யார் அந்த தாவூத்? டைட்டானிக் நீர் மூழ்கி கப்பலுக்குள் மாட்டியது எப்படி? அதிர வைக்கும் பின்னணி!
சென்னை: டைட்டானிக் கப்பலை பார்க்க போய், கடலுக்குள் காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கி கப்பலுக்குள் பாகிஸ்தானை சேர்ந்த தாவுத் என்ற நபர் மாட்டிக்கொண்டு உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
Recommended Video
டைட்டானிக் கப்பலை பார்க்க செல்வது என்பது உலகம் முழுக்க மிகப்பெரிய சுற்றுலாவாக இருக்கிறது. டைட்டானிக் கப்பலை பார்க்க கோடி கோடியாக செலவு செய்து பலர் செல்வதும் உண்டு. அந்த வகையில் டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா பயணங்களை நடத்தும் நிறுவனம்தான் the OceanGate . இவர்களிடம் பல்வேறு சிறிய அளவிலான சுற்றுலா நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் தி டைட்டன்.

டைட்டன் நீர்மூழ்கி மூலம் இதற்கு முன் பயணிகள் பலர் டைட்டானிக் கப்பலை சென்று பார்த்து உள்ளனர். 10 முறைக்கும் மேல் இந்த டைட்டன் டைட்டானிக்கை சென்று வெற்றிகரமாக பார்த்துவிட்டு திரும்பி உள்ளது. இதில் ஒரே ஒரு முறை.. டைட்டன் நீர் மூழ்கி சுமார் 2 மணி நேரங்கள் வரை காணாமல் போன சம்பவங்கள் கூட நடந்து உள்ளன.
ஆனால் அவை உடனே உடனே கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்த முறை டைட்டானிக்கை பார்க்க சென்று டைட்டன் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் காணாமல் போய் உள்ளது. இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் இந்த கப்பல் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதிர்ச்சி தகவல்கள்: இந்த நிலையில் இந்த கப்பலில் பயணம் செய்த பயணிகள் குறித்த அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. டைட்டன் கப்பலில் இருந்த ஐந்து பேரில், இதுவரை நான்கு பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் - ஹமிஷ் ஹார்டிங், 58 வயதான பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் ஆய்வாளர். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, மற்றும் 77- ஒரு வயது பிரெஞ்சு ஆய்வாளர் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் உள்ளனர்.
இந்த கப்பலை மீட்க இன்னும் 10 மணி நேரம் மட்டுமே அவகாசம் உள்ளது. அதற்கு பின் கப்பலுக்கு உள்ளே ஆக்சிஜன் தீர்ந்துவிடும் என்பதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் உள்ளே சிக்கி இருக்கும் உயிர்களை மீட்க போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.

பாகிஸ்தான் தாவுத்: இந்த நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, ஆகியோர் உள்ளனர். இவர் பிரிட்டிஷ் தொழிலதிபர் என்றாலும் பாகிஸ்தான்தான் இவரின் பூர்வீகம்.
ஷாஜதா தாவூத், 48, பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பிரின்ஸ் அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தில் போர்ட் உறுப்பினராகவும் உள்ளார்.எங்ரோ கார்ப்பரேஷனின் துணை தலைவராகவும் இவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிறுவனம் உரங்கள், உணவு மற்றும் எரிசக்தி உற்பத்தி செய்கிறது. இவர் அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பல்கலைக்கழகத்தில் உலகளாவிய டெஸ்டிங் மார்க்கெட்டிங் பிரிவில் எம்.எஸ்சி. மற்றும் பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. படித்தவர். இவர் ரசாயனங்கள் தயாரிக்கும் தாவூத் ஹெர்குலஸ் கார்ப்பரேஷனின் துணைத் தலைவராகவும் உள்ளார்.
பாகிஸ்தானிலேயே பணக்கார குடும்பங்களில் இவர்களின் குடும்பமும் ஒன்று. சுற்றுலாவில் அதிக ஆர்வம் கொண்ட இவர் டைட்டானிக்கை பார்க்க சென்று கடலில் தற்போது காணாமல் போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications