்பாடி மீது அதிமுக தலைவர்கள் பலரும் அப்செட்டில் இருந்தனர். முக்கியமாக எடப்பாடி ஆக்டிவாக இல்லை. அவர் பெரிதாக வலுவான முடிவுகளை எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அந்த விமர்சனங்களுக்கு தற்போது எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
எடப்பாடியிடம் தெரியும் மாற்றங்கள்: அதிமுக எங்கே உடையுமோ என்று கருதப்பட்ட நிலையில்தான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் மிகப்பெரிய அளவில் அரசியல் ரீதியான மாற்றங்கள் தெரிய தொடங்கி உள்ளன.
முன்பு எடப்பாடி அடிக்கடி ஓய்வு எடுத்தது, பெரிதாக வெளியே தலைகாட்டாமல் இருந்தது போன்ற நடவடிக்கைகள் இப்போது இல்லை. எடப்பாடி பழனிசாமி மேலும் ஆக்டிவ் ஆகி உள்ளார். அவரின் செயல்பாடுகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
கடுமையான விமர்சனங்களை வைப்பது, நேரடியாக களத்திற்கு செல்வது அதிமுகவிடம் அதிகம் மிஸ் ஆனது. அது தற்போது எடப்பாடியிடம் தெரிய தொடங்கி உள்ளது. திமுக முன்பு எதிர்க்கட்சியில் இருந்த போது போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று எப்போதும் ஸ்டாலின் லைம்லைட்டில் இருப்பார். அது அதிமுகவிடம் மிஸ் ஆனது. தற்போது அது மீண்டும் வந்துள்ளது. முக்கியமாக மக்களை நேரில் சந்திப்பது... மக்களிடம் இருந்து அரசியலை செய்வது என்று எடப்பாடி பழனிசாமியிடம் நல்ல மாற்றங்கள் தெரிய தொடங்கி உள்ளன.
ஆளையே காணோம்: இதனால் ஓ பன்னீர்செல்வம், சசிகலா இரண்டு பேருமே சைலன்ட் ஆகி உள்ளனர். பெரிய எழுச்சியை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இருவரும் அப்படியே அமைதி ஆகி உள்ளனர்.
2 பேருமே ஆளையே காணோமே என்று எடப்பாடி தரப்பும் சந்தோஷத்தில் சிரிக்க தொடங்கி உள்ளதாம்.












Click it and Unblock the Notifications