ஸ்டாலின் சாய்ஸ்! செந்தில் பாலாஜியின் மது விலக்கு துறையை பெறும் அமைச்சர் முத்துசாமி.. யார் இவர்?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைவசம் இருந்த முத்துசாமிக்கு மதுவிலக்கு, ஆயத்தீர்வை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சார்பில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் அமைச்சரவை பொறுப்புகள் வேறு அமைச்சருக்கு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத் துறை தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முத்துசாமிக்கு மதுவிலக்கு, ஆயத்தீர்வை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முக்கியமாக அமைச்சரவை மாற்றப்பட்டாலும், பாலாஜியை, இலாகா இல்லாத மந்திரியாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மதுவிலக்கு (டாஸ்மாக்) மற்றும் மின்சாரம் என்று இரண்டு முக்கிய பொறுப்புகளை வகிப்பதால், அவர் சிறையில் இருக்கும் போது அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது இலாக்காவை கூடுதல் பொறுப்பாக ஒருவர் கவனித்தே ஆக வேண்டும் என்பதால் கண்டிப்பாக அமைச்சரவை பொறுப்பு மாற்றப்பட வேண்டும் என்று இந்த மாற்றத்தை செய்து இருக்கிறார்களாம்.
முத்துசாமிக்கு மதுவிலக்கு, ஆயத்தீர்வை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சு. முத்துசாமி ஈரோட்டை சேர்ந்த முக்கிய அரசியல்வாதி. கணிக்கப்படாத நேரத்தில் இவரை ஸ்டாலின் தேர்வு செய்துள்ளார். முன்பு அதிமுகவில் இருந்தவர் திமுகவிற்கு வந்து.. திமுக ஈரோட்டில் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
1977, 1980, 1984 தேர்தல்களில் அதிமுக சார்பாக சட்டமன்றத்திற்கு தேர்வானார். பவானி தொகுதியில் இருந்து 1991 தேர்தலில் அதிமுக சார்பாக தேர்வு செய்யப்பட்டார். எம்ஜிஆர் அமைச்சரவையில் இளம் அமைச்சராக முக்கிய பொறுப்புகளை வகித்தார்.
முக்கியமாக எட்டு ஆண்டுகள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா ஆட்சியில் 1991ல் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். முத்துசாமி 2010 ல் திமுகவில் இணைந்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த இவர் திமுகவில் வேகமாக வளர்ந்தார்.
முக்கியமாக திமுக ஈரோட்டில் வளர்வதற்கு காரணமாக இருந்தார் தற்போது, திமுகவின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் இருந்து திமுக எம்எல்ஏ ஆனார்.
இதையடுத்து ஈரோட்டில் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதன்பின் நகராட்சி தேர்தலிலும் திமுகவின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தார். கொங்கு மண்டலத்தில் ஜாதி ரீதியாக மிகவும் வலிமையான தலைவர்.கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜிக்கு இலாக்கா மட்டும் பறிக்கப்பட்ட நிலையில் அதே மண்டலத்தை சேர்ந்த இவருக்கு இலாக்கா ஒதுக்கப்பட்டு உள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மாற்றம் ஏன்? : டாஸ்மாக் இலாகாவை அவரிடமிருந்து பறிக்க வேண்டும் என சீனியர்கள் வலியுறுத்தவிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் ஸ்டாலினிடம், போக்குவரத்துத்துறை அமைச்சராக கண்ணப்பன் இருந்த போது, அவரது துறையின் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. அதை வைத்து அவரது அமைச்சர் பதவியை மாற்றினீர்கள்.
அமைச்சர் பி.டி.ஆருக்கு எதிரான ஆடியோ விவகாரத்தில் அவரது இலாகாவும் மாற்றப்பட்டது. ஆவடி நாசருக்கு எதிராக புகார்கள் வந்ததும் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினீர்கள். தற்போது, செந்தில் பாலாஜி கைதே ஆகி உள்ளார். அதனால், கட்சி, ஆட்சி இரண்டின் இமேஜும் விமர்சிக்கப்படுகிறது. இதனை சரிசெய்ய, குறைந்த பட்சம் டாஸ்மாக் அமைச்சரிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்குங்கள் என்று ஸ்டாலினிடம் வலியுறுத்தவிருக்கிறார்கள் மூத்த அமைச்சர்கள் என்று கூறப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications