Horse Trading: விஜய் செய்தது forgery! காமராஜ் கையெழுத்திடும் வீடியோ ஏஐ! கொந்தளித்த தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவுக்கு ஆதரவு என அமமுக எம்எல்ஏ காமராஜ் அளித்ததாக கூறும் ஒரிஜினல் கடிதம் எங்கே என்றும், விஜய் முதல்வராகும் முன்பே போர்ஜரியில் ஈடுபடுகிறார் என்றும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அடையாறில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: காமராஜ் சுயநினைவோடு எழுதியதாக கூறும் தவெகவினர் அசல் காப்பியை வெளியிடுங்கள்.

ttv dinakaran vijay

காமராஜ் கையெழுத்திட்ட வீடியோவின் உண்மைதன்மையை வெளியிடுவார்களா. காமராஜ் காரில் உட்கார்ந்து கையெழுத்திடும் வீடியோவை விஜய் எடுத்தாரா? புஸ்ஸி ஆனந்த் எடுத்தாரா?

மாலை 6 மணிக்கு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க தனது ஆதரவு கடிதத்தை காமராஜ் கொடுத்திருக்கிறார். அப்படியிருக்கும் போது விஜய்க்கு எப்படி அவர் கையெழுத்திடுவார்.

தவெக கூறுவது போல் காமராஜ் கையெழுத்திட்டிருந்தால் அந்த காப்பி எங்கே, ஏன் அவரையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து சென்றிருக்கலாமே! என்னை பயமுறுத்தவும் என்டிஏ கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தவும் இந்த முயற்சி நடந்துள்ளது.

காமராஜ் ஒன்றும் சிறுப்பிள்ளை அல்ல, படத்தை பார்த்துவிட்டு விஜய் பின்னால் செல்வதற்கு. எனவே காமராஜ் கையெழுத்து போடும் வீடியோ செயற்கை நுண்ணறிவில் செய்யப்பட்டது. நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம்.

தவெகவினர் வீடியோவை போலீஸில் கொடுத்தால் அது உண்மையா இல்லை போலியா என்பது தெரிந்து விட போகிறது. எனவே காமராஜிடம் குதிரை பேரம் செய்வதற்காகவே போலி கடிதத்தை விஜய் கொடுத்துள்ளார்.

விஜய் என்ன எங்களுக்கு மாமனா, மச்சானா, காமராஜ் ஏன் அவருக்கு கையெழுத்து போட போகிறார். இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளை தினகரன் எழுப்பியுள்ளார்.

மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் தொடர்பான இந்த விவகாரம், தமிழக அரசியலில் ஒரு "திரில்லர்" திரைப்படம் போல நிமிடத்திற்கு நிமிடம் பல திருப்பங்களைக் கண்டு வருகிறது.

1. பிரச்சனையின் தொடக்கம்: அந்த 'மர்ம' கடிதம்

சட்டசபையில் ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்படும் சூழலில், அமமுகவின் ஒரே எம்எல்ஏவான காமராஜ், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியதாக செய்திகள் பரவின. அந்த கடிதத்தில் காமராஜின் கையெழுத்து மற்றும் அமமுகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேட் இருந்ததாகக் கூறப்பட்டது.

2. டிடிவி தினகரனின் அதிரடிப் புகார்

செய்தி அறிந்தவுடன் அதிர்ச்சியடைந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், உடனடியாகக் களத்தில் இறங்கினார். மே 8 அன்று இரவு அவர் அளித்த புகாரில் உள்ள முக்கிய அம்சங்கள்:

ஆவண மோசடி: காமராஜின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு, ஆளுநர் மாளிகையைத் தவறாக வழிநடத்த தவெக தரப்பு முயற்சி செய்கிறது.

மிரட்டல் குற்றச்சாட்டு: காமராஜை யாரோ கடத்திச் சென்று, கட்டாயப்படுத்தி கடிதத்தில் கையெழுத்து வாங்கினார்களா? அல்லது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி (Deepfake/AI) போலியாகத் தயாரித்தார்களா? என விசாரிக்க வேண்டும்.

அரசியல் சதி: அமமுகவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே விஜய்யின் கட்சி இத்தகைய செயலில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்.

3. எம்எல்ஏ காமராஜின் அந்தர் பல்டி

சில மணிநேரங்கள் தலைமறைவாக இருந்த காமராஜ், பின்னர் ஆளுநரைச் சந்தித்து விளக்கம் அளித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது: "நான் ஒருபோதும் விஜய்யின் கட்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை. எனது விசுவாசம் எப்போதும் அதிமுக - அமமுக கூட்டணிக்குத் தான்."

"அந்தக் கடிதத்தில் இருப்பது எனது கையெழுத்தே அல்ல. டிவிகேவினர் திட்டமிட்டு பொய் பரப்புகின்றனர்."

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+