சிக்கிடுச்சே "கறுப்பு ஆடு".. ஸ்டாலினிடம் "கிசுகிசுத்த" உதயநிதி?.. "கச்சேரி" இருக்கு.. கவனிக்கும் பாஜக
ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் விரைவில் டிரான்ஸ்பர் செய்யப்படலாம் என்கிறார்கள்
சென்னை: உதயநிதியின் அதிரடி அரசியல் ஆரம்பமாகி உள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று கோட்டையில் சுற்ற ஆரம்பித்துள்ளது..!!
திமுக இந்த முறை ஆட்சி அமைத்ததில் இருந்தே, ஒருசில சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறது.. மிஸ்டர் கிளீன் என்று சொல்லப்படும் அதிகாரிகளை, முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே நியமனம் செய்திருந்த நிலையில், அதுதான் திமுகவின் மவுசை எகிற வைத்து வருகிறது என்றே சொல்லலாம்.
ஆனால், அதேசமயம், திமுக அரசு குறித்த விவரங்கள் எதிர்தரப்புக்கு குறிப்பாக, தமிழக பாஜகவின் கைகளுக்கு செல்வதாகவும் சொல்லப்பட்டு வருகிறது..

கறுப்பு ஆடு
அரசின் திட்டங்கள் முதல் செயல்பாடுகள் வரை, பாஜக தரப்புக்கு செல்வது எப்படி? திமுக அரசு குறித்த பல்வேறு முக்கிய தகவல்களும் அண்ணாமலைக்கு எப்படி போகின்றன என்ற குழப்பமும் நீடித்தபடியே வருகிறது.. திமுக அமைச்சர்கள் மீது அண்ணாமலை தந்த புகார்கள் முதல், தீபாவளி பண்டிகையையொட்டி, டாஸ்மாக்கில் கிடைத்த விற்பனை தொகை வரை, எதிர்க்கட்சி கூடாரத்துக்கு எப்படி கிடைக்கிறது? என்பதுதான் கோட்டையின் கொந்தளிப்பை அதிகப்படுத்திவிட்டதாக தெரிகிறது. தீபாவளிக்கு முந்தைய 2 தினங்கள் சேர்த்து 725 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக பரப்பிவிடப்பட்டது, தவறான தகவலே என்றாலும்கூட, இதை கசிய விட்டது யார்? என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அன்றைய தினமே டோஸ் விழுந்திருக்கிறது..

ஸ்பை
அரசு தரப்பில் இருந்து, சில முக்கிய தகவல்கள் குறித்து, அண்ணாமலை தரப்புக்கு லிஸ்ட் எப்படி போகிறது? யார் அந்த கருப்புஆடு? என்பதை கண்டறியும்படி முதல்வர் தரப்பிலிருந்து உளவுத்துறைக்கு உத்தரவு போனதாகவும் தகவல்கள் வலம்வந்தன.. ஆனால், அந்த கருப்பு ஆடுகள் யாரென்று இதுவரை கண்டறியப்படவில்லை என்றே தெரிகிறது.. அரசு முன்னெடுக்கும் திட்டங்கள், பணிகள் குறித்தும் பாஜகவுக்கு மெசெஜ் பாஸ் செய்வது யார்? அரசு சார்ந்த விஷயங்கள் வெளியே லீக் ஆவது, ஆளும்தரப்புக்கு மைனஸாகவே பார்க்கப்படுவதுடன், இதனால் பெரும் பிரச்சினைகள் எழவும் வாய்ப்பாகிவிடும் என்பதால், கடும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது..

