"இலை"யின் "தலை".. ஸ்கோர் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி?.. ஹைலைட்டே இதுதான்.. ஆனாலும் ஒரு சிக்கல்?
எடப்பாடி பழனிசாமிக்கு பெருமளவு மா.செ.க்கள் ஆதரவு பெருகியிருப்பதாக கூறப்படுகிறது
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்த நிலையில், அதன் சலசலப்புகள் இன்னும் ஓயவில்லை.. அதேசமயம், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி உள்ளதாகவே ஒரு
எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த, ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, கட்சி தலைமை என்ற அந்த பதவியை மட்டும் யாருக்குமே விட்டுக்கொடுக்கவில்லை.
முதல்வர் & பொதுச்செயலாளர் = என்ற இந்த இரண்டு பதவியையுமே ஜெயலலிதா விடாமல் வைத்திருந்தார்.. சிறைக்கு செல்ல நேர்ந்தபோதுகூட அந்த பதவியை ஓபிஎஸ்-யிடம் ஒப்படைத்துவிட்டு சென்றாரே தவிர, திரும்பவும் தன்னிடமே அதை இறுதிவரை வைத்திருந்தார்.

காய் நகர்த்தல்
இப்படிப்பட்ட ஆளுமை நிறைந்தவரிடம் இருந்த அந்த முக்கிய பதவியைதான், தற்போது ஆளாளுக்கு ஏலம் போட ஆரம்பித்துள்ளார்கள்... இதில் பிரதானமாக காய் நகர்த்தி வருவது சசிகலா, எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் ஆவர்.. ஜெ.போலவே, தனக்கும் ஒற்றை தலைமை மூலம் இந்த பதவி கிடைக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் ஆரம்ப கால திட்டமாக இருக்கிறது.. இதற்காகவே, கொங்கு மண்டலத்தையும் தாண்டி, தன்னுடைய ஆதரவை தென்மண்டலங்களிலும் நிலைநாட்ட ஆரம்பித்தார்.. சட்டசபை தேர்தலுக்கு முன்பேயே இதற்கான காய் நகர்த்தலை எடப்பாடி மேற்கொண்டதாக தெரிகிறது.

ஓபன் டாக் இல்லை
பொதுவாக, எந்த விஷயத்தையும் ஓபனாக பேசாமலேயே, பேச வேண்டிய நேரத்தில் அமைதி காத்துவிடுவார் ஓபிஎஸ்.. எந்த விஷயத்திலும் உறுதிப்பாடு குறைவாக இருப்பவர் என்ற விமர்சனமும் இவர் மீது இருக்கிறது.. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ அப்படி இல்லை.. டாண்..டாண்.. என எதிரிகூடாரத்தையும் வார்த்தைகளாலேயே நொறுக்கி கொண்டிருக்கிறார்.. சொந்த கட்சியிலும் சசிகலா விஷயத்தில் கறார் தன்மையை கடைப்பிடித்து வருகிறார். தன்னுடைய ஆதரவாளர்கள் யாரையுமே இதுவரை சசிகலா பக்கம் அணுகவிடாமல் இறுக்கமாக தன்பிடிக்குள் வைத்திருக்கிறார்..

எடப்பாடி பழனிசாமி
முதல்வர் வேட்பாளர் பதவி முதல் எதிர்க்கட்சி தலைவர் பதவி வரை எடப்பாடி முன்பு அனைத்தையும் விட்டுவிட்டு, பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறார் ஓபிஎஸ்.. இப்படிப்பட்ட சூழலில்தான், பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்ற விவகாரம் இன்றைய தினமே வெடித்துவிட்டது.. வரும் 23ம் தேதி பொதுக் கூட்டம் கூட்டப்படுகிறது... இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர், அதிமுக அவைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்..

ஒற்றை தலைமை
இதுகுறித்து ஆலோசிப்பதற்காகவே, இன்றைய தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது... பொதுச்செயலாளர் நான்தான் என்று, சசிகலா சொல்லி கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவில் இன்று நடந்த கூட்டம் மிகுந்த பரபரப்பையும் எதிர்பார்பையும் கடந்த 2 தினங்களாகவே ஏற்படுத்தி கொண்டிருந்தது. எதிர்பார்த்தபடியே, ஒற்றை தலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது... எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும், ஓபிஎஸ் தரப்பினரும் ஆளுக்கு ஒரு பக்கம் தங்கள் ஒற்றை தலைமையை முன்வைத்து பேசினர்..

100 சதவீதம் ஆதரவா?
ஆனால், இதில், கிட்டத்தட்ட 100 சதவீத மாவட்டச் செயலாளர்களும் எடப்பாடிக்கே தங்கள் ஆதரவை தந்துவிட்டது போலவே தெரிகிறதாம்.. எடப்பாடிக்கு ஆதரவாக இன்று அனைத்து மாவட்ட செயலாளர்களும் நின்றுள்ளனர்.. முதல்வராக இருந்தார் என்ற காரணத்துக்காகவே, எடப்பாடியை பொதுச்செயலாளர் ஆக்குவதா? அப்படி என்றால் நானும்தான் முதல்வராக இருந்திருக்கிறேன் என்று ஓபிஎஸ் தன் பங்குக்கு வாதத்தை எடுத்து வைத்தாலும், அது பெருமளவு எடுபடவில்லையாம். சி.வி.சண்முகம் வழக்கம்போல் தகராறு செய்துள்ளார்.. கே.பி.முனுசாமி வழக்கம்போல் ஓபிஎஸ்ஸை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளதாக தெரிகிறது.

ஹைலைட்
போதாக்குறைக்கு மாவட்டச்செயலாளர்கள் கிட்டத்தட்ட 100 சதவீதமும் எடப்பாடி பக்கம் நின்றதால் ஓபிஎஸ் அதிர்ச்சி அடைந்து, அங்கிருந்து வெளியேறிதாகவும் கூறப்படுகிறது.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஓபிஎஸ்ஸே முன் மொழிய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுதான் இன்றைய தின ஹைலைட்டாக பேசப்படுகிறது.

மெஜாரிட்டி
மெஜாரிட்டி மாவட்ட செயலாளர்கள் எடப்பாடிக்கு ஆதரவு என்பதால் பொதுக்குழுவும் அதை நோக்கியே நகரும் என்கிறார்கள்.. இப்போது ஓபிஎஸ் அப்செட்டாகி உள்ள நிலையில், அநேகமாக, தனக்கு எதிராக பெரிய அலை அதிமுகவில் உருவாகியுள்ளதை கண்டிப்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையிடம் ஓபிஎஸ் கொண்டுச் செல்வார் என்று சலசலக்கப்படுகிறது.. எனினும், பொதுக்குழு அன்றுதான் இதற்கெல்லாம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாலும், பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் அதிமுக கூட்டம் நடந்து முடிந்துள்ளது..

டெல்லி மேலிடம்
இனியும் பேச்சுவார்த்தைகளை தலைவர்களுக்குள் நடத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.. அதனால், அடுத்தடுத்த நாட்களிலும்அதிமுகவில் பரபரப்பான நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது.. ஒருவேளை, அதிமுக மாவட்ட செயலாளர்களே எடப்பாடியை பொதுச்செயலாளராக அறிவித்தாலும், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான "டெல்லி மேலிடம்", அந்த முடிவை ஏற்றுக் கொள்ளுமா? அல்லது எடப்பாடிக்கு எதிரான அஸ்திரத்தை கையில் எடுக்குமா? தெரியவில்லை.. அடுத்து என்ன நடக்க போகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications