திமுகவை சீண்டிய ரசிகர்கள்.. தேவையில்லாத "சர்ச்சை" டிரெண்ட்.. அப்செட் ஆன அஜித்? என்ன நடந்தது?
சென்னை: அரசியலில் இருந்து ஒதுங்கியே இருக்கும் நடிகர் அஜித்தை சீண்டும் வகையில் அவரின் ரசிகர்களே டிரெண்டு ஒன்றை செய்து வருகின்றனர்.
நடிகர் அஜித் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு பைக் ரேஸ், பைக் பயணம், டிரோன் தயாரிப்பு போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகிறார். சினிமாவில் நடிப்பதை விட பைக் பயணத்தில் இவர் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

இப்படி பல விஷயங்களில் இவர் ஆர்வம் காட்டி இருந்தாலும் கூட அரசியலில் எப்போதும் அஜித் ஆர்வம் காட்டியதே இல்லை. அரசியல் ரீதியாக அவர் ஒதுங்கியே இருந்துள்ளார். சிலர் இவரை அரசியலுக்கு இழுக்க பார்த்தும் கூட அஜித் அதற்கெல்லாம் "தலயை" அசைத்ததே இல்லை. அந்த அளவிற்கு அஜித்துக்கும் அரசியலுக்கும் தூரம்.
பரபரப்பு பேச்சு: கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு, 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு அஜித் பேசும்போது, இதுபோன்ற விழாக்களில் எங்களை கட்டாயப்படுத்தி, மிரட்டி வரவழைக்கின்றனர் என்றார். அப்போது அஜித்திற்கு அதிமுக சப்போர்ட் செய்தது. இந்த சர்ச்சை ஓயவே பல வருடங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அஜித் உடன் அன்பாகவே இருந்திருக்கிறார். அதே சமயம் அஜித் அரசியலில் இருந்து விலகி இருந்தார். தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் அரசியலில் ஈடுபடுகிறார் என்று தெரிந்ததும் அதை கலைத்தார். பாஜக தன்னை கட்சிக்குள் இழுக்க பார்க்கிறது என்று தெரிந்ததும், வெளிப்படையாக் அறிக்கை விட்டு, தன்னை விலகிக் கொண்டார்.
பாஜக சர்ச்சை: உதாரணமாக அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்த போது, தமிழிசை அளித்த பேட்டியில், சினிமா கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித்தான். அவர் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால்தான் பாஜகவில் இணைந்துள்ளனர் என்றார் தமிழிசை.
இதற்கு அஜித் அளித்த மறுப்பில், நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த, திரை படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம், சிலவருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான், என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ எந்த விதமான அரசியல் சாயம் வந்து விட கூடாது- என்று நான் சிந்தித்ததின் வீரியம் முடிவு அது என்று பாஜகவினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினரை சாட்டையால் அடித்தது போல் ஓர் அறிக்கையை அஜித் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

சர்ச்சை: இப்படி அரசியலில் இருந்து ஒதுங்கியே இருக்கும் அஜித்தை சீண்டும் வகையில் அவரின் ரசிகர்களே டிரெண்டு ஒன்றை செய்து வருகின்றனர். ஆளும் திமுகவை விமர்சனம் செய்து #ஐயோஅம்மா_கொல்றாங்க என்ற டேக்கை இவர்கள் டிரெண்டு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அமைச்சர் துரைமுருகன் சினிமா பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொன்னார். அப்போது நடிகர் அஜித் பற்றிய கேள்விக்கு, அஜித்தா யார் அது என்று கிண்டலாக கேட்டார். இதனால் கோபம் அடைந்த அஜித் ரசிகர்கள் இந்த டிரெண்டை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆளும் திமுக அரசை சர்ச்சைக்குரிய வகையில் கீழ்த்தரமாக விமர்சனம் செய்யும் வகையில் சில போஸ்டுகளும் இதில் போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் அஜித் இந்த டிரெண்ட் பற்றி தாமதமாகவே அறிந்து கொண்டார். இதனால் அவர் கடுமையாக அப்செட் ஆகி உள்ளார். தேவையில்லாத டிரெண்ட் இது என்பதால் அவர் அப்செட் ஆகி உள்ளதாக நம்மிடம் தெரிவித்துள்ளனர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்











Click it and Unblock the Notifications