ஜஸ்ட் 4 மணி நேரத்தில பாஜக சாதிச்சதே? இப்ப பாருங்க எடப்பாடியை.. மதுரையில் "திணறும்" புள்ளி.. அட திமுக
சென்னை: அதிமுக கூட்டணியின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள், தொகுதி ஒதுக்கீடு, சீட் விவகாரங்கள் நடந்து வரும்நிலையில், மதுரை தொகுதி வேட்பாளர் யார் என்ற ஆர்வம் எகிறி வருகிறது.
டாக்டர் சரவணனை பொறுத்தவரை, திமுகவில் படு சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தார்.. திருப்பரங்குன்றத்தில் கொரோனா நேரத்தில், எம்எல்ஏ சரவணன் செய்த நலப்பணிகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது.
பாஜக வியூகம்: ஆனாலும், கடந்த சட்டசபை தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் சீட் கொடுக்காததால் அதிருப்தியடைந்து, திடீரென்று பாஜக பக்கம் தாவினார் சரவணன். பாஜகவில் சேர்ந்த அடுத்த 4 மணி நேரத்திலேயே அவருக்கு சீட் வழங்கப்பட்டது.. அத்துடன் மதுரை வடக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டிட வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இதற்கு வேறு ஒரு கணக்கையும் பாஜக போட்டது.. தென்மாவட்டங்களில் காலூன்ற முயன்றுவருவதால், மதுரையில், சரவணனின் ஒத்துழைப்பு அதிகமாகவே கிடைக்கும் என்று பாஜக நினைத்தது.. எதிர்பார்த்தபடியே அங்கு கணிசமான வாக்குகளை சரவணன் பெற்றிருந்தாலும், திமுக வேட்பாளர் தளபதியிடம் படுதோல்வியடைந்தார்.
சரவணன்: பாஜக மாவட்டத் தலைவராக பதவி வகித்த நிலையில், கட்சிக்குள் அதிருப்தி காரணமாக மறுபடியும் திமுக பக்கம் தாவ நினைத்தார்.. சரவணனுக்கு திமுகவின் பிடிஆரின் ஆதரவு நிறைய இருந்தாலும், டாக்டரை மறுபடியும் கட்சிக்குள் சேர்க்க, மதுரை திமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் என்ன செய்வதென்றே தெரியாத நிலையில், அதிமுகவுக்குள் தஞ்சம் புகுந்தார் டாக்டர் சரவணன்.
பிறகு, டாக்டர் சரவணனை வைத்து எடப்பாடி பழனிசாமியும் ஒரு புதுகணக்கு போட தொடங்கினார். தென்மாவட்டத்தில் அதிமுகவுக்கான செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்பதிலும், முக்குலத்தோர் ஆதரவை பெற்றுவிட வேண்டும் என்பதிலும் எடப்பாடி தீவிரம் காட்டி வருகிறார்.. அந்தவகையில், டாக்டர் சரவணனுக்கு சீட் தரலாம் என்றும் சொல்லப்பட்டது.
மதுரை தொகுதி: ஆனால், சமீபத்தில் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, மதுரையை தங்களுக்கு ஒதுக்குமாறு தேமுதிக கேட்டிருக்கிறது.. அதற்கு ராஜ் சத்யனுக்கு மதுரையை ஒதுக்கப்போவதாக அதிமுக சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அப்படியானால் மதுரை ராஜ் சத்யனுக்கா? அல்லது டாக்டர் சரவணனுக்கா? என்று இன்னொரு குழப்பம் கிளம்ப துவங்கியது.
மதுரையை பொறுத்தவரை, அதிமுக அளவுக்கு திமுகவும் வலுவாகவே உள்ளது.. மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 5 இடங்களை அதிமுக கைப்பற்றியிருந்ததை மறுக்க முடியாது.
திமுக சிக்கல்: "லோக்கல் பாலிட்டிக்ஸ்" திமுகவில் இருப்பது உண்மை என்றாலும், இந்த முறை தேர்தலில் செலவு செய்ய அதிமுக வேட்பாளர்கள் தரப்பில் யாரும் தயாரில்லை என்றே சொல்கிறார்கள். எனவே, தேர்தலில் தாராளம் காட்டுபவர்களுக்கே சீட் என்ற நிலைமை வந்துள்ளதாகவும், இதில் டாக்டர் சரவணன் பெயரே முதன்மையாக அடிபடுவதாகவும் சொல்கிறார்கள்.
ஆக, திமுக வேட்பாளராக இருந்த டாக்டர் சரவணன், பாஜக வேட்பாளராகி... இப்போது அதிமுகவின் வேட்பாளராக களமிறங்குவதாக தெரிகிறது. மொத்தம் 8 ஆண்டுகளில் 4 கட்சிக்கு சென்ற டாக்டர் சரவணனின் "அரசியல் நிலைப்பாட்டை" நினைத்தாலே லேசான கலக்கம் கட்சிகளுக்குள் வருகிறது என்றாலும், பணபலமிக்க வேட்பாளரை இழக்க அதிமுக விரும்பவில்லை என்றே தெரிகிறது.
ஆதரவு பலம்: அதுமட்டுமல்ல, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்பி உதயகுமார் போன்றோரின் ஆதரவும், டாக்டருக்கு அபரிமிதமாகவே இருப்பதாக சொல்கிறார்கள்.
திமுகவுக்கு தாவவிருந்த சரவணன், இன்று திமுகவையே எதிர்த்து ஓட்டுக்கேட்கும் நிலைமைக்கு வந்திருக்கிறார் என்றாலும், இது அனைத்தையுமே பொறுமையாக கவனித்து வரும் மதுரை மக்கள் என்ன யாருக்கு ஆதரவு தர போகிறார்கள்? அதிமுகவின் டாக்டருக்கா? திமுகவின் "தோழருக்கா"? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications