அதிமுக கோட்டையில் மெகா ஓட்டை.. சிறையில் இருந்தே கோவைக்கு ’மாஜி’ ஸ்கெட்ச் ! இறங்கி அடித்தது இவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கோவையில் தற்போது திமுக வெற்றி பெற்றுள்ளதோடு, அக்கட்சி வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சிறையில் இருந்தபடியே முன்னாள் அமைச்சர் ஒருவர் ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்க அதனை வாரிசு தலைவர் ஒருவர் 'சிறப்பாக' பணியாற்றி வெற்றியை திமுக வசமாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடே எதிர்பார்த்து காத்திருந்த மக்களவைத் தேர்தல் நிறைவடைந்து இருக்கிறது. 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம் என சூளுரைத்த பாஜக தற்போது கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சியமைக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

Senthil Balaji Lok Sabha Election 2024 Coimbatore DMK 2024

தமிழகத்தை பொறுத்தவரை பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அந்த கட்சியும் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது பல தொகுதிகளில் அதிமுகவின் டெபாசிட் கூட பறிபோனதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதே நேரத்தில் அதிமுக எப்போதும் வலுவாக இருந்த கோவையிலும் படுதோல்வி ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அந்த கட்சியின் வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும் கோவையில் களமிறங்க தேசிய அளவில் அந்த தொகுதி கவனம் பெற்றது. அந்த தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மேயரான கணபதி ராஜ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஆகியோரும் களமிறங்கினர்.

பரபரப்பான தேர்தல் வியூகங்களுக்கு மத்தியில் 19ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால் எந்தவிதமான போட்டியும் இல்லாமல் திமுக வேட்பாளரான கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்று இருக்கிறார். மேலும் அண்ணாமலை இரண்டாம் இடத்திலும், சிங்கை இராமச்சந்திரன் மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் இந்த தேர்தல் வெற்றிக்கு அதிமுக வாக்குகள் பாஜகவுக்கு சென்றதும், திமுக சிறப்பாக பணியாற்றியதும் காரணம் என்கின்றனர் கோவை வாசிகள்.

நாம் அங்கே இருக்கும் திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது கிராமப் பகுதிகளில் பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கிறது. இதனால் கோவையில் பலமான அதிமுகவை அண்ணாமலை பின்னுக்கு தள்ளி இருக்கிறார். அதே நேரத்தில் திமுகவின் சிறப்பான களப்பணியும் முக்கியம் என்பதை கவனிக்க வேண்டும் என்கின்றனர் திமுக நிர்வாகிகள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சில விவகாரங்கள் காரணமாக சிறைக்குச் செல்ல நேர்ந்தது. இதை அடுத்து தேர்தலில் கோவைக்கு டிஆர்பி ராஜா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

ஏற்கனவே கோஷ்டி பூசலில் இருந்த திமுக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தேர்தல் வியூகங்கள் வகுத்து சிறப்பாக திமுகவுக்கு வெற்றி தேடி தந்திருக்கிறார். டெல்டா பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் அவரது பணி சிறப்பாக இருந்தது. அதற்கு காரணம் சிறையில் இருந்தபடியே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சில திட்டங்களை வகுத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக வேட்பாளர் தேர்வில் இருந்து வியூகங்கள், "சில அரசியல் நகர்வுகள்" பிரச்சாரம், கடைசிநேர வாக்காளர்கள் 'கவனிப்பு' என பல்வேறு திட்டங்களை அவ்வப்போது தன்னை சந்திக்க வரும் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் மூலம் வகுத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை அப்படியே டிஆர்பி ராஜாவும் களத்தில் செயல்படுத்த சிறப்பான வெற்றி கிடைத்து இருக்கிறது என்கின்றனர் கோவை பகுதி திமுகவினர். மேலும் அதிமுகவின் அலட்சியமான போக்கும் கோவையில் அக்கட்சி தோல்வியை சந்திக்க காரணம் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+