சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பச்சை பச்சையாய்.. "டேஞ்சர்" உளவாளிகள்.. ஆர்எஸ்எஸ்ஸின் ஒரிஜினல் உருவம்.. கொந்தளிக்கும் பெரியாரிஸ்ட்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை வே மதிமாறன் வரவேற்றுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: காந்தியை நாங்கள் சுட்டுக்கொல்லவில்லை என்றால், அவரை கொன்றவர்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் இதுவரை என்ன பேசியிருக்கிறார்கள்? என்ன போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்? கோட்சே பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன? காந்தி பெயரில் அனுமதியை வாங்கி கொண்டு, கோட்சே பெயரில் ஊர்வலம் போவதுதான உங்கள் வேலையா?" என்று நறுக்கென கேட்டுள்ளார் வே.மதிமாறன்.

தமிழகத்தில் வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று ஆர்எஸ்எஸ், பேரணி நடத்துவதாக இருந்தது.. ஆனால், இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கருதி, இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த விவாதங்கள் சோஷியல் மீடியாவில் வெடித்து வருகின்றன..

அக்.,2ல் தயாராக இருங்க.. இது நமக்கான வெற்றி.. ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தடை குறித்து திருமாவளவன் பரபர பேச்சுஅக்.,2ல் தயாராக இருங்க.. இது நமக்கான வெற்றி.. ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தடை குறித்து திருமாவளவன் பரபர பேச்சு

ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

இந்நிலையில், எழுத்தாளரும், பெரியாரிஸ்ட்டுமான வே.மதிமாறன், ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அவரிடம் சில கேள்விகளையும், சந்தேகங்களையும் முன்வைத்தோம்.. "பேரணி என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே.. அதற்கு அனுமதி கிடையாது என்று சொல்ல முடியாதுதானே? ஆர்எஸ்எஸ் என்பது தடை செய்யப்பட்ட அமைப்பு அல்லவே, அப்படி இருக்கும்போது, தடை செய்ய கோருவது சரிதானா? என்றெல்லாம் கேள்விகளை முன்வைத்தோம்.. அதற்கு மணிமாறன் நம்மிடம் தந்த பதில்கள்தான் இவை:

 பச்சை பச்சை பொய்

பச்சை பச்சை பொய்

ஆர்எஸ்எஸ் கோர்ட்டுக்கு போவது நியாயமே இல்லை.. ஆர்எஸ்எஸ்-க்காக மட்டுமே போட்ட தடை கிடையாது.. பொதுவாக சட்டரீதியாக பார்த்தால், காந்தி ஜெயந்தி அன்று எந்தவித அசம்பாவித சம்பவமும் நடப்பதற்கான சூழல் உள்ளது.. ஆர்எஸ்எஸ் அன்றைய தினம் சம்பந்தமே இல்லாமல் ஊர்வலம் நடத்த போவதாக சொல்லி உள்ளனர்.. ஆர்எஸ்எஸ் என்றில்லை, யாராக இருந்தாலும் அன்றைய தினம் ஊர்வலம் நடத்தக்கூடாது என்றுதான் அரசு சொல்கிறது.. ஆனால், ஆர்எஸ்எஸ்தான் வேண்டுமென்றே அன்றைக்குதான் ஊர்வலம் போவோம் என்று பிடிவாதம் பிடிக்கிறது. காந்தி பிறந்தநாள் அதுவுமா, இவர்கள் எதுக்காக ஊர்வலம் போறாங்க என்று இதைதான் விசிக கேட்டது.

 டவுட் + பிணம்

டவுட் + பிணம்

அவர்கள் ஊர்வலம் போகிறோம் என்று சொன்னதால்தான் இந்த எதிர்ப்பு வலுத்தது.. ஆர்எஸ்எஸ் என்பது தடை செய்யப்பட்ட இயக்கமாக இல்லாவிட்டாலும், இந்த சமயத்தில் ஊர்வலம் போயாக வேண்டும் என்று தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்தது ஏன்? அதுவும் காந்தி ஜெயந்தி பிறந்த நாளை தேர்ந்தெடுக்க காரணம் என்ன? உதாரணத்துக்கு ஒருவீட்டில் கொலை நடந்துள்ளது என்று வைத்துக் கொண்டால், அந்த கொலையை செய்தவன்தான் அந்த பிணத்தை பார்த்து அதிகமாக அழுவான்.. காரணம், அவன் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது, மாறாக அனுதாபம் வர வேண்டும் என்பதற்காக..

 மஹா மஹா கேவலம்

மஹா மஹா கேவலம்

அதுமாதிரி, காந்தியை கொலை செய்தவர்களே இந்த ஆர்எஸ்எஸ்தான்.. இவங்களே ஊர்வலம் போறோம் என்று சொன்னதுதான் சந்தேகத்தை தருகிறது. ஆர்எஸ்எஸ்ஸின் பின்புலத்தில் இயங்கும் பாஜகவே மிக மோசமாக உள்ளது.. அதிலும் எப்ப பார்த்தாலும் பொய் பொய்யா பேசிட்டு இருக்காங்க.. இங்கே தமிழ்நாட்டு தலைவரே தினமும் பொய்களை பேசி வருகிறார்.. ஒரு மாநில நிதியமைச்சரின் காரை, மடக்கி கேவலமாக நடந்து கொண்டவர்கள் இந்த பாஜகவினர்.. அப்படியானால் இவர்களை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் எப்படி இருக்கும்? அமைச்சர்களுக்கே இங்கே பாதுகாப்பு இல்லை.. ஆர்எஸ்எஸ் இங்கே ஊர்வலம் போகக்கூடாது என்று சொல்வதற்கு பாஜகதான் காரணம்.. எனவே, மாநில அரசு சரியான நடவடிக்கையை எடுத்துள்ளது.. தடை கோருவது தவறுமில்லை..

டேமேஜ்

டேமேஜ்

காந்தி படத்தை துப்பாக்கியை சுட்டது யார்? காந்தியின் கொலையை நியாயப்படுத்துவது யார்? கோட்சேவை தியாகியாக்குவது யார்? காந்தியின் நினைவுகளுக்காகத்தான் இந்த ஊர்வலம் போகிறார்களா? காந்தி இந்த நாட்டுக்கு தேவையில்லை, அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என்று சொல்லி, இவர்கள் வரும் 2-ம்தேதி காந்தி சிலையை சேதப்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ் செய்வார்கள் என்பது கடந்தகால வரலாறு மட்டுமில்லை.. அது நிகழ்கால வரலாறுமாகும்.

 சூழும் நெருப்பு

சூழும் நெருப்பு

ஆர்எஸ்எஸ் ஆரம்பித்த காலத்தில் இருந்தே எடுத்துக் கொள்ளுங்கள், இவர்களுக்கும் தேசப்பற்றுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? ஒருமுறையாவது இவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடினார்களா? பகத்சிங் எவ்வளவு பெரிய தியாகி.. அவர் தூக்கிலிடப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் போராடியதா? ஒரு கண்டன அறிக்கைகூட தரவில்லையே.. பகத்சிங் படத்தை மட்டும் வைத்து கொண்டாடுகிறீர்களே ஏன்? சுதந்திர போராட்டத்தில் இவர்கள் காந்தியுடனும் போகவில்லை, பகத்சிங்குடனும் போகவில்லை.. இவர்கள் பிரிட்டிஷ் அரசுடன் போனார்கள்.

 முளைத்த விதை

முளைத்த விதை

சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதி தந்துவிட்டு வந்தபிறகு, அவர் மீதோ அல்லது அந்த அமைப்பில் உள்ளவர்கள் மீதோ ஏதாவது ஒரு கேஸ் இருந்ததா? பிரிட்டிஷ்காரனுக்கு எதிராக பேசாமல், ஆதரவாகவே கடைசிவரை செயல்பட்டனர்.. அதுமட்டுமல்ல, நமக்கு எதிரானவர்கள் பிரிட்டிஷ் கிடையாது, முஸ்லிம்கள்தான் என்று சொல்லி கலவரத்தை கட்டமைத்தவர்களே இந்த ஆர்எஸ்எஸ்காரர்கள்தான்.. இந்தியாவில், இந்து - முஸ்லிம் கலவரம் நடந்தால்தான், தாங்கள் சிறப்பாக இங்கே செயல்பட முடியும் என்பதை உணர்ந்த பிரட்டிஷ்பேர்வழிகள், சாவர்க்கர், ஆர்எஸ்எஸ் கும்பலை உளவாளியாக செயல்பட வைத்தனர்.. இஸ்லாமிய வெறுப்பை தவிர வேறு எதையும் இந்த ஆர்எஸ்எஸ் விதைக்கவில்லை.

 ஒரிஜினல் முகம்

ஒரிஜினல் முகம்

சரி, காந்தியை நாங்கள் சுட்டுக்கொல்லவில்லை என்கிறார்களே.. அப்படியானால் கொன்றவர்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் இதுவரை என்ன பேசியிருக்கிறீர்கள்? என்ன போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்? கோட்சே பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன? ஏன் இப்படி பொய் பொய்யா பேசறீங்க? ஒரிஜினல் உருவத்துடன் வாங்க.. கோட்சே பிறந்தநாளுக்கு ஊர்வலம் போகிறோம் என்றால், அனுமதி தரமாட்டார்கள் என்பதால்தான், காந்தி பெயரை பயன்படுத்துகிறார்கள்.. அப்படியானால் காந்தி பெயரில் அனுமதியை வாங்கி கொண்டு, கோட்சே பெயரில் ஊர்வலம் போவதுதான உங்கள் வேலையா?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

English summary
Which is RSSs true face and Denial of permission to rally is correct, says Periyarist Ve Mathimaran: Special interview
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X