Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேரா கிளம்பி வந்துட்டாங்க.. எடுத்ததுமே அசத்தும் எடப்பாடி பழனிசாமி.. அசையும் "ஓட்டுகள்"? கவனித்த பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்க துவங்கிவிட்டதாகவே தெரிகிறது.. சிறுபான்மையினர் அதிமுக பக்கம், மெல்ல வர துவங்கியிருப்பதாகவும் கருதப்படுகிறது.. என்ன நடக்கிறது தமிழக அரசியலில்?

பாஜகவுடனான கூட்டணி உறவை அதிமுக முறித்துள்ளதன் பின்னணியில், இஸ்லாமிய வாக்குகளை பெறுவதே பிரதானமாக பார்க்கப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததாலேயே, சிறுபான்மையின வாக்குகளை இழந்துவிட்டதாக, அதிமுக தலைவர்களே கடந்த 5 வருடங்களாக பகிரங்கப்படுத்தி வருகிறார்கள்.

Who will get the minority votes and Will Edapadi Palaniswami break DMKs vote bank

எனினும், பாஜகவுக்கு ஆதரவு + எதிர்ப்பு என்று இரு தரப்பு நிர்வாகிகளும் அதிமுகவில் இருந்துவருவதால்தான், கூட்டணி உறவும், தொடர்ந்து இழுபறியாகவே வந்தது. இப்போது, முழுமையாக முறிந்து அறுந்துள்ளது. மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை , ஜெயலலிதா என ஒவ்வொருவரையும் சீண்டியதால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது ஏற்பட்ட அதிருப்திகளும் அதிகமாகிவிட்டதால், கூட்டணி முடிவை இப்போதே அறிவிக்க வேண்டிய நெருக்கடியும் அதிமுகவுக்கு வந்துவிட்டது.

யாருக்கு ஓட்டுக்கள்: இதனால் சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக பக்கம் இழுப்பதுடன், திமுகவுக்கு செல்லும் சிறுபான்மையினர் வாக்குகளையும், குறிப்பிட்ட அளவு தடுத்து நிறுத்த முடியும் என்று அதிமுக கணக்கு போடுகிறது. நேற்றுமுன்தினம்கூட, இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை குறித்தும் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இதற்கெல்லாம், தற்போது ஓரளவு பலனும் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

அசாதுத்தீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி நிர்வாகிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், அதிமுக தலைமையிலான கூட்டணியில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை: அதுமட்டுமல்ல, இஸ்லாமிய மக்கள் அதிகம் உள்ள தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக தேர்தல் நேரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அப்படியானால், சிறுபான்மையினர் ஆதரவு அதிமுகவுக்கு முழுமையாக கிடைத்துவிடுமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் சொல்லும்போது, "பெரும்பான்மையான இஸ்லாமிய வாக்குகளை அவ்வளவு சுலபமாக, இந்த தேர்தலுக்குள் அதிமுகவால் பெற்றுவிட முடியாது.. இதே நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்குமானால், வரும் 2026 தேர்தலில் இதற்கான பலன்களை அறுவடை செய்யலாம்" என்கிறார்கள்.

ஜெயக்குமார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் சொல்லும்போது, "1998ல் அத்வானியை குறிவைத்து குண்டுவெடுப்பு நடந்தவுடனேயே தன்னுடைய ஆட்சியை கலைத்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியது திமுகதான்.. அதனால், இப்போது சிறுபான்மையினர் வாக்குகளுக்காக இதை செய்வதாக சொல்லக்கூடாது. எப்போதுமே சிறுபான்மையினர் எங்கள் பக்கம்தான்.. அது வரும் தேர்தலில் தெரியவரும்" என்கிறார் ஜெயக்குமார்.

ஆனால், இதற்கு முரணான கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறார் பேராசிரியர் ஜவாஹிருல்லா.. "கூட்டணி முறிவு என்பது, அண்ணாமலையை பதவி நீக்கம் செய்து, தங்களுக்கு தங்களுக்கு இணக்கமான ஒருவரை பதவியில் அமர்த்துவதற்கான அதிமுகவின் தந்திரம் இது.. பாஜகவுடனான தொடர்பை நிரந்தரமாக தண்டிக்க அதிமுகவுக்கோ, அதன் தலைமைக்கோ தைரியம் கிடையாது" என்கிறார் பேராசிரியர் ஜவாஹிருல்லா.

வாயே திறக்கல: அதுமட்டுமல்ல, கடந்த 2011லிருந்தே, இஸ்லாமியக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுவரும் நிலையில், அப்போதெல்லாம் அதிமுக வாய் திறக்கவில்லையே? இது தொடர்பாக நாங்கள் பல போராட்டங்கள் நடத்தியிருக்கிறோம். அப்போதெல்லாம் அதிமுக எதையுமே செய்யவில்லையே? திமுக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த பிறகு, தங்களால்தான் இது நடந்தது என்பதைப்போல இந்த விவகாரத்தை காட்டிக்கொள்கிறார்களே?

நிஜமாகவே அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால், முன்பே செயல்பட்டிருக்கலாமே? அவர்களது நோக்கம் திமுக கூட்டணிக்கு செல்லக்கூடிய வாக்குகளைப் பிரித்து பாஜகவுக்குதான் உதவுவதுதான்" என்கிறார் ஜவாஹிருல்லா.

க்ளைமேக்ஸ்: ஆக, சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு செல்ல போகிறது? திமுகவுக்கா? அதிமுகவுக்கா? என்ற விவாதங்கள் சோஷியல் மீடியாவில் வெடித்து கிளம்பியுள்ள நிலையில், இதன் முடிவுகள் எப்படி இருக்க போகிறதென்று தெரியவில்லை.. ஆனால், அதிமுக மறுபடியும் பாஜக கூட்டணிக்குள் செல்ல வாய்ப்பே இல்லை என்பது மட்டும் சமீபநாட்களாக தெளிவாகி கொண்டிருக்கிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+