யார் அந்த கருப்பு ஆடு? எடப்பாடி பழனிசாமிக்கு போன ரிப்போர்ட்.. நள்ளிரவில் பறந்த "கடைசி" போன் கால்
சென்னை: ஸ்டாலின் பாணியிலேயே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மாவட்ட செயலாளர்களுக்கு "அமைச்சர் பதவி" குறித்த அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளாராம்.. வாக்குப்பதிவிற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், எடப்பாடியின் இந்த கடைசி நிமிட 'செக்' அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து எக்ஸ்க்ளூசிவ் செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், முக்கிய உத்தரவு ஒன்றை தன்னுடைய கட்சி நிர்வாகிகளுக்கு பிறப்பித்திருந்தார்.. அதில், "திமுக மட்டுமல்லாமல் நம்முடைய கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் வெற்றிக்காகவும் உழைக்க வேண்டும். அவர்களும் ஜெயித்தால் தான் 200 இடங்கள் வெற்றி என்கிற இலக்கை அடைய முடியும்.

ஸ்டாலின் தந்த அட்வைஸ்
தோழமைக்கட்சிகள் மீது எந்த கருத்து வேறுபாடுகளும் கூடாது. தோழமைக் கட்சிகள் தோற்றால் அந்த தோல்வி அக்கட்சிக்கான தோல்வி மட்டுமல்ல , திமுகவின் தோல்வி என்பதாகத்தான் எடுத்துக்கொள்வேன்" என்று திமுக மா.செ.க்களுக்கும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
இந்த நிலையில், ஸ்டாலினின் பாணியில் நேற்று முதல் அதிமுகவின் மா.செ.க்கள் ஒவ்வொருவராக தொடர்புகொண்டு கடைசிக்கட்ட எச்சரிக்கையை கொடுத்து வருகிறாராம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக மாவட்ட செயலாளர்கள்
மா.செ.க்களை தொடர்பு கொண்டு பேசும் எடப்பாடி பழனிசாமி, இந்த முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டிய கூடுதல் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். என்னை விட உங்களுக்கு அதிகம் தெரியும். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடவில்லை.
மாவட்ட வாரியாக கூட்டணிக் கட்சிகளுக்கும் பிரித்து கொடுத்திருக்கிறோம். ஆனால், மாவட்ட த்தில் அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் தான் மா.செ.க்களும் பொறுப்பாளர்களும் கவனம் செலுத்துவதாகவும், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் கவனம் செலுத்துவதில்லை என்றும் எனக்கு புகார்கள் வருகின்றன..
எடப்பாடி பழனிசாமி வியூகம்
கூட்டணி கட்சி தோற்றுப்போனால் அது எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தான் வெற்றியை கொடுக்கும். எதிரிகள் ஜெயித்தால் அது நமக்கு பின்னடைவு தானே? அதனால் கூட்டணி கட்சிகளையும் ஜெயிக்க வையுங்கள். அந்த வகையில் உங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.
எல்லா தொகுதிகளையும் ஜெயித்துக் கொடுப்பவர்களுக்குத்தான் அதிமுக ஆட்சியில் அமைச்சர் பதவியை கொடுப்பேன். ஜெயித்து கொடுக்கவில்லையானால், முன்னாள் மந்திரியாக இருந்தவர்கள் முன்னாள் மந்திரிகளாகவே இருக்க நேரிடும். இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை செய்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி..
கடைசி நேர பேச்சு - அறிவுரை
அதுமட்டுமல்ல, இனி இருக்கும் சில மணி நேரத்தில், கடைசி கட்ட பணிகளில் தீவிரம் காட்டுங்கள். தலைமை ஏற்கனவே அறிவுறுத்தியபடி கடைசிக்கட்ட பணிகளில் பலர் அலட்சியம் காட்டுவதாக தெரிகிறது. அதிமுக தோற்றால் அதன் விளைவுகள் என்னை மட்டும் பாதிக்காது. அது உங்களையும் சேர்த்தே பாதிக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள்" என்றெல்லாம் அட்வைஸ் செய்துள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி.
தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள இந்த வியூகம் மிகவும் நடைமுறைக்குத் தேவையானது என்றே சொல்லலாம்.. ஏனென்றால், பொதுவாக பெரிய கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க சொந்த கட்சிப் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவார்கள்.
அமைச்சர் பதவி மீண்டும் கிடைக்குமா?
கூட்டணி கட்சிகள் தோற்றால் அது ஒட்டுமொத்தமாக ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பாதிக்கும் என்பதால், "அமைச்சர் பதவி" என்ற அதிகாரத்தைக் காட்டி எச்சரிப்பது நிர்வாகிகளைப் பொறுப்புடன் செயல்பட வைக்கும் ஒரு வலுவான தூண்டுகோலாகவே எடப்பாடியின் இந்த அட்வைஸ் பார்க்கப்படுகிறது..
ஸ்டாலின் ஏற்கனவே இதே பாணியைக் கையாண்டு வெற்றிகண்ட நிலையில், எடப்பாடியும் அதே பாதையைப் பின்பற்றுவது அடிமட்டத் தொண்டர்கள் வரை ஒரு எச்சரிக்கை உணர்வை உண்டாக்கும் என்பதால், இறுதிக்கட்டக் களப்பணியில் இது நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்..!!!
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications