பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய விஜய்; பயத்தில் நிர்வாகிகள்! 2026 பரபர!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் கட்சி கட்டாயம் போட்டிப் போட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தேசிய அரசியலை நிதிஷ்குமார் குழப்பிக் கொண்டிருக்கிறார். அதே திசையில் தமிழ்நாட்டு அரசியலில் நடிகர் விஜய் தன் பங்குக்கு ஒரு சலசலப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்.

ரஜினி அரசியல் அலை, தமிழ்நாட்டில் ஓய்ந்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது விஜய்யின் அரசில் நுழைவு ஹாட் டாப்பிக் ஆக உருவெடுத்து உள்ளது.
ஆனால், இதில் சின்ன மாற்றம் என்னவென்றால், அடிமட்டத்தில் கட்சி தொடங்குவதற்காக அடிப்படை வேலைகள் எதையுமே செய்யாமல், வானம் ஏறி வைகுந்தம் காட்டப் போகிறேன் என்று ரசிகர்களைக் குழப்பினார் ரஜினி. 'சிஸ்டம் சரி இல்லை' என்று டயலாக் பேசினார் ரஜினி.
பொதுவாக ஒரு அரசியல் கட்சியைத் தொடங்க நினைப்பவர்கள் அடிமட்ட வேலைகளை முதலில் தொடங்குவார்கள். அதன்பின் பேப்பர் ஒர்க் என்று சொல்லக் கூடிய ஆவண வேலைகளைச் செய்வார்கள். கட்சியை முறையாகப் பதிய வைப்பது. அதற்கு சட்டரீதியாக அங்கீகாரம் பெறுவது என்று இப்படி பலவற்றையும் முடித்துவிட்டு தான், மேடை போட்டு கதைவசனம் பேசுவார்கள்.

ரஜினி, கடைசிவரை இந்த வேலைகளில் ஒரு துளிகூட ஈடுபடவில்லை. வெறுமனே ரசிகர்களை அழைத்தார். பேசினார். உசுப்பேற்றினார். பின்னர் முடியாது என்று கைவிரித்து விட்டார்.
ரஜினி, கட்சித் தொடங்குவதில் எந்தளவுக்குச் சொதப்பினார் என்றால், தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி ஆகிய இருவரையும் வீட்டுக்கு அழைத்து ஆலோசித்த ரஜினி, பத்திரிகையாளர் முன்பாக அவர்களை அறிமுகம் செய்தார்.
அப்போது அவர்களை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவது எனக் குழப்பம் வந்தது. உடனே வீட்டுத் தூண் பக்கம் போய் மூவரும் கலந்தாலோசித்தார்கள். இறுதியாக ஒருங்கிணைப்பாளர்கள் எனச் சொல்லுங்கள் எனத் தமிழருவி, அர்ஜுன மூர்த்தி எடுத்து கொடுக்க, அதையே அப்படியே வந்து மீடியா முன் ஒப்பித்தார் ரஜினி.
ஒரு கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர்களை பிரஸ் மீட் முன் தேர்ந்தெடுத்தவர் உலகத்திலேயே முதல் நபர் ரஜினிதான்.

ஆனால், இந்த விசயத்தில் விஜய் அப்படி இல்லை. பக்காவான ஒரு டீமை செய்துள்ளார். அனைத்து வேலைகளும் சரியாக நடந்து வருகின்றன.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக நிர்வாகிகளை அழைத்து விஜய் பேசி இருக்கிறார். என்ன செய்வது? யாரை ஆதரிப்பது? மக்கள் மனநிலை என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுள்ளார் விஜய்.
கூட்டம் முடிவில் இறுதியாக 20 ரூபாய் பத்திரத்தில் நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு அனுப்பி உள்ளார். எந்தக் கேள்வியையும் கேட்காமல் கையெழுத்துப் போட்ட நிர்வாகிகள், வெளியே வந்த பிறகு பதறிக்கொண்டுள்ளனர்.
பலரும் பாஜகவின் 'பி' டீம் ஆக விஜய் செயல்படுவார் என்கிறார்கள். அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. அவரை அரசியல் களத்திற்கு வர அழுத்தம் தந்ததே பாஜகவினர்தான்.

சமீப காலமாக அவரது படங்களைத் தொடர்ந்து அட்டாக் செய்து அதன் மூலம் அரசியல் லாபம் சம்பாதிக்க நினைத்தவர்கள் தமிழக பாஜகவினர்தான். அந்த நெருக்கடிகளை விஜய் லேசில் மறந்துவிடமாட்டார். வேண்டுமானால் அவர்களுக்கு அரசியலுக்கு வந்த பிறகு பதிலடிக் கொடுப்பார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
எல்லோரும் அறிந்து வைத்திருந்த விஜய்க்கு புதியதாக ஜோசப் விஜய் என்று விளக்கம் அளித்தது பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜாதான். அதை மறைக்க முயற்சி செய்யாமல் விஜய், அதன்பிறகு அவரது ஜோசப் விஜய் என்று பட்டவர்த்தனமாக letterhead இல் போட ஆரம்பித்தார் விஜய். அதைவைத்து அவர் பாஜக பக்கம் தற்போதைக்கு சாய வாய்ப்பில்லை என்கிறார்கள்.
இன்னொரு விசயம் விஜய்க்கு மிகப் பெரிய தொகை பாஜக கொடுத்துள்ளதாகப் பரவும் தகவல். இதுவும் காமெடிதான். பாஜக யாருக்கும் பணம் கொடுக்கும் நிலையில் இல்லை. அவர்கள் ஈடியை காட்டி, மற்றவர்களிடம் பறிப்பதைத்தான் செய்வார்கள்.

ஒன்று டீலிங். இல்லை என்றால் ஈடி ரெய்டு. இவை இரண்டும்தான் பாஜக பழகி வைத்துள்ள ஃபார்முலா. அதற்கு மேல் பெரிய யுக்திகள் எல்லாம் பாஜகவிடம் இல்லை என விளக்கம் அளிக்கிறார் பாஜகவால் பாதிக்கப்படப் பழைய நிர்வாகி ஒருவர்.
விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்கள் அரசியல் நுட்பம் தெரிந்தவர்கள் இல்லை. ஆகவே, அவரது ரசிகர் பட்டாளம் அப்படியே ஓட்டு வங்கியாக மாறுமா? என்பதை இப்போது கணிக்க முடியாது. அதில் சிந்தலாம், சிதறலாம். அதைக் கவனமாக அப்படியே ஒரு இடத்தில் குவிப்பது என்பது விஜய்யின் திறமையைப் பொறுத்தே உள்ளது.
விஜயகாந்த் 2005 முதல் கட்சி தொடங்கி, அவர் சமீபகாலம் வரை பயணித்தார். அதன்பின்னர் அவரது மனைவி அக்கட்சியைக் கையில் எடுத்துள்ளார். வெளியிலிருந்து பார்க்க இது எளிமையாகத் தோன்றும்.
ஆனால், ஆரம்பக் காலத்தில் விஜயகாந்த் தனது கட்சியைத் தொடங்கிய போது ஏறக்குறைய சில நூறு கோடி ரூபாய் சொத்துகளை விற்றுதான் கட்சியைத் தொடங்கினார். அதன்பின்னர் அவர் தொடர்ந்து தனது பணத்தைக் கட்சிக்குள் கொட்டிக் கொண்டிருந்தார்.

அப்படி, முதலில் விஜய் பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும் பல கோடி பணத்தை அவர் கொட்ட வேண்டும். அது தான் இன்றைய தேர்தல் அரசியலாக உள்ளது. வெறுமனே பேசி, மக்களைத் திரட்டும் பெரிய பேச்சாளர் இல்லை விஜய்.
பணம் பலம் பொருந்திய திமுக, அதிமுகவை விஜய் எளிதாக வென்றுவிட முடியாது. அதற்காகத்தான் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளைக் கொடுத்துவிட்டு, 'பணம் வாங்காமல் ஓட்டுப் போடுங்கள்' என்று அறிவுரையை வழங்கினார். அதன்மூலம் பணம் அதிகம் செலவழிக்காமல், தேர்தலை எதிர்கொள்ள ரசிகர்களை அவர் தயார்படுத்த முயற்சி செய்தார்.
ஆக, விஜய்யால் பேசி அரசியலில் வெல்ல முடியாது. அது ரொம்ப ரொம்ப கஷ்டம். சினிமா உலகில் பரம சாதுவாக வலம் வரும் விஜய், நிஜத்தில் அதற்கு நேர் எதிரானவர். அதற்குப் பழைய 'கில்லி' பிரஸ் மீட் ஒன்றே போதும்.
வருஷத்திற்கு ஒரு ஆடியோ லான்ச் நடத்திய போதே கண்டெண்ட் இல்லாமல் மவுனமாகக் கடந்துபோனவர் விஜய். அதன் பின் அரசியல் நெருக்கடி வந்தபோது மேலும் மவுனத்தையே கடைப்பிடித்தார்.
அரசியல் களம் என்பது மவுன விரதம் நடத்தும் கூடம் இல்லை. அங்கே எல்லா விசயங்களையும் அலசி ஆராய்ந்து பதில் சொல்ல வேண்டும். மக்களிடம் நான் எப்படித் தனித்து உள்ளேன் என்பதை விளக்க வேண்டும். அதை எல்லாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
அடுத்து பணம். அந்த விசயத்தில் இன்கம்மிங் மட்டும்தான். அவுட் கோயிங் என்ற பழக்கமே விஜய்யிடம் கிடையாது என்கிறார் அவரிடம் பல ஆண்டுகளாகப் பணி செய்த நபர் ஒருவர்.
இந்த 2024 என்பது விஜய்யின் இலக்கு இல்லை. விஜய் 2026இல் நடக்கப் போகும் சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக நிற்கப் போகிறார். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்கிறது அவரது நெருக்கமான வட்டாரம்.
அதற்கு முன்னோட்டமாகவே அவர், இந்த மக்களவைத் தேர்தலில் களம் இறங்குகிறார். அவரது ஆதரவை ஒரு கட்சிக்கு அளிப்பதன் மூலம் அவருடைய செல்வாக்கை அவர் சோதித்துக் கொள்ளும் ஒரு சோதனைக் களமாக இதைப் பார்க்க நினைக்கிறார். அதற்காகவே கட்சி தொடங்குவதற்கான வேலைகளில் தீவிரம் காட்டத் தொடங்கி இருக்கிறார்.
சரி, இப்போது விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கான தேவை எங்கே வந்தது? இது முக்கியமான கேள்வி. அதற்குக் காரணம், உதயநிதியின் அரசியல் பிரவேசம் தான் என்கிறது விஜய்யின் நெருங்கிய வட்டம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications