Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் பயம் இல்ல.. வேல்முருகன், சீமான் மீது ஆக்‌ஷன் எங்க? சீறும் பாஜக!

அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்திருப்பது அதிகார துஷ்பிரயோகம் என பாஜக விமர்சித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை : வட இந்திய தொழிலாளர்கள் மீது வெறுப்பைக் கொட்டிப் பேசிய திமுகவினர், பண்ருட்டி வேல்முருகன், சீமான் போன்றோர் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.

வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பொய்யான தகவல்கள் பரவியது தொடர்பாக தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அதுகுறித்து அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் நாராயணன் திருப்பதி.

 வட மாநில தொழிலாளர் விவகாரம்

வட மாநில தொழிலாளர் விவகாரம்

வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக வலைதளத்தில் பொய்யான தகவல் பரவிய நிலையில், பொய்யான தகவலை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் கட்சிக்காரர்கள் மற்றும் கூட்டணி கட்சிக்காரர்கள் வடமாநிலத்தவர் மேல் தொடரும் வெறுப்பு பிரச்சாரத்தை அனுமதிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டின் மாண்பை காப்பார் என்று நம்புகிறேன் என்றும் கூறியிருந்தார்.

அண்ணாமலை மீது ஆக்‌ஷன்

அண்ணாமலை மீது ஆக்‌ஷன்

மேலும் திமுக எம்.பி தயாநிதி மாறன், திமுக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் வட மாநில தொழிலாளர்களை அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதாகவும் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கலவரத்தை தூண்டுதல், இரு பிரிவுகளிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்புதல்,குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக கடும் கண்டனம்

பாஜக கடும் கண்டனம்

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வடமாநில தொழிலாளர்கள் குறித்த விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிற மாநில தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு வேலை அளிக்கும் தொழில் நிறுவனங்களை கண்டித்தும் கூட்டணி கட்சிகளும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான பண்ருட்டி வேல்முருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் தொடர்ந்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வந்தது நாடறிந்தது.

திமுகவினர் தான்

திமுகவினர் தான்

மேலும் திமுகவின் நிர்வாகிகளும், அமைச்சர்களும் பிற மாநில தொழிலாளர்களை பானி பூரி விற்பவர்கள், காய்ந்த ரொட்டி உண்பவர்கள், கட்டிட கூலிகள் என்றெல்லாம் தரக்குறைவாக, வெறுப்பைக் கொட்டி விமர்சித்து வந்த நிலையில் அவர்களுடைய விமர்சனங்களை கண்டுகொள்ளாமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்த அரசு, தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று உறுதியளித்து அறிக்கை விட்டதற்கு அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்ல வெட்கப்பட வேண்டிய நடவடிக்கையும் கூட.

வேல்முருகன், சீமான்

வேல்முருகன், சீமான்

திமுக ஆதரவு யூ டியூப் சேனல்கள் சில திட்டமிட்ட ரீதியில் வட இந்திய தொழிலாளர்கள் மீதான வெறுப்பை கொட்டி பிரச்சாரம் செய்தது தமிழ்நாடு காவல்துறையின் கண்களுக்கும், காதுகளுக்கும் எட்டவில்லையா? இரு தரப்பினருக்கிடையே பகையை உருவாகும் செயல்களை அவர்கள் செய்ததாக காவல்துறைக்கு தெரியவில்லையா? பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குறித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், தொலைக்காட்சி, விவாதங்கள், பொது கூட்டங்களில் தரமற்ற பேச்சு என சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் சீமான், சில அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பேசியுள்ள அனைத்தும் பொதுவெளியில் கொட்டிக் கிடக்கின்றன.

பாஜக அஞ்சாது

பாஜக அஞ்சாது

அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய தமிழ்நாடு காவல்துறை தற்போது காவல்துறைக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் பாஜக அஞ்சாது என்பதை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் புரிந்து கொள்ள வேண்டும். சட்ட ஒழுங்கு சீர்கேடுக்கான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+