ஆசியம்மாள் வகித்த பதவியில் சத்தியபிரியா IPS.. ஜெயலலிதா ஆட்சியில் பழிவாங்கப்பட்ட அதிகாரி.. யார் இவர்?
சென்னை: ஆசியம்மாள் வகித்த சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி பதவியில் சத்தியபிரியா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகரின் முதல் பெண் போலீஸ் கமிஷனரான சத்திய பிரியா, தமிழக அரசால் ஜெயலலிதா ஆட்சியின்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.. அவரது ஹிஸ்டரியை பார்க்கலாம்..
தமிழ்நாட்டில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் சென்னை காவல்துறை தலைமையக ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வரும் சத்தியப்பிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சத்யபிரியா கடந்த 1997ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் வேலூர் டிஎஸ்பியாக பணிக்குச் சேர்ந்தார். கடந்த 2006ஆம் ஆண்டு எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று சேலம் மற்றும் திருச்சி மாநகரங்களில் சட்டம், ஒழுங்கு துணை ஆணையர், நாமக்கல் மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட பதவிகளில் பணிபுரிந்தார். அதன்பின் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று காவலர் பயிற்சிப் பள்ளி காஞ்சிபுரம் சரகங்களில் பணிபுரிந்தார்.
சத்தியபிரியா சூடான் ஐ.நா அமைதிப் படையில் சேர விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பான ஐ.நா அமைதிப்படை தேர்வில் 2010-11ஆம் ஆண்டு அவர் தேர்ச்சியும் பெற்றார். இதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு சத்யபிரியா திருச்சி மாநகர காவல்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றியபோது, சூடானுக்கான ஐ.நா அமைதிப் படையில் சேருவதற்கு உள்துறை அமைச்சகம் சத்தியபிரியாவுக்கு அழைப்பு அனுப்பியது.

அஇதற்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்தது. ஆனால் தமிழக அரசு ஒப்புதல் கொடுக்கவில்லை. இருப்பினும் மத்திய உள்துறை அமைச்சக அழைப்பை ஏற்று சூடானுக்கான ஐ.நா அமைதிப் படையில் பணியாற்ற 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி புறப்பட்டுச் சென்றார் சத்யபிரியா. அவர் அங்கு பணி முடித்த பின்னர் 2015 மார்ச் மாதம் தமிழ்நாட்டுக்கு திரும்பினார்.
ஆனால் தமிழக அரசோ, உரிய ஒப்புதல் இல்லாமல் வெளிநாடு சென்றதாகக் கூறி சத்தியபிரியாவை சஸ்பென்ட் செய்தது. இது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் சத்தியபிரியா முறையீடு செய்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய உள்துறை அமைச்சகம், சத்தியபிரியா சஸ்பென்ட் செய்யப்பட்டது சரியான நடவடிக்கை அல்ல அவர் மீதான சஸ்பென்ட் நடவடிக்கையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.

சத்தியபிரியா, தமிழக அரசால் பழிவாங்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் தமிழக காவல்துறை பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். காவல்துறையில் சத்தியபிரியாவின் மெச்சத்தக்க பணியைப் பாராட்டி 2020ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் டி.ஐ.ஜி-யாக பணியாற்றிய சத்தியபிரியா, இந்தாண்டு ஜனவரி மாதம் ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு ஜனவரி மாதம் திருச்சி மாநகர ஆணையராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். திருச்சி மாநகர காவல்துறை உருவாக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளில் சத்தியபிரியா ஐபிஎஸ் தான் மாநகரின் முதல் பெண் காவல் ஆணையர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்நிலையில் தான் தற்போது அவர் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப் பிரிவு ஆருத்ரா நிதி மோசடி வழக்கு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்தச் சூழலில், இந்த பிரிவுக்கு ஐ.ஜியாக சத்தியபிரியா நியமிக்கப்பட்டுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications