பீர்க்கங்காய் எங்கே? கணவன் கேட்டதுமே கத்தியை எடுத்து வந்து நெஞ்சில் சதக்கென செருகிய மனைவி
சென்னை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 39 வயதான அவருடைய மரணம் தொடர்பாக மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!
அகமதாபாத்தின் நரோடா பகுதியில் உள்ள நரோடா ஸ்மார்ட் சிட்டி-2 குடியிருப்பில் வசித்து வந்தவர் திலீப் குமார் கராடி,., இவருக்கு 39 வயதாகிறது.. இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.

நிர்மலா தம்பதி
கடந்த 2022-ம் வருடம் ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற திலீப், அதன்பிறகு குஜராத் கனிம வளர்ச்சிக் கழகத்தில் (GMDC) ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி நிர்மலா கராடி (34). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதி இருவரும் மகிழ்ச்சியுடன் குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாகவே, இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வெடித்து வந்ததாக தெரிகிறது.. குறிப்பாக வீட்டு வேலைகளை செய்வது, பணப் பிரச்சினைகள் தொடர்பாக அடிக்கடி இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
பீர்க்கங்காயால் தகராறு
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு, டியூட்டி முடிந்து திலீப் வீட்டுக்கு வந்துள்ளார்.. அப்போது நைட் சாப்பிடுவதற்காக வேறு காய்கறியை நிர்மலா சமைத்து வைத்திருந்தார்.. சாப்பாட்டை பார்த்ததுமே திலீப், நான் கேட்ட பீர்க்கங்காயை ஏன் சமைக்கவில்லை என்று நிர்மலாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.. இதனால் 2 பேருக்குமிடையே வாக்குவாதம் வெடித்துள்ளது..
ஏற்கனவே குடும்பம் மற்றும் பணப் பிரச்சினைகள் தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இந்தச் சமையல் விவகாரமும் காரசார சண்டையாக மாறியுள்ளது. 2 பேருமேஒருவரையொருவர் மோசமாக திட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.
நெஞ்சில் குத்திய மனைவி
இந்த சண்டை நள்ளிரவு வரை நீடித்துள்ளது.. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நிர்மலா கிச்சனுக்கு ஓடிச்சென்று, காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து,கணவர் திலீப்பின் நெஞ்சின் இடது பகுதியில் பலமாக குத்திவிட்டார்.. இதில் பலத்த காயமடைந்த திலீப் அங்கேயே சுருண்டு மயக்கமடைந்துள்ளார்.
உடனே நிர்மலா, தனது கணவரின் சகோதரர் முகேஷுக்கு போனை போட்டு, வீட்டில் நடந்த சண்டையில் திலீப்பின் நெஞ்சில் கத்தியால் குத்திவிட்டதாகவும், மயக்கமடைந்துள்ள கணவரை சிகிச்சைக்காக ஷால்பி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் சொல்லியிருக்கிறார்.
மருத்துவமனையில் உயிரிழப்பு
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த முகேஷ், உடனே தன்னுடைய அப்பா சோமாஜிக்கு இந்த விஷயத்தை சொல்லி உள்ளார்.. மகன் மருத்துவமனையில் இருப்பதை கேள்விப்பட்டதுமே பதறிப்போன 73 வயதான சோமாஜி, மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் திலீப் உயிரிழந்துவிட்டதாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
திலீப்பின் மரணச் செய்தியை கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்து போனது.. ஆனால், திலீப் இறந்ததை, 75 வயது தந்தையிடம் குடும்பத்தினர் சொல்லவில்லையாம்.. அந்த அதிர்ச்சியை அவரால் தாங்க முடியாது என்று பயந்து கொண்டு சொல்லாமல் இருந்துள்ளனர்.. பிறகுதான் மெல்ல விஷயம் அவருக்கே தெரியவந்து கதறி அழுதார்..
75 வயது அப்பா யார் தெரியுமா
உடனடியாக 75 வயது முதியவர் போலீசுக்கும் ஓடினார்.. "என் மகனின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருக்கின்றன.. நெஞ்சின் இடது பகுதியில் கத்திக்குத்து காயம் உள்ளது.. வலது கன்னம், வலது மேல் கை மற்றும் இரண்டு கைகளின் கட்டைவிரல் அருகிலும் காயங்கள் உள்ளன.. என் மகனின் மரணம் குறித்து முறைப்படி விசாரிக்க வேண்டும்" என்று புகார் தந்தார்.
ராஜ்கோட் நகர காவல்துறையில் உதவி சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்தான், இந்த 75 வயது தந்தை சோமாஜி.. இதனால் மகனின் மரணம் தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் உடனடியாக விசாரணை துவங்கினார்கள். ஆனால் அதற்குள் நிர்மலா எஸ்கேப் ஆகிவிட்டார்,.
சுற்றி வளைக்கப்பட்ட நிர்மலா
இதையடுத்து நரோடா போலீஸார் நிர்மலாவைத் தேடி பல தனிப்படைகளை அமைத்தனர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததுடன், உள்ளூர் தகவல்களையும் சேகரித்தனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள் நிர்மலாவை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குஜராத் போலீஸ் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது நிர்மலாவிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நைட் சாப்பாட்டில் பீர்க்கங்காய் எங்கே? என்று கேட்டதில் ஆரம்பித்த வாக்குவாதம், கொலையில் முடிந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது... தாய், தந்தை இருவருமே இல்லாமல் இவர்களின் 2 குழந்தைகள் கதறி அழுது கொண்டிருக்கின்றன...!!!




Click it and Unblock the Notifications
