ரேஷன் டூ சென்னை கார்பரேஷன்! "மேயர்" ஸ்டாலின் டீமில் இருந்தவர்.. யார் இந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்?
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஜெ ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டமான சிங்கார சென்னை 2. 0வை செயலாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டனர். அவர்களில் உணவு பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்த ஜெ ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கால்நடை மருத்துவம் பயின்றவர். 1992 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார். 1994 ஆம் ஆண்டு தூத்துக்குடி சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

1996 முதல் 1999 ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் நிதித் துறை துணைச் செயலாளராக பணியாற்றினார். மேலும் 1999 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை குடும்ப நலத் துறை செயலாளராகவும் இருந்தார். 20001 இல் சேலம் மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இவர் சென்னை மாவட்டத்தின் நில வருவாய் மற்றும் மாவட்ட நிர்வாக ஆணையராக இருந்தார். சேலத்தில் பெண் சிசு கொலைக்கு எதிராக தீவிரமாக போராடினார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு பதவிகளை வகித்த ராதாகிருஷ்ணன் 2004 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த போதுதான் கும்பகோணம் பள்ளியில் தீவிபத்து நடந்து 90 குழந்தைகள் தீயில் கருகின. இந்த சம்பவத்தை மிகவும் சாதுர்யமாக கையாண்டதை அடுத்து முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் பாராட்டு பெறறார். அது போல் 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட போது மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அவர் 2005 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மிகவும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு மாற்றலாகினார். அங்கு 2006 ஆம் ஆண்டு வரை ஆட்சியராக இருந்த அவர் சுனாமியால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்காக காப்பகத்தை உருவாக்கினார்.
அந்த குழந்தைகள் தற்போது பெரியவர்களாகி அவர்களுக்கு திருமணத்தையும் ராதாகிருஷ்ணன் தனது மனைவியுடன் சென்று நடத்தி வருகிறார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டனால் பாராட்டப்பட்டவர். இதைத் தொடர்ந்து அவர் தமிழகத்தின் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த போது உறுப்புதானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொற்று நோய் தடுப்பு பணிகளையும் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு போக்குவரத்து துறை முதன்மை செயலாளராக பொறுப்பேற்ற ராதாகிருஷ்ணன் 2021 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறப்பு திட்ட அமலாக்கத் துறையின் செயலாளராக தேர்வானார். இதைத் தொடர்ந்து அதே ஆண்டு அவர் தமிழக சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது கொரோனா உச்சத்தில் இருந்த நிலையில் மிக சிறப்பாக தமிழகத்தை கொரோனா அரக்கனிடம் இருந்து காப்பாற்றினார். கொரோனா மட்டுமல்லாமல் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் உள்ளிட்டவைகளையும் திறமையாக கையாண்டார்.

சுமார் 8 ஆண்டுகளாக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் உணவு பாதுகாப்பு துறை (ரேஷன்) செயலாளராக மாற்றப்பட்டார். அங்கு பருப்பு, எண்ணெய் பதுக்கல் சம்பவங்களை தடுத்து நிறுத்தினார். குடோன்களில் அடுக்கப்பட்ட மூட்டைகளின் மீது ஏறி போய் அந்த மூட்டைகளில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பார். இவரால் பருப்பு விலை குறைந்தது. அது போல் எந்த துறையில் இருந்தாலும் சிறப்பாக செயல்படுவார். தற்போது அவர் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் கனவுத்திட்டமான சிங்கார சென்னை 2.0 திட்டத்தை திறமையாக செயல்படுத்துவார். 1996 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது அவருடைய டீமில் இருந்து ராதாகிருஷ்ணன் பணியாற்றியவர். மேயராக இருந்த போதுதான் ஸ்டாலின் சிங்கார சென்னை திட்டத்தை அமல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications