“காலம் கனிஞ்சிருச்சு.. முதல்வர் மனசு கனியுமா?” - உதயநிதி குறித்து பேரவையில் எம்.எல்.ஏ சூசக பேச்சு!
சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று மே 7ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைய உள்ளது. இதனையொட்டி தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த முறை அமைச்சரவையில் இடம் உறுதி என உடன்பிறப்புகள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசிய தி.மு.க எம்.எல்.ஏவும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
2021 சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு அப்போதே அமைச்சர் பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கனவே வாரிசு அரசியல் என விமர்சிக்கப்படும் நிலையில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் மக்களிடையே விமர்சனங்களைச் சந்திக்க வேண்டி வரும் என உதயநிதி லிஸ்ட்டில் தவிர்க்கப்பட்டார்.

நிர்வாகிகள் குரல்
ஆனாலும், தி.மு.க நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, அரசு சார்பில் நடைபெற்ற விழாக்களில், உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களிலும் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வருகிறார்.
உதயநிதியை அமைச்சராக வேண்டும் என்று, அவரது நெருங்கிய நண்பரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி குரல் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

மே 7ல் அமைச்சரவை மாற்றம்
இந்நிலையில், வரும் மே 7ஆம் தேதி தி.மு.க அரசின் ஓராண்டு நிறைவையொட்டி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி உறுதியாகியுள்ளது. அவருக்கு வழங்கப்படவுள்ள துறை என்ன என்பது குறித்து அமைச்சர்களிடமும் பேசி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளைஞர் நலன் அல்லது உள்ளாட்சித் துறையில் ஏதேனும் ஒன்று வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

பேரவையில் எம்.எல்.ஏ
சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலா, கலை பண்பாட்டு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய பெரம்பலூர் தி.மு.க எம்.எல்.ஏ பிரபாகரன், "ஒரு கல் ஒரு கண்ணாடி வரும்போது சாதாரணமாக நினைத்தார்கள், ஆனால் இன்று ஒரு செங்கல்லை வைத்து மத்திய அரசை எதிர்த்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
அவரது உழைப்பு ஒரு தொகுதியுடன் நின்று விடக்கூடாது. காலம் கனிந்து விட்டது. அவர் உழைப்பால் தமிழ்நாடு முழுவதும் பயன்பெற வேண்டும் அதற்கு முதலமைச்சர் மனம் கனிய வேண்டும்" எனப் பேசினார்.

முதல்வர் மனம் கனியவேண்டும்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்படுவார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சட்டப்பேரவையிலேயே தி.மு.க உறுப்பினர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் பதவி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "முதலமைச்சர் பார்த்துக் கொள்வார்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
எடப்பாடிக்கு டெல்லி பயம்.. டெல்லிக்கு அமெரிக்கா பயம்.. கனிமொழி செம டைமிங் -
“நான் பேசியதாக பரப்பப்பட்ட ஆடியோ AI மூலம் பொய்யாக உருவாக்கப்பட்டது” - ஆ.ராசா விளக்கம்! -
திருமாவளவனிடம் போனில் பேசிய ஸ்டாலின்.. காட்டுமன்னார்கோவில் வேட்பாளர் மாற்றத்துக்குப் பின்னணி என்ன? -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
“படத்தில் விஜயகாந்துக்கு வாக்கு கேட்டேன்.. இன்று அவரது மகனுக்கு ஓட்டு கேட்கிறேன்" - ஸ்டாலின் பேச்சு -
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை நெருங்கி வந்த போலீசார்.. திடீரென ரெய்டு! ராமநாதபுரத்தில் சலசலப்பு -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
2 முறை எம்எல்ஏவா இருந்தாச்சி.. இனி தம்பிக்கு விட்டு கொடு! திமுக வேட்பாளரிடம் கெஞ்சும் அதிமுக வேட்பாளர்! -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை











Click it and Unblock the Notifications