ஸ்பை வேவு
இப்படிப்பட்ட சூழலில்தான், திமுகவின் சீனியர்கள் அமைச்சர்கள் சிலர், உதயநிதியை நேரில் சந்தித்து பேசியிருப்பதாக தெரிகிறது.. அப்போது மூத்த மற்றும் முக்கிய அதிகாரிகளும் அவர்களுடன் சென்று உதயநிதியை சந்தித்து, சில ஃபைல்களையும், ஒரு லிஸ்ட்டையும் தந்திருக்கிறார்கள். சீனியர்கள் உதயநிதியிடம், "இந்த அரசுக்கேற்ற துறை ரீதியான அதிகாரிகள் செயல்படவில்லை.. பெரும்பாலும் அதிமுக ஆட்சி நடப்பது போலவே, அதிகாரிகளின் போக்குகள் இருந்து வருகின்றன.. மீதமுள்ள அதிகாரிகளும், மத்திய அரசுக்கு "ஸ்பை" போலவே வேலை பார்த்து வருகிறார்கள்.. வேவு பார்ப்பது, அரசு திட்டங்களை லீக் செய்வது, என்று அதிகாரிகள் செயல்படுவது, நம்முடைய திமுக அரசுக்கு நல்லதல்ல..

கருப்பு ஆடு
ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது, திமுகவுக்காக 10 வருடமாக உழைத்தவர்களுக்கும், இந்த கட்சியால் எதுவும் நன்மை செய்ய முடிவதில்லை.. அதற்கு அதிகாரிகள் இடையூறாக உள்ளனர். அதிமுக, பாஜகவுக்கு விசுவாசமாகவே இந்த அதிகாரிகள் உள்ளதால், இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு செல்ல முடிவதில்லை.. காரணம், இந்த அதிகாரிகளில் ஒருசிலர் முதல்வரின் குட்புக்கில் உள்ளதால், முதல்வரை தங்களால் சந்திக்கவும் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.. மேலும், அமைச்சர்களை பற்றியும் தவறான பிம்பத்தை முதல்வரிடம் ஏற்படுத்திவிடுகிறார்கள்.. இதே நிலை நீடித்தால், திமுக அரசுக்கு இந்த கருப்பு ஆடுகளாலேயே ஆபத்து வரும் என்று உதயநிதியிடம் கூறினார்களாம்..

கச்சேரி இருக்கு
ஆனால், இதே புகார்கள் பலமுறை உதயநிதியின் காதில் விழுந்துள்ளதால், இந்த முறை சீனியர்கள் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டதுடன், முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்றாராம்.. சில ஃபைல்களையும் முதல்வரிடம் தந்துள்ளதாக தெரிகிறது.. எனவே, விரைவில் அந்த கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை பாயும் என்கிறார்கள்.. அதாவது பொங்கல் முடிந்ததுமே, பல ஐஏஎஸ் அதிகாரிகளின் டிரான்ஸ்பர் நிகழலாம் என்கிறார்கள்..

ஃபைல்கள்
சில தினங்களுக்கு முன்பு, அதாவது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற நாளன்று, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் ஒரு டிவி சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில் உதயநிதி அமைச்சராவதால் வரும் நன்மை குறித்து கூறியிருந்ததுடன், திராவிட சித்தாந்தத்தை இளைஞர்களிடம் கொண்டுசெல்ல, சினிமாவில் நடிப்பதை உதயநிதி கைவிடக்கூடாது என்றும் தன்னுடைய விருப்பத்தை அதில் கூறியிருந்தார்.. ஷ்யாம் அப்போது மேலும் சொல்லும்போது, "திமுக அரசின் பல திட்டங்களை பூதக்கண்ணாடி வைத்துகொண்டு எதிர்க்கட்சிகள் பார்த்து வருகின்றன..

ஸ்பீடு உதய்
குறிப்பாக, எந்த திட்டத்தின் ஃபைல்களும் எளிதில் நகர்வதில்லை, கிடப்பிலேயே உள்ளது என்ற விமர்சனமும் குறையும் திமுக மீது உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், உதயநிதியின் அமைச்சர் பதவியானது, திட்டங்களை விரைவுப்படுத்த உதவும்.. திமுக மீதான குறைகளை களைக்க, உதயநிதியின் செயல்பாடு அமையும்.. ஆனாலும், காட்சி ஊடகத்தில் அவரது பங்களிப்பு இனி நிறையவே உள்ளது என்பதை உதயநிதி மறந்துவிடக்கூடாது" என்று கூறியிருந்தார்.. அந்தவகையில், கோட்டையில் வேகம் எடுத்துள்ளது உதயநிதியின் அதிரடி அரசியல்.. பலன் தருமா? பார்ப்போம்..!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications