முன்பதிவு வேண்டாம்.. நாளை மறுநாள் முதல்.. பூஸ்டர் தடுப்பூசி யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம் தெரியுமா?
சென்னை: கொரோனா தடுப்பூசி இரு தவணை எடுத்துக்கொண்டவர்கள், பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்வது குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது.

உலக அளவில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. கொரோனா முதல் அலை உச்சத்தில் இருக்கும்போதே இதிலிருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டும்தான் ஒரே ஆயுதம் என மருத்துவ உலகம் தெரிவித்தது. இதையடுத்து உலகமெங்கும் கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்கியது.
கொரோனாவை தடுக்க உலகளவில் பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை கோவேக்சின் மற்றும் கோவி ஷீல்ட் தடுப்பூசிகள் மத்திய அரசால் எல்லோருக்கும் வழங்கப்பட்டது.
உலக அளவில் தடுப்பூசி செலுத்தியபின் கொரோனா அலை சற்று குறைந்தது. தற்போது மீண்டும் கொரோனா உச்சத்தை அடைந்திருக்கிறது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அதன் வீரியம் குறைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கொரொனா முற்றிலும் குறையாததால் மீண்டும் தடுப்பூசி செலுத்த மருத்துவ உலகம் ஆலோசித்தது.
இதையடுத்து பூஸ்டர் தடுப்பூசியை பரிந்துரைத்தனர் ஆய்வாளர்கள். இதையடுத்து இந்தியாவில் ஜனவரி 10ம் தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள புதிதாக பதிவு செய்ய தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறைஅறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'தடுப்பூசிக்கான காலஅட்டவணை ஜனவரி 8ம் தேதி ) வெளியிடப்படும். பூஸ்டர் டோசுக்கு புதிதாக பதிவு செய்ய தேவையில்லை. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் நேரடியாக கொரோனா தடுப்பூசி மையத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், முந்தைய 2 தவணைகளில் எந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்களோ அதே தடுப்பூசியே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தப்படும்.கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும் கோவிஷீல்டு செலுத்திக்கொண்டவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் செலுத்தப்படும்.
இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனுடன் ஓமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, வார இறுதியில் முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகளை பல்வேறு மாநில அரசுகளும் விதித்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications