யாரெல்லாம் தேவர் சமுதாயம்? அரசாணையை அமல்படுத்தகோரிய வழக்கு.. தீர்ப்பை ஒத்திவைத்த மதுரை ஹைகோர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகியோரை தேவர் சமுதாயம் என்று அறிவித்த அரசாணையை நடைமுறைப்படுத்தக்கோரிய தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதில் தேவர் சமுதாயமும் ஒன்று. இந்த சமுதாயத்தில் பல உட்பிரிவுகள் உள்ளன. இந்நிலையில் தான் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஸ்டாலின். வழக்கறிஞரான இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் தேவர் சமுதாயம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் கடந்த 1995ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:
தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையோர் இணைந்த சமுதாயத்தை தேவர் என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக கடந்த 11.9.1995ல் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இந்த அரசாணை என்பது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
மேலும் தேவர் சமுதாயம் என அழைக்கப்படாத நிலையில் கள்ளர், அகமுடையோர் மற்றும் சேர்வை பிரிவினர் பிற்படுத்தப்பட்ட பிரிவிலும், பிரமலைக் கள்ளர், மறவர் பிரிவினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலும் இருக்கின்றனர். அதாவது ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பல பிரிவுகளாக இருக்கின்றனர். எனவே தமிழ்நாடு அரசின் அரசாணையை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்'' என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. மனுதாரர் தரப்பில், கள்ளர், மறவர், அகமுடையோரை தேவர் சமுதாயம் என்று அறிவித்த அரசாணை வெளியிட்டு 30 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் குழப்பங்கள் நிலவி வருகிறது. இதனை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் இன்று முடிவடைந்ததன. இதையடுத்து நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications