‛‛பிரதமர் மோடியை எதிர்ப்பது ஏன்?’’.. விசிக மேடையில் தழுதழுத்த நடிகர் பிரகாஷ் ராஜ்! சோக பின்னணி
சென்னை: பிரதமர் மோடியை நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் பிரதமர் மோடியை எதிர்ப்பது ஏன்? என்பது பற்றியும், அதன் பின்னணியில் தோழியை இழந்த சோக கதையையும் நடிகர் பிரகாஷ் ராஜ் விசிக விருது வழங்கும் விழாவில் தழுதழுத்த குரலில் கூறியுள்ளார்.
தொல் திருமாவளவனின்விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் விசிக விருதுகள் வழங்கப்பட்டு வருகிறத. 2024ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது.

இந்த விழாவில் நடிகர் பிரகாஷ்ராஜ்-க்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. அதேபோல் திராவிடர் கழக பிரச்சார செயலாளரும், வழக்கறிஞருமான அருள்மொழிக்கு பெரியார் ஒளி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்பட்டது.
மேலும் இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்துக்கு காமராசர் கதிர், பேராசிரியர் ராஜ் கௌதமனுக்கு அயோத்திதாசர் ஆதவன், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.என். சிக்கந்தருக்கு காயிதேமில்லத் பிறை, கல்வெட்டியலறிஞர் எ.சுப்பராயலுவுக்கு செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசினார்.
சமீபகாலமாக நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் பிரதமர் மோடியை எதிர்ப்பது ஏன்? என்பது பற்றி பிரகாஷ் ராஜ் மேடையில் தழுதழுத்த குரலில் கூறினார். இதுதொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியதாவது: நான் திருமாவளவன் போன்று நீண்ட நெடிய அரசியல் பயணம் மற்றுமு் , கொள்கை போராட்டம் கொண்டவன் இல்லை.
ஆனாலும் ஏன் அரசியல் பேசுகிறீர்கள் என பலர் கேட்கின்றனர். உடலில் காயமானால் நாம் சும்மா இருந்தாலே வலி குறைந்து காயம் காணாமல் போய்விடும். ஆனால் சமுதாயம் மற்றும் நாடு காயமாகும்போது பேசாமல் இருந்தால் அந்த காயம் என்பது அதிகமாகும். நான் கலைஞன் தான். ஆனால் நான். எனது திறமையால் கலைஞன் ஆகவில்லை. என்னை விட திறமைசாலிகள் அதிகம் உள்ளனர். இன்று நான் ஒரு மேடையில் நிற்கிறேன் என்றால் அது மக்களோடு அன்பு, மக்கள் தந்த நம்பிக்கை தான். இதனால் என்னை மேடையேற்றிய மக்களுக்காக, சமுதாயத்தில் பிரச்சனை ஏற்படும்போது நிற்க வேண்டும். கலைஞன் கோழையாகிவிட்டால் சமுதாயம் கோழையாகவிடும். நான் செய்வது ஒன்றும் பெரிய வேலை அல்ல. அது கடமை, எனது மனசாட்சி,
கவுரி லங்கேஷ், மார்க்ஸ், அம்பேத்கர், காந்தி, பாரதி போன்ற பலரது சிந்தனைகளை படித்து எனக்கு புரிதல் வந்துள்ளது. அந்த புரிதல் இருக்கும்போது கண்ணெதிரே நடக்கும் விரும்பதகாத விஷயங்கள் தெரிகிறது. 10 ஆண்டுகளாக தான் நான் அரசியல் பேசி கொண்டிருக்கிறேன். இந்த மன்னரை (பிரதமர் மோடியை மறைமுகமாக குறிப்பிடுகிறார்) எதிர்த்து பேசி வருகிறேன். இப்போது எல்லாம் மன்னர் என்று சொல்ல முடியாது. மன்னிக்க வேண்டும். அவர் தான் தெய்வ குழந்தையாகிவிட்டாரா?.
நாட்டுக்கு அவரால் துன்பம் ஏற்பட்டால் நம்மால் அவரை திட்ட முடியாது. மனிதனா நீ என திட்ட முடியாது. ஏனென்றால் தெய்வம் சோதிக்குது என்று தான் சொல்ல வேண்டும். உண்மையில் பத்திரிகையாளர் கவுரி லங்கேசின் அப்பா லங்கேஷ் தான் எனது ஆசான். அவர் பத்திரிகை நடத்தினார். மாபெரும் சிந்தனையாளர். அவர் தான் என்னை செதுக்கினார். விளம்பரம் வாங்காமல் பத்திரிகை நடத்தினார். பத்திரிகை மூலம் கலைஞர்கள், இலக்கிய சிந்தனையாளர்களுக்கு அவர் மேடை வழங்கினார். அவர் நிரந்தரமாக ஒரு விஷயத்தை சொல்வார். பத்திரிகை, குடிமகன், கலைஞன் நிரந்தரமான எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்று பேசுவார். நிரந்தர எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்பதை சொல்லி கொடுத்தவர் அவர் தான். மேலும் நண்பரே ஆளும் கட்சியாக இருந்தால் அவருக்கு எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்பார்.
லங்கேஷின் மகள் கவுரி லங்கேஷ். அவள் ஒரு தொடுவானம். நெருங்கிய தோழி. பத்திரிகையாளரான கவுரி லங்கேசை சுட்டு கொன்றுவிட்டனர். தபோல்கர், கலபுர்கி உள்ளிட்டவர்கள் வரிசையில் கவுரி லங்கேசை பேசினாலும் கூட என் வீட்டு வாசல் (கவுரி லங்கேஷ் வீட்டை தன் வீடு என்று கூறுகிறார்) முன்பு கொலை நடந்தது. மரணித்த கவுரி லங்கேசை பார்த்தபோது நீயும் சும்மா இருப்பியா பிரகாஷ் ராஜ் என கேட்பது போல் இருந்தது. இதனால் தான் அவரை புதைக்கும்போது கவுரி லங்கேஷ் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டுள்ளார் என கூறினேன். இந்த பாசிசம், சனாதன பயங்கரவாதம், ஒரு குரலை அடக்கினோம் என நினைக்கிறது. ஆனால் அதைவிட ஆழமான குரல் எழும்பும் என்பது உண்மையாகி உள்ளது'' என்றார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் குறிப்பிட்ட கவுரி லங்கேஷ் பெங்களூரை சேர்ந்தவர். பெண் பத்திரிகையாளரான இவர் பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தார். கடந்த 2017ல் கவுரி லங்கேஷ் தனது வீட்டு அருகே மர்மநபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். கவுரி லங்கேஷ் இந்துத்துவா எதிர்பாராளராகவும், தீவிர இடதுசாரி பற்றாளராகவும் அறியப்பட்டவர். இந்துத்துவாவுக்கு எதிராக தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார்.
மேலும் இந்துத்துவா எதிர்பாளாராக அறியப்படும் நரேந்திர தபோல்கர், கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்த் பன்சாரே எழுத்தாளர் எம்எம் கல்புர்கி வரிசையில் கவுரி லங்கேஷ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரை சுட்டுக்கொன்ற நபர்கள் இந்துத்துவா அமைப்புடன் தொடர்பு கொண்டவர். ஆபரேஷன் அம்மா என்ற பெயரில் கவுரி லங்கேசை அந்த கும்பல் தீர்த்து கட்டியது. அன்று முதல் நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் விசிக மேடையில் பிரகாஷ் ராஜ் அதனை வெளியபப்டுத்தி உள்ளார்.
-
திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications