170 பவுன், ரூ1 கோடி வரதட்சிணை! அப்பயும் பத்தல! கள்ளக்காதல்.. திலகவதி ஐபிஎஸ் மகன் மீது மருமகள் புகார்
சென்னை: பெண் மருத்துவருடனான கள்ளக்காதலால் முன்னாள் டிஜிபியின் மகன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தமிழக காவல் துறையின் முன்னாள் டிஜிபியாக இருந்தவர் திலகவதி ஐபிஎஸ். இவரது மகன் பிரபு திலக். இவர் மருத்துவர். அரியலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி சுருதி சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகாரை கொடுத்துள்ளார். அந்த புகாரில் தனது கணவர் திலக், மாமியார் திலகவதி மீது பரபரப்பு புகாரை கூறியுள்ளார். அந்த புகாரில், எனது பெயர் சுருதி, எனக்கு 42 வயதாகிறது.

2007இல் திருமணம்
கடந்த 2007ஆம் ஆண்டு எனக்கும் திலக்கிற்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு 14 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். ஆரம்ப காலத்தில் எங்களுக்குள் உறவானது சுமூகமாக போனது. ஆனால் போக போக என் கணவர் என்னை துன்புறுத்த தொடங்கிவிட்டார்.

கொடுமை
இன்று வரை எனது கணவர் கொடுமைப்படுத்தினாலும் அதை என் குழந்தைகளுக்காகவே தாங்கிக் கொண்டிருந்தேன். எனது திருமணத்திற்கு 170 பவுன் நகையும் 1 கோடி ரூபாய் பணமும் எனது தாய் வீட்டில் சீதனமாக கொடுக்கப்பட்டது. ஆனால் எனது கணவரோ இதுவும் போதாது, எனகூறி தினமும் குடித்துவிட்டு என்னை துன்புறுத்துகிறார்.

திலகவதி மீதும் புகார்
எனது மாமியார் திலகவதியும் என்னை மிரட்டுகிறார். இதுமட்டுமல்லாமல் என் கணவர் பணியாற்றும் கல்லூரியில் பெண் டாக்டர் ஒருவருடன் கள்ளக்காதல் இருந்து வருகிறது. இதை தட்டிகேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என புகார் கொடுத்துள்ளார்.

முகம் வீங்கிய நிலை
மேலும் தன்னை கணவர் அடித்ததால் தனது முகம் வீங்கியபடி இருந்த புகைப்படத்தையும் சுருதி கொடுத்துள்ளார். நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனிற்கும் திருமணம் நடந்த போது விக்னேஷ் சிவனின் தாயின் தோழி என்ற முறையில் திலகவதி ஐபிஎஸ் ஒரு கருத்தை முன் வைத்திருந்தார்.

விக்னேஷ் சிவன் திருமணம்
அதில் அவர் கூறுகையில் விக்னேஷ் சிவனை சிறு வயது முதலே பார்த்து வருகிறேன். அவர் நல்லா எழுதி திரைத்துறையில் வளர்ந்து வருகிறார்கள். திருமணத்தை எளிமையாக நடத்தியிருக்கலாம். இப்படி ஆடம்பரமாக நடத்துவார் என எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார். விக்னேஷ் சிவன் திருமணத்தை விமர்சித்த நிலையில் திலகவதியின் மகனுக்கு தனது தந்தை 170 பவுன் நகையும் ரூ 1 கோடி ரொக்கமும் கொடுத்தார் என மருமகள் புகார் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக காவல் துறையில் காவல் துறை தலைமை இயக்குநர் பதவியை அடைந்த முதல் தமிழ் பெண் இவரே. இந்த பதவியை தமிழகத்தில் அடைந்த இரண்டாவது பெண்ணும் இவரே ஆவார். பல்வேறு உயர் பதவிகளை அடைந்த திலகவதி தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்து பதவி ஓய்வு பெற்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications