செருப்பு கூட போடல.. பிரதமர் மோடிக்கு பணிவான வணக்கம்.. யார் இந்த துளசி?.. அரங்கை அதிர வைத்த பெண்
கர்நாடக மாநிலத்தின் துளசி கௌடா பத்மஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டார்
சென்னை: 30,000 மர கன்றுகளை நட்டு பராமரித்து வரும் துளசி கௌடா என்பவர் பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார்.. யார் இந்த துளசி கௌடா?
கலை, சமூகப் பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது..
அந்த வகையில், கடந்த 2020 - 2021ம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் நேற்றும் இன்றும் வழங்கப்பட்டன...

துளசி கௌடா
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதுகளை உரியவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார். நேற்றைய தினம் வழங்கப்பட விருது விழாவில், அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தவர்தான் துளசி கௌடா.. காரணம், வெறுங்காலுடன் வந்து பத்மஸ்ரீ விருதை பெற்று கொண்டார்.. இவர் ஒரு பழங்குடி பெண்.. 72 வயதாகிறது.. இவரை "காட்டின் கலைக்களஞ்சியம்" என்று பெருமையுடன் அழைக்கிறார்கள்.. கர்நாடக மாநிலம் தாவன்கரே மாவட்டத்தை சேர்ந்தவர்.. இயற்கை ஆர்வலர்..

மரக்கன்றுகள்
வனத்துறையில் தற்காலிக தன்னார்வலாக சேர்ந்துள்ளார்.. மரக்கன்று நடுவது இவருக்கு பிடித்தமான ஒன்று. தன்னுடைய 12வது வயதிலிருந்தே மரம் நடுவதை வழக்கமாக்கி கொண்டவர்.. நட்ட மரங்களை தொடர்ந்து பராமரிக்கவும் செய்கிறார்.. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கன்றுகளை நடவு செய்திருக்கிறார்.. எத்தனை மரக்கன்றுகளை நட்டாலும், அவைகளின் சிறப்பு பற்றி துளசிக்கு நன்றாக தெரியுமாம்.

தாவரங்கள்
மூலிகை வகை தாவரங்கள் உட்பட அரிய வகை செடிகளின் பெயர்களைகூட அறிந்து வைத்திருக்கிறார்.. காடுகள் பற்றியும், காட்டின் தன்மை, விதைகளின் வீரியம் போன்றவைகள் பற்றியும் புட்டு புட்டு வைக்கிறார்.. இதையெல்லாம் கேள்விப்பட்டு, துளசியின் ஆர்வத்தையும் அறிவையும் பார்த்து சுற்றுச்சூழல் ஆய்வாளர்களே ஆச்சரியப்பட்டு போகிறார்களாம்.. 72 வயது ஆகிவிட்டதே என்று ஒதுங்கிவிடாமல் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு கொண்டேயிருக்கிறார்..

விருப்பம்
அதுமட்டுமல்ல, இந்த மரக்கன்றுகளை இளைய தலைமுறையும் நட வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்.. அதற்காகவே, இன்றைய இளைஞர்களுக்கு காடுகள், தாவரங்கள் குறித்த பாடங்களை கற்று தருகிறார் துளசி.. அந்த வகையில்தான் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறுவதற்காக இவரது பெயர் அறிவிக்கப்பட்டது. அப்போது மேடைக்கு செல்லும்முன், அங்கு உட்கார்ந்திருந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு வணக்கம் சொல்கிறார்..

செருப்பு
மேடையேறி விருதை பெறும்போதுதான் அனைவரும் ஒன்றை கவனித்தனர்... நாட்டின் உயரிய விருதை வாங்க வரும் துளிசி கௌடா, செருப்பு போடாமல் வந்திருக்கிறார்.. இவ்வளவு எளிமையா என்று அனைவருமே ஆச்சரியப்பட்டு போனார்கள்... ஏழ்மை நிலையிலும் அடுத்த தலைமுறையினருக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வழிவகைசெய்த துளசி கௌடாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications