பிடிஆரின் அதிரடி.. தகுதிவாய்ந்த பெண்கள் என்றால் என்ன? மாதம் ரூ.1000 யாருக்கு எல்லாம் கிடைக்கும்?
பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராமல் இருந்தது.
சென்னை: மகளிர் உரிமைத்தொகை' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதில் வெளியிட்டார்.

எதிர்பார்ப்பு
மகளிர் உரிமைத்தொகை' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த அறிவிப்பை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு உள்ளார். தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிரந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

என்ன குறிப்பிட்டுள்ளார்
பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராமல் இருந்தது. கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏழை குடும்பம்
இதற்கான லிஸ்ட் எடுக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாருக்கு எல்லாம்?
வறுமை தொகைக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த மேலும் PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. NPHH -S, NPHH - NS ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே புதுமைப்பெண் திட்டத்தில் பெண் குழந்தைகள் 1000 ரூபாய் வாங்கினாலும், அவர்களின் அம்மாக்களுக்கும் இந்த நிதி உதவி அளிக்கப்படும். அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்காது. முதியோர் உதவித்தொகை பெற்றாலும், அந்த பெண்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உதவித்தொகை
ஏற்கனவே பெண்களுக்கு அளிக்கப்படும் கட்டணமில்லா பேருந்து காரணமாக பெண்கள் இடையே திமுகவிற்கு மதிப்பு உள்ளது. தற்போது இந்த திட்டத்தையும் செயல்படுத்தி பெண்களை மொத்தமாக கவரும் விதமாக திட்டத்தை ஆரம்பிக்க அரசு முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன் திட்டத்தை கொண்டு வந்தால் அரசியல் ரீதியாகவும் பெரிய அளவில் அது பலன் அளிக்கும் என்று திமுக தரப்பு நினைக்கிறதாம்.பெரிய விழா எடுக்கப்பட்டு இந்த திட்டம் செப்டம்பரில் என்கிறார்கள். தற்போது பயனாளர்கள் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆய்வு முடிந்ததும், அதற்கான லிஸ்ட் எடுக்கப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications