அயோக்கியர்கள் கூட பேச தயங்கும் வார்த்தைகள்! சீமான் பேசியதை தமிழிசை ஆதரிக்கிறாரா? காங். எம்பி கேள்வி
சென்னை: பெரியார் குறித்து ஆதாரமில்லாத கருத்துகளை சீமான் பேசிய போது அவர் எங்கள் தீம் பார்ட்னர் என சொன்ன தமிழிசை சவுந்திரராஜன் இப்போது சீமான் பொதுவெளியில் பெண்கள் குறித்து அநாகரீகமாக பேசியுள்ளாரே அதை ஆதரிக்க போகிறாரா என மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மயிலாடுதுறை எம்பி சுதா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தான் ஒரு மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல அநாகரீகமான மனிதர் என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் சீமான். பெண்கள் தொடர்பாக பொதுவெளியில், அயோக்கியர்கள் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளை கூச்சமின்றி பேசியிருக்கிறார்.

முதலில் இந்த வழக்கு அரசியல்ரீதியான வழக்கு என்ற வாதமே பொய். சீமான் மீது ஒரு நடிகை புகார் தருகிறார்; நீண்ட நாட்களாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கை ரத்து செய்யுங்கள் என சீமானேதான் நீதிமன்றம் சென்றார்.
உள்நோக்கம் கற்பிக்கும் சீமான்
விசாரணை முடிவில், புகாரில் முகாந்திரம் இருப்பதை அறிந்து 12 வாரத்திற்குள் விசாரிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இப்போது நீதிபதிக்கும் உள்நோக்கம் கற்பித்துக் கொண்டிருக்கிறார் சீமான்.
கடைசி நம்பிக்கை
சாமானிய மக்களுக்கான கடைசி நம்பிக்கையாக இப்போது வரை நீதிமன்றங்களும், நீதிபதிகளும்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பது மூலம் எதை சாதிக்க விரும்புகிறார் சீமான்? நீதிமன்ற அவமதிப்பெல்லாம் வராது என்ற உத்தரவாதம் எதுவும், எங்கிருந்தாவது கிடைத்ததா?
வக்கிர புத்தி சீமான்
எல்லாவற்றிற்கும் மேல், வயசுக்கு வந்த பெண்ணையா கற்பழித்தேன் என பெண்களை சுற்றி உட்கார வைத்துக் கொண்டு எள்ளலான உடல் மொழியில் பேசியது. பெண்களுக்கு எதிரான வன்முறையை இயல்பான ஒன்றாகப் பார்க்கும், இயல்பான ஒன்றாக மாற்றும் வக்கிர புத்தி அதில் ஒன்றுமில்லை.
பெண்களைச் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு பேசியதன் மூலம், சமூகத்திற்கு என்ன சொல்ல நினைக்கிறார் சீமான்?.
பெண்மையை கொச்சைப்படுத்திய சீமான்
50%க்கு மேல் பெண்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு, பெண்மையைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார் சீமான். தமிழ்ச்சமூகத்தில் இடம் கொடுக்கப்படாமல் அவர் விரட்டப்பட வேண்டும்.
தமிழிசை ஆதரிக்கிறாரா
பெரியார் தொடர்பில் ஆதாரமின்றி அவதூறாக சீமான் பேசிய போது, அவர் எங்கள் Theme Partner என்று சொன்ன தமிழிசை சௌந்தரராஜன் இப்போது என்ன சொல்லப் போகிறார்?. Theme Partnerன் கருத்தை ஆதரிக்கிறாரா? அவர் பேசிய பேச்சுகள், எந்த நாகரீக சமூகத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நாம் தமிழர் கட்சியில் இருக்கும் பெண்கள், அந்தக் கட்சியை ஆதரிக்கும் பெண்கள் இனியும் இந்த வக்கிரவாதிக்கு ஆதரவு கொடுப்பதா என சிந்திக்கட்டும்.
சீமான் தம்பிகளின் தாய்மார்கள்
சீமானை ஆதரிக்கும் தம்பிகளின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை சீமான் பிடியிலிருந்து விடுவிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது. இவ்வாறு சுதா எம்பி தெரிவித்துள்ளார்.
நடிகையின் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சீமான் பொதுவெளியில் பேசிய போது, அந்த நடிகையே விருப்பப்பட்டு என்னுடன் உறவு கொண்டார் என்றும் காசுக்காக அவர் என்னுடன் உறவு கொண்டுவிட்டு என்னை பிடிக்காமல் விலகி போய்விட்டார் என்றும் கூறியிருந்தார்.
ஜோதிமணி, வாசுகி கண்டனம்
இந்த செய்தியை அவர் சொல்லும் போது அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார். இதற்கு வாசுகி, ஜோதிமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சுதா எம்பியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications