"லாஸ்ட் மினிட்ல" இப்படி ஆயிடுச்சே.. "நெளியும்" எடப்பாடி.. B-டீம்?.. சாட்டையை சுழற்றும் "ஆபீசர்ஸ்"
சென்னை: திமுகவின் பிடீம் ஓபிஎஸ்தான் என்கிறது ஒரு தரப்பு.. இல்லையில்லை, திமுகவின் பிடீம் எடப்பாடிதான் என்கிறது இன்னொரு தரப்பு.. இப்படி இரு தரப்பு சலசலப்புகளுக்கிடையே, லஞ்சஒழிப்புத்துறை சார்பாக இன்று மிகப்பெரிய டென்ஷன் எடப்பாடிக்கு சூழ்ந்து கொண்டுள்ளது.. என்ன காரணம்?
கடந்த அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்கிற திட்டத்தின் கீழ் புதிதாக 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன.
கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்பட 11 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை அமைக்க அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.

பெருந்தொகை: இந்தக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும். ஆனால் அப்படி இல்லாமல் முறைகேடுகள் நடந்துள்ளன என்று புகார்கள் எழுந்தன.. ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 76 ஆயிரத்து 778 சதுர அடிகளில் கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 9 லட்சத்து 99ஆயிரத்து 296 சதுர அடிகளில் மட்டுமே கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 1 லட்சத்து 77ஆயிரத்து 482 சதுர அடி கட்டடம் கட்டப்படவில்லை. இதன்மூலம் 52 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல 11 மருத்துவக் கல்லூரிகளிலும் பெருந்தொகை முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
முகாந்திரம்: இதில், கட்டுமான நிறுவனங்கள், அப்போதைய முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கூட்டுச்சதி செய்து பெரும் தொகை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது... இந்த புகாரில் எடப்பாடி மீது விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி, லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியிருந்தது. இந்த நிலையில் 2017 - 21 கால கட்டத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கு முகாந்திரம் உள்ளதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம்தான் எடப்பாடிக்கு தலைவலியை உண்டுபண்ணி உள்ளது.
பி - டீம்: திமுக ஆட்சிப்பொறுப்பை ஏற்றதில் இருந்தே, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்து வருவதாக ஒரு கருத்து நிலவுகிறது.. ஆனால், எடப்பாடி தரப்போ, ஓபிஎஸ்தான் திமுகவின் பி-டீமாக செயல்படுகிறார் என்று குற்றஞ்சாட்டி வருகிறது.. கடந்த ஒன்றரை வருடங்களில், எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட மாஜி அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டுகள் பலமுறை நடத்தப்பட்டது.. ஆனால், இதுசம்பந்தமான எந்தவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று மூத்த தலைவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். குறிப்பாக 2 தலைவர்களின் பேட்டிகளை இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.
மடியில் கனம்: அதிமுகவின் சீனியர் தலைவர் கேசி பழனிசாமி ஒருமுறை பேட்டியின்போது, 'சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், மற்றும் அந்த "மணிகள்" என மணிகளுக்கான அரசாங்கமாகவே இது மாறிவிட்டது.. இவர்கள் காலத்தில்தான் ஊழல்கள் பெருக்கெடுத்தது..மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்கிறாரே எடப்பாடி.. "உங்க மடியில் நிறைய லோடு இருக்கு"ன்னு ஸ்டாலின் சொல்லனுமா இல்லையா? ஏன் சொல்லல? கொடநாடு விஷயத்தில் உண்மை குற்றவாளி கண்டுபிடிப்பேன், நான் கலைஞரின் மகன் என்றெல்லாம் சொன்னாரே.. இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார் ஸ்டாலின்.. அப்படியென்றால், எடப்பாடி பழனிசாமி மட்டும் தனக்கான பாதுகாப்பை தேடிக் கொண்டாரா? அல்லது ஒருவேளை அதிமுகவை நல்லவிதமாக பிளந்து, அதன்மூலம் அதிமுகவின் வாக்குகளை சிதறடித்து, மறைமுகமாக திமுகவின் வெற்றிக்கு உதவ போகிறாரா?

பிளவுகள்: திராவிடமா? இந்துத்துவாவா? திமுகவா? பாஜகவா? இந்த அடிப்படையில் கொண்டு போக வேண்டும் என்று மட்டுமே ஸ்டாலின் நினைக்கிறார்.. இதற்கு எடப்பாடியும், அதிமுகவை எந்த அளவுக்கு பிளக்க முடியுமோ, அந்த அளவுக்கு இயக்கத்தை பார்த்துக் கொள்வார் என்றும் ஸ்டாலின் நம்புகிறார்.. இப்படி மாஜிக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக ஒரு போக்கு காட்டிக் கொண்டால், திமுக அரசாங்கம் ஊழலற்ற அரசாங்கமாக இருக்கும் என வெளித்தோற்றத்தை ஏற்டுத்த முனைகிறார் ஸ்டாலின்" என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
அதேபோல, ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரான மருது அழகுராஜ் நம்முடைய ஒன் இந்தியா சேனலுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அப்போது, "கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை கண்ணால் பார்த்த சாட்சியான கிருஷ்ண பகதூரும் கொல்லப்பட்டு விட்டார் என்றே தெரிகிறது. இந்த வழக்கில் திமுகவின் பிடியின் எடப்பாடி சிக்கிக் கொண்டு திமுகவுக்கு மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமி உதவுகிறார்.. ஓபிஎஸ்ஸை திமுகவின் பி டீம் என சொல்கின்றனர். உண்மையில் திமுகவுக்கு மறைமுகமாக உதவி செய்பவர் எடப்பாடி பழனிச்சாமிதான்.. அவர் தான் திமுகவின் உண்மையான பி டீம்.." என்று கூறியிருந்தார்.
ஆக, திமுகவின் பி-டீமாகவே எடப்பாடி பழனிசாமியை அதிமுக தலைவர்கள் விமர்சித்து வரும்நிலையில், திமுக இதற்கு எந்தவிதமான எதிர்வினையையும் ஆற்றவில்லை.. பலம்வாய்ந்த மெகா கூட்டணியை எடப்பாடி உருவாக்க போவதாக அன்றைய தினமே சொல்லியிருந்த நிலையில், இது திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருந்தது.. போதாக்குறைக்கு, பாஜக - அதிமுக கூட்டணியும் தற்போது உறுதியாகி உள்ளது.. இன்றைய தினம் பிரதமர் மோடியும், எடப்பாடியை சந்தித்து பேச போகிறார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், எடப்பாடி மீதான ஊழலை விசாரிக்க அனுமதி கிடைத்துள்ளது..
லஞ்ச ஒழிப்புத்துறை இனி தன்னுடைய வேலையை துவங்க போகிறது.. முழுக்க முழுக்க இவையெல்லாம் நீதிமன்ற நடவடிக்கைகள் என்றாலும்கூட, இதை எடப்பாடி தரப்பு எப்படி கையாள போகிறது? எப்படி குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள போகிறது? என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.. எனினும், அதிமுக கூட்டணிக்கு கிட்டத்தட்ட டேமேஜை தரக்கூடிய நிகழ்வாகவே இது பார்க்கப்பட்டு வருகிறது.. அதிலும், பொதுச்செயலாளராக பொறுப்பேற்று, முதல்முறையாக பிரதமர் மோடியை இன்று எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ள நிலையில், இப்படி ஒரு அறிவிப்பு கடைசி நேரத்தில் வந்துள்ளது அதிமுக தரப்புக்குள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது!!
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications