"பிஜேபி B டீம்".. நாம் தமிழர் கட்சி "மேனகா"வின் கணவர் பாஜக நிர்வாகியா.. நவநீதன் ஆவேச மறுப்பு.. பரபர
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவின் கணவர் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளர் மேனகாவின் கணவர் பாஜகவின் நிர்வாகி என்று இணையத்தில் தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. ஆனால், இதை பொய் என்று மறுத்துள்ள மேனகாவின் கணவர், விளக்கம் அளித்து வீடியோவும் வெளியிட்டுள்ளாராம்,
கடந்த 2021 தேர்தலில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் 10 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றன
இதுவரை தனித்து தேர்தல்களை சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் காங்கிரசின் தோல்விக்கு காரணமாக இருந்துள்ளதை மறுக்க முடியாது. கடந்த முறை, இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை பிடித்திருந்தது நாம் தமிழர் கட்சி..

டாப் 3
பாஜகவை போலவே, காங்கிரஸையும் பொதுவான அரசியல் எதிரியாக கருதி வருகிறது நாம் தமிழர் கட்சி.. "பாஜக - காங்கிரஸ் இவங்க 2 பேரும் ஒன்றுதான்" என்று அடிக்கடி சொல்லி கொண்டே இருப்பவர் சீமான்.. அதனால்தான், மற்ற தொகுதிகளைவிட, காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும், எப்போதுமே கூடுதலாக கவனம் செலுத்தி, பிரச்சாரங்களிலும் ஈடுபடும் நாம் தமிழர் கட்சி. அந்தவகையில், ஒவ்வொரு தேர்தலிலும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் வாக்குகளையும் பிரிப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது நாம் தமிழர் கட்சி.. நடக்க போகும் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாத சூழலில், நாம் தமிழர் கட்சி 2வது அல்லது 3வது இடத்தை கூட தக்கவைக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..

மேனகா
3 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த சீமான், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா போட்டியிடுவார்.. மொழிப்பற்று, இனப்பற்று கொண்ட பெண். அதனால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது... கடுமையான உழைப்பை இத்தொகுதியில் நாங்கள் கொட்டுவோம்.. எங்களால் முடிந்தது அதுதான். எங்களது பலவீனம் என்ன என்று எங்களுக்குத் தெரியும். எங்களிடம் பணம் இல்லை. எங்களது பலம் என்பது கடுமையான உழைப்பு. கடுமையாக உழைத்து எங்கள் வேட்பாளரை வெல்ல வைப்போம்.. தலைவனை மக்கள் தேட வேண்டும். வழியில்லை என்று சொல்லக்கூடாது. வழியை உருவாக்க வேண்டும்.

பேஷன் டிசைனிங்
ஆளும் கட்சி ஜெயிக்கும் என்பது பிம்பம். மக்கள் மாற்றத்தை விரும்பினால் எந்த கட்சியாக இருந்தாலும் புரட்டிப் போடுவார்கள். சந்துக்கு சந்து கணக்கெடுத்து காசு கொடுக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.. இதையடுத்து பேசிய வேட்பாளர் மேனகா, "இளங்கலை ஆடை வடிவமைப்பு படித்துள்ளேன். நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை துணைச் செயலாளராக உள்ளேன்" என்றார்.. நாம் தமிழர் கட்சி பெயரை அறிவித்ததுமே, வேட்பாளர் மேனகா யார் என்ற ஆர்வம் பலதரப்பினரிடம் எழுந்தது.

யார் மேனா
ஈரோடு என்ஜிஜிஓ. காலனி பூசாரி சென்னிமலை வீதியில் வசித்து வருகிறார் மேனகா.. வாடகை வீட்டில் வசிக்கிறாராம்.. கணவர் பெயர் நவநீதன்.. மகன் பெயர் அறிவன்.. பேஷன் டிசைனிங் படிப்பில் பிஎஸ்சி முடித்துள்ள மேனகா, தொகுதி மகளிர் பாசறை இணை செயலாளராகவும் உள்ளதுடன், இப்போது மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருதாகவும் தகவல்கள் இணையத்தில் வட்டமடித்தன. இந்நிலையில், மேனகாவின் கணவர் பாஜகவின் நிர்வாகி என்றும், பாஜகவின் பணிக்குழு பொறுப்பாளராக உள்ளதாகவும் சில தகவல்கள் பரவி வருகின்றன.

நவநீதன்
ஆனால், இது ஒரு பொய்யான தகவல் என்று கூறியுள்ள மேனகாவின் கணவர் நவநீதன் விளக்கம் தந்து, ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. அதில் அவர், "ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கள் கட்சியின் பொறுப்பாளர் கார்த்தியையும் அவரது அண்ணனையும் அவர்களது சொந்த மாமாவே குத்தி கொலை செய்துள்ளார். நாங்கள் 2 நாட்களாக பிணவறைக்கு முன்பு கண்ணீருடன் காத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் என்னை பாஜக நிர்வாகி என்று வதந்திகளை பரப்பி வருகின்றனர். டிவியில் இருந்து எனக்கு அழைப்புகள் வருகின்றன. நான் இதை பார்ப்பேனா அல்லது பத்திரிகைகளுக்கு பதில் சொல்வேனா?

பிஜேபி பி டீம்
நான் பாஜக நிர்வாகியின் பள்ளியில் வேலை பார்த்தது உண்மைதான்... அந்த பள்ளியில் இருந்து ஒரு வருடத்துக்கு முன்பே நின்று இப்போது வேறொரு பள்ளியில் வேலை பார்க்கிறேன்... அந்த பள்ளி முன்னாள் காங்கிரஸ் எம்பியின் பள்ளி,.. அதனால் நான் காங்கிரஸ்காரரா ஆகிவிடுவேனா? பிழைப்புக்கு எங்கேயாவது வேலை பார்த்துதான் ஆக வேண்டும். எதற்கெடுத்தாலும் "பிஜேபி பி டீம், பிஜேபி பி டீம்" என்று எங்கள் மீது குற்றம் சுமத்தி வாக்காளர்களை குழப்பாமல் களத்தில் நேருக்கு நேர் நின்று மோத கற்றுக்கொள்ளுங்கள்'' என்று நவநீதன் விளக்கம் தந்துள்ளதாகவும் தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications