ஆதார் கார்டை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது.. வந்தது முக்கிய உத்தரவு.. அரசு ஊழியர்கள் கவனம்
சென்னை: ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை பென்சன் தொகை பெறுவதற்கு கணக்கில் கொள்ள வேண்டியது என்று குஜராத் ஹைகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
பள்ளிக் கல்விச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியை ஓய்வூதியத் தொகையை நிர்ணயம் செய்ய பயன்படுத்த முடியும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆதார் அட்டையில் உள்ள தேதியில் இருந்து இந்த சான்றிதழ் தேதி வேறுபட்டாலும் கூட அதை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத் அரசு ஊழியராக பணிபுரிந்த ஒரு மனுதாரர், ஓய்வூதியம் செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை பென்சன் தொகை பெறுவதற்கு கணக்கில் கொள்ள வேண்டியது என்று குஜராத் ஹைகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
இபிஎப்ஓ: ஏற்கனவே ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று இபிஎப்ஓ அறிவித்துள்ளது. இந்த நிலையில் இனி பிறப்பு ஆவணமாக எதை பயன்படுத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ். அதன்படி, இன்று முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. இன்று முதல் பல்வேறு சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் முதன்மை ஆவணமாகச் செயல்படும்.
ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.
மேலும், திருமணப் பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும். இந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் மேற்கூறிய பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த ,மசோதா நிறைவேறி வெற்றிபெற்ற நிலையில், தற்போது சட்டம் அமலுக்கு வருகிறது.
பிறப்பு சான்றிதழ்: அதாவது வெறும் ஆவணம் என்பது மாறி பிறப்பு சான்றிதழ் உண்மையான அடையாள ஆவணமாக மாறி உள்ளது.
நாம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கும் தொகையில் ,குறிப்பிட்ட தொகை நமது பிஎப் கணக்கிற்கு செல்லும். நிறுவனத்திடம் இருந்தும், நம்மிடம் இருந்தும் குறிப்பிட்ட தொகை இப்படி மாதம் மாதம் நமது பிஎப் கணக்கில் சேரும்.
இபிஎப்ஓ பக்கத்தில் இருக்கும் பாஸ்புக் தளத்தில் நம்முடைய பிஎப் கணக்கை குறிப்பிட்டு நாம் நம்முடைய தொகை இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். இந்த பிஎப் கணக்கில் சேரும் பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும்.
பிஎப்: தேவைப்படும் பட்சத்தில் இடைப்பட்ட நேரத்தில் கூட இந்த பிஎப் தொகையை எடுத்துக்கொள்ள முடியும். அவசர தேவைகள், மருத்துவ தேவைகளுக்கு இந்த பணத்தை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும். பிஎப் போக ரிட்டயர்மெண்ட் தொகையும் இதேபோல் வழங்கப்படும். ஆனால் அதை குறிப்பிட்ட வயதிற்கே பின்பே எடுக்க முடியும்.
இந்த நிலையில்தான் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்புகளை மத்திய அரசு ஏற்படுத்திக்கொடுத்து உள்ளது. அதன்படி அதிக ஓய்வூதியத்தைப் பெற 1995-ன் (EPS-1995) கீழ், தகுதியான ஓய்வூதியம் பெறுவோர் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications