விஜய்யை அரசியலுக்கு வர சொன்னது இவர்தானாமே! திடீரென வந்த தகவல்! அதிர்ந்த ரசிகர்கள்
சென்னை: நடிகர் விஜய்யை அரசியலுக்கு வர சொன்னதே இவர்தான் என்ற தகவல் கிடைத்துள்ளதால் இரு தரப்பினரின் ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனராம்.
சினிமா நடிகர்கள் தங்களின் ரசிகர் மன்றங்கள் மூலம் பொதுமக்களுக்கு உதவிகளை செய்ய அறிவுறுத்துகிறார்கள். இதைத் தொடர்ந்து தேவைப்பட்டால் அந்த ரசிகர் மன்றங்கள் அரசியல் அமைப்புகளாக மாற்றி அரசியல் துறைக்கு வருகிறார்கள்.

எம்ஜிஆர், என்டி ராமாராவ் உள்ளிட்டோரின் ரசிகர்களே கட்சியினராக மாறியதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் தனக்கென ரசிகர்களை மன்றங்களாக மாற்றி அரசியல் கட்சியாக மாற்றியவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த்.
ஆஸ்தான நடிகருக்கு பிறந்த நாள் என்றால் கேக் வெட்டுவது கட் அவுட் வைப்பது என இல்லாமல் ரத்த தானம், ஏழைகளுக்கு நலத் திட்டங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்ய வைத்தவர்கள். அந்த வகையில் நடிகர் விஜய்யும் தனக்கான ரசிகர்களை வைத்து கட்சியை தொடங்கியுள்ளார்.
அவருடைய ரசிகர் மன்றத்தின் பெயர் விஜய் மக்கள் இயக்கம் என இருந்தது. அந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜய்யின் பிறந்தநாள், திருமண நாள், விஜய் திரைப்பட ரிலீஸ், வெற்றி விழா உள்ளிட்டவைகளின் போது ரத்த தானம், அன்னதானம், மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வாங்கித் தருவது, ஏழை எளியோருக்கு அத்தியாவசியத் தேவையை வாங்கித் தருவது என செய்து வருகிறார்கள்.
இதனால் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடாது என்றும், 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலே தனது இலக்கு என்றும் கூறிய நடிகர் விஜய், 2026 ஆம் ஆண்டுக்குள் தாம் ஒப்புக் கொண்டுள்ள திரைப்படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாகவே மாறுவேன் என தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகை எந்த கட்சிக்கு சாதகம், யாருக்கு பாதகம் என அலசி வரும் நிலையில் விஜய் குறித்து கமல்ஹாசன் கூறிய ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று ஆழ்வார்பேட்டையில் கொண்டாடப்பட்டது.
அங்கு கட்சியின் கொடியை ஏற்றி வைத்த கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில் விஜய்யை அரசியலுக்கு வருமாறு முதல்முறையாக அழைத்தது நான்தான் என்றார்.
பின்னர் அவரிடம் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என அறிவித்துள்ளார், ஆனால் நீங்களோ பிக்பாஸில் கலந்து கொண்டும், படங்களில் நடித்துக் கொண்டும் அரசியலில் ஈடுபடுகிறீர்களே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல்ஹாசனோ சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் ஈடுபடுவது விஜய்யின் பாணி. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாணி இருக்கும் என பதில் அளித்திருந்தார். விஜய்யை அரசியலுக்கு அழைத்ததே நான்தான் என கமல் கூறியதால் இரு தரப்பினரின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி











Click it and Unblock the Notifications