Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டரியல்" பாஜக.. "தாமரை"யின் தலையில் சைஸா குட்டு வைத்த அதிமுக.. சைக்கிள் கேப்பில் திமுக என்ட்ரி.. செம

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை பொதுக்குழுவில் என்ன நடக்க போகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளுக்கு நாள் எழுச்சி பெற்று வருவதாக சொல்லிக் கொள்ளும் பாஜகவை, மட்டுப்படுத்த அதிமுகவே தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.. இந்நிலையில் யார், தமிழகத்தின் எதிர்கட்சி என்ற பேச்சு அடிபடுவதுடன், நேரடியாகவே அதிமுக-பாஜகவுக்கும் இடையே போட்டி வலுத்து வருகிறது.

திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் பாஜக சொல்லி வருகிறது.. மற்றொரு பக்கம் பெரிய அளவிலான எதிர்ப்பைக் காட்டாமல் அதிமுக சாதாரணமாகவே செயல்பட்டு வருகிறது.

 சேனல்கள் - மெம்பர்கள்

சேனல்கள் - மெம்பர்கள்

திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டபோதுகூட, அதிமுக தரப்பு அந்த விஷயத்தை பெரிதாக்கவில்லை.. கமெண்ட் எதுவும் தரவில்லை.. அவர்களின் கட்சி சேனல்களில்கூட அது சம்பந்தமான செய்திகளை வெளியிடவில்லை என்றே தெரிகிறது.. பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி ஒருமுறை பேட்டி தரும்போது, 67 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு அதிமுக எதிர்க்கட்சியாக உரியமுறையில் செயல்படவில்லை, 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட பாஜக தமிழகத்தில் எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருவதாக வெளிப்படையாகவே சொன்னார்.

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

இதற்கு முன்பும் நயினார் நாகேந்திரன், தடித்த வார்த்தையை சொல்லி அதிமுகவை விமர்சித்திருந்தபோதிலும், அதிமுக அமைதி காத்தது.. விபி துரைசாமி பேசும்போதும் அமைதி காத்தது.. தமிழகத்தில் வாக்கு அடிப்படையில் திமுகவை விட, அதிமுகவுக்கு அதிக சதவீதம் இருந்தபோதிலும், மக்கள் மனதில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்க தவறிவிடுகிறதோ என்ற அச்சம் தற்போதுதான் மெல்ல எழுந்து வருகிறது.. அதனால்தான், அக்கட்சியின் ஒவ்வொரு சீனியர்களும், எதிர்ப்பை தெரிவிக்க தொடங்கிவிட்டனர்.

 2ம் கட்ட தலைவர்கள்

2ம் கட்ட தலைவர்கள்

முதலில் அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்களே எதிர்ப்பை காட்டி வந்த நிலையில், ஓபிஎஸ்தான் இந்த விவகாரத்தில் இப்போது மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.. நேற்றைய தினம் அவர் விடுத்திருந்த அறிக்கையானது, திமுகவுக்கு எச்சரிக்கையாக விடுக்கப்பட்டாலும், பாஜகவின் தலையில் குட்டு வைப்பதுபோலவே, அந்தஅறிக்கை காணப்பட்டது..

 சைக்கிள் கேப்

சைக்கிள் கேப்

சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுகவே விளங்குகிறது... ஆனால் எதிர்க்கட்சி செயல்பாடுகளில் அதிமுக பின் தங்கியிருப்பது போன்ற மாயத்தோற்றம் சமீபகாலமாக உருவாக்கப்பட்டு வருகிறது.. மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காணும் இயக்கமாக அதிமுக செயல்படுகிறது... தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரதமர், மத்திய அமைச்சர்களுக்கு நான் பல கடிதங்களை எழுதியுள்ளேன்" என்று பதிவு செய்துள்ளார்..

 மெசேஜ் என்ன?

மெசேஜ் என்ன?

அதாவது, என்னதான் திமுகவை குறை சொல்லி, தினமும் திட்டி தீர்த்து சவால்களை விட்டாலும், களத்தில் இறங்கி மக்கள் பக்கம் நின்று பிரச்சனைகளை பேசும் கட்சியே, பிரதான எதிர்க்கட்சியாகும் என்பதைதான் ஓபிஎஸ் இந்த அறிக்கை மூலம் தெரியப்படுத்தி உள்ளார்.. அதன்மூலம் தாங்கள்தான் எதிர்க்கட்சி என்ற மறைமுகமான மெசேஜையும் அதிமுக சொல்லி உள்ளதாக தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் நாளைய தினம், அதிமுகவின் பொதுக்குழு கூடுகிறது.

 தமிழ்மகன் உசேன்

தமிழ்மகன் உசேன்

ஏற்கனவே அந்த கட்சிக்குள் ஏகப்பட்ட உட்கட்சி பூசல் இருந்தாலும், தற்காலிக அவைத் தலைவராக இப்போது தமிழ்மகன் உசேன் உள்ள நிலையில், புதிய அவைத்தலைவர் நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய திட்டங்களை திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது... இதுபோக, பாஜகவுக்கு எதிராக அல்லது அந்த கட்சியின் அதிரடிகளை, மட்டுப்படுத்தும் விதமாக ஏதாவது தீர்மானம் இயற்றலாம், அல்லது விவாதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

 சைக்கிள் கேப்

சைக்கிள் கேப்

பாஜக - அதிமுகவின் மறைமுக மோதல் மற்றும் களேபரங்களுக்கு நடுவில் திமுக ஒரு விஷயத்தை செய்துள்ளது.. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் சாமிநாதன், செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் திமுகதான் எப்போதும் முதலிடம் என்பதை அதிமுக-பாஜக ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்றும், பாஜகவுடன் அதிமுக போட்டியிடுவது வருத்தம் அளிப்பதாகவும் சாமிநாதன் தெரிவித்தார்... ஆக, இந்த ரணகளத்திலும், சந்துவில் சிந்து பாடிவிட்டு போயுள்ளது திமுக..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+