பாஜக கூட்டணியில் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் எங்கே போட்டியிடுகின்றன! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கமாக தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் எப்போதும் இரண்டாம் கட்டத்தில் தான் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த முறை முதல்கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் இத்தனை காலம் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக இந்த முறை தனியாகக் கூட்டணியை அமைத்துள்ளது. பாமக, தாமக, டிடிவி, ஓபிஎஸ் எனப் பலரும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர். இன்று தான் பாஜக தரப்பில் 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதற்கிடையே பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, தேனி லோக்சபா தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது. ஜிகே வாசனின் தாமக ஈரோடு, தூத்துக்குடி, ஶ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெரியரில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ராமநாதபுரம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை முறையே வேலூர் மற்றும் பெரம்பலூரில் போட்டியிடுகிறது. இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் சிவகங்கையிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசியிலும் போட்டியிடுகிறது இவை தாமரை சின்னத்திலேயே போட்டியிடுகிறது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி












Click it and Unblock the Notifications