மனைவியிடம் வீடியோ கால்.. அடுத்த நொடியே வழக்கறிஞர் செய்த அதிர்ச்சி சம்பவம்.. விக்கித்து போன சென்னை
சென்னை: வீடியோ கால் பேசி முடித்ததுமே, வழக்கறிஞர் செய்த காரியம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. என்ன நடந்தது?
சென்னை அரும்பாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஷ்.. 28 வயதாகிறது.. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.. இவர் நந்தினி என்பவரை தீவிரமாக காதலித்து வந்தார்.. நந்தினியும் சதீஷை உயிருக்கு உயிராக விரும்பினார். 2 ஆண்டுகளாக இருவருமே காதலித்து வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

கோயம்பேடு: கல்யாணம் ஆகி ஒருசில நாட்களிலேயே 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், தினமும் தகராறும், சண்டையும் வெடித்தது.. ஒருகட்டத்தில் வெறுப்படைந்த நந்தினி, கோயம்பேட்டில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டார்.
இதை கொஞ்சமும் எதிர்பாராத சதீஷ், மனைவிக்கு போனை போட்டு உடனே சமாதானம் செய்தார். ஆனால், நந்தினியின் கோபம் தீரவில்லை.. பிறகு மீண்டும் மீண்டும் நந்தினியை தொடர்புகொண்டு, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தபடியே இருந்தார் சதீஷ்.. அப்போதும் மனம் இளகாத நந்தினி, ஒருபோதும் குடும்பம் நடத்த வரவே முடியாது என்ற சதீஷிடம் திடமாக சொல்லிவிட்டார்.
தற்கொலை: இதனால், கடந்த சில நாட்களாகவே மனவேதனையில் இருந்த சதீஷ், நேற்று முன்தினம் மறுபடியும் மனைவிக்கு வீடியோ கால் செய்துள்ளார். தன்னுடன் குடும்பம் நடத்த வராததால், தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சொன்னார்.. பிறகு அடுத்த செகண்டே போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்த நந்தினியும், குடும்பத்தினரும் சதீஷின் வீட்டிற்கு சென்றார்கள்.. அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.. பலமுறை தட்டியும் கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர். அப்போதுதான், சதீஷ் தூக்கில் சடலமாக தொங்கியிருப்பதை கண்டு கதறினார்கள்.
அதிர்ச்சி: இதுதொடர்பாக தகவலறிந்து அரும்பாக்கம் போலீசாரும் விரைந்து வந்தனர்.. சதீஷின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்.. வழக்கறிஞர் ஒருவர் வீடியோ கால் பேசிவிட்டு, தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் சென்னையில் நீதிமன்ற தரப்பினரிடம் அதிர்ச்சியை தந்துவருகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications